அகத்தியர் ஞானம் 4
தேவிஎனும் பூரணியே மனத்தில்
தோன்றி
சென்மித்தார்
மனுஷரெல்லாம் சீவாத்மாவாய்
காவியமா
யஞ்சுபஞ்ச கர்த்தா நாமம்
கருத்தறியா
மூடருக்கு அறிவிப்பேனான்
தாவித்தா
ரோருருவஞ் சொல்லாரப்பா
தாக்ஷியில்லை
சொல்லுகுறேன் சிவத்தின் கூறு
மேவிப்பார்
ஓம் நங்மங்சிங் வங்யங் என்று
மெய்யாகச்
சிவயநம அங்கென்று பாரே
(1)
Translation:
Devi, the Poorani,
appeared in the mind
People were born
and Jivatma
As Kaviya the five
pancha kartha- their name
I will reveal to
the ignoramus who do not know the idea
They established,
they do not indicate a particular form
There is nothing
to hide, I will tell you about Sivam
You see it as Om
nang mang sing vang yang
See it truly as
sivayanama there.
Commentary:
இறைவன்
எவ்வாறு இவ்வுலகமாகத் தோன்றினார் என்று இப்பாடல் தொகுப்பில் விளக்குகிறார்
அகத்தியர். இதன் முதல் படியாக தேவி மனதில்
தோன்றினாள். இங்கு மனம் என்பது பிரபஞ்ச
மனத்தைக் குறிக்கும். அதன் பின் உயிர்கள்
ஜீவாத்மாக்களாகத் தோன்றின. அவர்களது
உடலில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்ச கர்த்தாக்கள்
அல்லது ஐந்து செயல்புரிபவர்கள் தோன்றினர் என்கிறார் அகத்தியர். இங்கு இவ்வாறு குறிப்பிடப்படும் தெய்வங்கள் ஒரு
உருவைக் கொண்டவையல்ல என்றும் அவர் கூறுகிறார். அதாவது இவர்கள் ஐவரும் நமது உடலில்
உள்ள மூலாதாரம்/சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை
சக்கரங்களையும் விழிப்பு, கனவு, ஆழுறக்கம், துரியம், துரியாதீதம் என்ற உணர்வு
நிலைகளையும் குறிக்கின்றனர். இந்த பஞ்சகர்த்தாக்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம் மற்றும் திரோதாயி
என்ற ஐந்து மலங்கள் உள்ள நிலைகளையும் குறிக்கின்றனர். உதாரணமாக பிரம்மா ஐந்து
மலங்களையும், விஷ்ணு நான்கு மலங்களையும், ருத்திரன் மூன்று மலங்களையும், மகேஸ்வரன்
ஆணவம் கர்மம் என்ற இரண்டு மலங்களையும் சதாசிவன் ஆணவம் என்ற மலத்தையும்
கொண்டிருக்கிறார்கள்.
இங்கு
குறிப்பிடப்படும் பஞ்ச கர்த்தாக்கள், மனிதனின் சூட்சும சரீரத்தைக் குறிக்கின்றனர். இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கிய யோக
வழிமுறையைக் குறிப்பிடுகிறார். தமிழ்
சித்தர்களின் யோகம் வாசி யோகம் எனப்படுகிறது.
வாசி என்ற சொல் வா+சி என்று பிரிந்து வா எனப்படும் பிரபஞ்ச பிராணன்
உடலினுள் உள்ள குண்டலினி அக்னியுடன் கலப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு உடலுள் வரும் பிராணன் ஒவ்வொரு
சக்கரத்தின் ஊடும் பயணித்து மூலாதாரத்தை அடைந்து அங்குள்ள குண்டலினி அக்னியை
எழுப்புகிறது. இந்த சக்கரங்களை அகத்தியர்
நங், மங், சிங், வங், மங் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு உடலினுள் வரும் பிராணன் குண்டலினியை
எழுப்பி உடலில் உள்ள பிராணனை பிரபஞ்ச பிராணனுடன் சேர்க்கின்றது. இதுவே சிவ யோகம்
எனப்படுகிறது. இவ்வாறு உடலினுள் இடா நாடியின் மூலம் வரும் பிராணன் பிங்கலை
நாடியின் மூலம் உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே தமிழ் சித்தர்களின் வாசி-சிவ யோகம்.
சிவ யோகத்தை அகத்தியர் நமசிவய என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு
உலகமாக இருக்கும் சிவத்தின் கூறை ஓம்நமசிவய என்ற மந்திரமாகக் காணுமாறு அகத்தியர்
கூறுகிறார். அவர் இந்த மந்திரத்தை ஓங்
நங்மங்சிங்வங்யங் என்று கூறுகிறார்.
ஓம்
என்னும் எழுத்தின் விரிவே நமசிவய என்னும் ஐந்தெழுத்தாகும். ஓம்
என்பது அ, உ, ம, பிந்து, நாதம் என்று ஐந்து பகுதிகளைக் கொண்டது. சிவனின் வாமதேவ (வடக்கு) முகத்திலிருந்து ‘அ’காரமும், சத்யோஜாத (மேற்கு) முகத்திலிருந்து ‘உ’காரமும், அகோர (தெற்கு) முகத்திலிருந்து ‘ம’காரமும், தத்புருஷ (கிழக்கு)
முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும்
நாதத்தின் தொடக்கப்புள்ளியும், ஈசான (மேல் நோக்கியது)
முகத்திலிருந்து நாதமாகிய முழுமையான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ‘ஓம்’ என்ற பிரணவத்தோடு சிவனை நமஸ்கரிக்கிறேன் என்று
பொருள்படும் நமசிவய என்ற தொடர் சேர்த்து ஆறெழுத்து மந்திரம் உருவானது. ஓம்நமசிவய
என்ற இந்த ஆறெழுத்து மந்திரமே செயல்பாடுடைய உலகமாகக் காட்சியளிக்கிறது. உதாரணமாக, நங் என்பது பூமியையும், மங் என்பது
நீரையும், சிங் என்பது தீயையும், வங் என்பது காற்றையும் யங் என்பது ஆகாயத்தையும்
குறிக்கின்றன. இந்த எழுத்துக்கள்
ஒம்காரத்துடன் சேர்ந்து செயல்பாடுடைய பஞ்சபூதங்களாயின.
ஐம்பூதங்களின்
தன்மைகளான ஐந்து தன்மாத்திரைகளும் நமசிவய என்ற ஐந்தெழுத்திலிருந்து தோன்றின. ந என்பது தொடுவுணர்ச்சியையும் ம என்பது
சுவையையும் சி என்பது உருவத்தையும் வ என்பது நாற்றத்தையும் ய என்பது சப்தத்தையும்
குறிக்கும். ஜீவாத்மா இருக்கும் உடலும்
நமசிவய என்ற ஐந்தெழுத்திலிருந்து பிறந்ததுதான்.
சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் பாடல் 96ல்
நவ்விரண்டு
காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு
தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு
கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து
நின்றதே சிவாயம் அஞ்செழுத்துளே
என்று
பாடுகிறார்.
குண்டலினி
சக்தியின் மையங்களான சக்கரங்களும் நமசிவய மந்திரத்தின் தலங்களாகும். ந என்பது
மூலாதாரத்தையும், ம என்பது சுவாதிஷ்டானத்தையும், ம என்பது மணிபூரத்தையும், சி
என்பது அனாஹதத்தையும் ய என்பது விசுத்தியையும் குறிக்கும்.
இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் ஐந்து முகங்களான
தத்புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துமுகங்களுக்கும் 5 X5= 25 வகை மந்திரங்களாக இருக்கின்றன என்று
அகத்தியர் தனது திருமந்திர விளக்கம் என்னும் நூலில் கூறுகிறார்.
ஸ்ரீ ஜானகிராம் என்பவர் தினத்தந்தியில் (பிப்ரவரி 28, 2014) தந்திருந்த விவரங்களிலிருந்து:
சிவமகா புராணத்தின் வாயு ஸம்ஹிதையில் உள்ள உத்தர
பாகத்தின் ஆரம்பத்தில், ஐந்து அட்சரங்களுக்கும் உரிய
நிறங்களும், அவற்றிற்குரிய ரிஷிகளும், சிவ
பரம்பொருளின் எந்தெந்த முகத்திற்கு எந்தெந்த அட்சரங்கள் என்றும் தெளிவாக
விளக்கப்பட்டிருக்கின்றன. ‘ந’ என்ற
எழுத்து, கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது. இதன் நிறம்
மஞ்சள். ரிஷி, கவுதம மகரிஷி. ‘ம’
என்ற எழுத்து தெற்கு நோக்கிய முகத்திற்குரியது. இதன் நிறம் கருப்பு.
ரிஷி, அத்திரி மகரிஷி ஆவார். ‘சி’
என்ற எழுத்து மேற்கு நோக்கிய முகத்திற்கு உரியதாகும். இது
புகையின் நிறம் உடையது. ரிஷி, விஸ்வாமித்திர
மகரிஷி ஆவார். ‘வ’ என்ற எழுத்து வடக்கு
நோக்கிய முகத்திற்கு உரியதாகும். இது பொன்னிறமான நிறத்தையுடையது. இதன் ரிஷி,
ஆங்கீரஸ மகரிஷியாவார். ‘ய’ என்ற ஐந்தாவது எழுத்து மேல் நோக்கிய திருமுகத்திற்கு உடையதாகும். இது
சிவந்த நிறம் கொண்டது. இதனுடைய ரிஷி, பரத்வாஜ மகரிஷியாவார்.
ந-ம-சி-வ-ய என்கிற மந்திரம் ஸ்தூல பஞ்சாக்ஷரம்
எனப்படும்.
சி-வ-ய-ந-ம என்கிற மந்திரம் சூக்ஷ்ம
பஞ்சாக்ஷரம் எனப்படும்.
சி-வ-ய-வ-சி என்கிற மந்திரம் அதிசூக்ஷ்ம
பஞ்சாக்ஷரம் எனப்படும்.
சி-வ என்கிற மந்திரம் காரண பஞ்சாக்ஷரம்
எனப்படும்.
சி என்கிற மந்திரம் மகா காரண பஞ்சாக்ஷரம்
எனப்படும்.
முதல் மூன்றையும் பற்றித் திருமூலர்
ஒன்பதாம் தந்திரத்தில் மந்திரம் 2698 லிருந்து 2721 வரை விளக்கமாகக் கூறியுள்ளார்
(முனைவர் டி.என்.கணபதி அம்மன் தரிசனம் அக்டோபர், நவம்பர்,2012).
இவ்வாறு ஸ்தூல பஞ்சாட்சரம் என்னும் ஓம்நமசிவய
என்பது சிங்வங்யங்நங்மங்அங் என்று உள்ளது என்கிறார் அகத்தியர். உலகம் படைக்கப்படும்போது உள்ள ஓம் நமசிவய என்ற
ரூபம் லயத்தின்போது சிவயநம அங் என்று உள்ளது.
Agatthiyar is
beginning to explain how the Divine manifested as the world. The first step in this Devi, the fully
complete, appeared in manas. Agatthiyar
refers to the universal mind here. Then
people appeared as Jivatma. In their
body the five divinities or actors, the pancha kartha appeared. They are Brahma, Vishnu, Rudra, Maheswara and
Sadasiva. They are present at
muladhara/svadishtana, manipuraka, anahata, vishuddhi and ajna. They represent different states of
consciousness, from wakeful state at ajna to turiyathira at muladhara. They also represent increasing number of mala
or innate impurities. Brahma has all the
five mala, anava, karma, maya, mayiya and tirodhayi. Vishnu has four, no tirodhayi, Rudra has the
three- anava karma, maya, Maheswara two and Sadasiva only the ananva. They are called five actors as they bring
about various phenomena. Agatthiyar is
saying that when he mentions the pancha kartha it is not a form that he is
referring to but to the various principles they represent. He begins with explaining about sivam.
Agatthiyar is explaining
an important concept here. We have to understand a bit about Tamil Siddhas’
Vasi yogam here. The term va-si
represents va- the air principle reaching si or the fire principle. So through pranayama the life force of prana
is brought into the body. The bhija
akshara vang, nang etc represent the entrance of the universal life force. The same letters when recited as va, na etc
represent stabilizing of this energy in the body. The energy enters through the ida nadi and it
is stabilized by the pingala nadi. This
is followed by ascent of the fire of kundalini through the chakras. This is represented by the letters na, ma, si
etc, Thus, vasi yoga becomes siva yoga
or merging of the fire of kundalini with the universal life force, prapancha
prana.
The mantra, namasivaya, is an expansion of omkara. The mantra om, in one of its manifested
states, contains the five parts, a, u, m, bindhu and nadha. The akara emerged from Siva’s Vamadeva face
(north), ukara from the sathyojatha (west), Makara from Agora (south), bindhu
from Thathpurusha (east) and nadha from Isana (the face looking up). Thus, the
mantra om namasivaya which is called shatakshara mantra occurs which means “Om,
the salute the siva”. This universe is a
manifested expression of the mantra om namasivaya. For example na represents earth, ma- water,
si-fire, va- air and ya-the space. Thus,
the five elements are represented by namasivaya. Na represents the sensation of fragrance,
ma-the taste, si the form, va the touch and ya the sound. Thus they represent the tanmatra or subtle
qualities of the elements. Our body also
emerged from namasivaya. Sivavakiyar, in
his Sivavakiyam verse 96 says,
The na as the two legs, ma as the stomach
Si as the two shoulders, va as the mouth,
Ya as the two eyes, in this fashion
“It” remained like the superb entity within the five
letters of sivayam.
Thus the five letters represent the human body also. Agatthiyar, in his Tirumandira vilakkam, says
that these five letters as 5X5= 25 remain as the twenty five forms of the
namasivaya mantra.
Sri Janakiram, in his
article in Dinathandhi (Feb, 28, 2014) mentions that Siva Mahapurana lists the
colors and the rishis associated with namasivaya. The color of na-yellow, rishi-Gaudhama, ma-
black, rishi-Atri, si- smoky, rishi- Viswamitra, va-golden, Rishi- Angiras, ya-
red, Rishi- Bharadvaja.
Thirumular in his
Tirumandiram ninth tantra mentions that
Na ma si va ya is called
sthula panchaksharam
Sivayanama is called sukshma
panchaksharam
Sivayavasi
is called athi
sukshma panchakshara
Siva- karana panchaksharam
Si- maha karana panchaksharam
Namasivaya represents manifestion while sivayanama
represents dissolution.
Verse 2
பாருமே ஓரெழுத்துச் சொல்லக்
கேளு
பண்பாக ஓங்கென்று ஒட்டிப்
பாரு
சீருடனே தாயங்கே காணலாகும்
சொல் பிரிய சீஷர்களே சொல்லக்
கேளு
தேருமே மனத்தாலே
எட்டெழுத்தைக் கேளு
தேறினால் ஞானியவன்
கருத்தினாலே
மாறுகின்ற சோதியை நீ
கண்டுகொண்டு
மனமான சஞ்சலத்தைக்
கடந்திடாயே (2)
Translation:
See! Now listen
about the single letter.
See it as ong (Om)
The mother will be seen there in her glory
Disciples (who like words, recite dear disciples, how
word splits) listen the utterance
Learn it through the manas, listen about the eight
letters
If one becomes an expert, he will become a jnani in
thought
Seeing the effulgence that changes (you)
Cross the mind, the wavering (2)
Commentary:
Agatthiyar is talking about the single letter, the omkara
that transforms into the eight letters, either a u m namasivaya or aim kleem
sau namasivaya. This eight letter mantra indicates the state of duality, that
of Siva and Sakthi while om indicates the state of singularity. Agatthiyar says that the mother will be seen
there. The mother refers to Devi,
Shakti. He uses an interesting
expression in the next line “sol piriya seesharkale” This means “for the words to split
(sol+piriya), disciples who like (priyam) words, recite (sol) dear disciples
(piriya seesharkale)” All the three
interpretations seem applicable here.
When one contemplates on the eight letters one will realize that it the
Divine, the effulgence. Then one becomes
a wise soul, a jnana. Experience of this
effulgence and its contemplation will help one to stop the wavering of the
mind. Agatthiyar calls the mind itself
as wavering. Wavering is movement. Movement is Sakthi’s action, expression. Thus, by knowing the true nature of wavering
one can save oneself from being buffeted by it.
இப்பாடலில் அகத்தியர் ஓம்
என்னும் பிரணவத்தையும் அது எட்டெழுத்து மந்திரமாக விரிவதையும் அதன் தன்மையையும்
விளக்குகிறார். ஓம் என்ற ஓரெழுத்து ஒருமை
நிலையைக் குறிக்கிறது. வெளிப்பாட்டின்
முதல் படி இது. இதனை அடுத்த படி சிவ
சக்திகளாக மாறும் நிலை. அதைக் குறிப்பது
எட்டெழுத்து மந்திரம். அதை அ உ ம நமசிவய
என்றோ ஐம், க்லீம், சௌ நமசிவய என்றோ கருதலாம். இங்கு ஒருவர் தாயைக் காணலாம் அதாவது சக்தி வெளிப்படுவதைக் காணலாம் என்கிறார்
அகத்தியர். இந்த வெளிப்பாட்டுக் கிரமத்தை, எட்டெழுத்தை ஒரு ஞானி தனது மனத்தால் நோக்கினால், எண்ணிப் பார்த்தால் அது ஜோதி நிலையில் இருக்கும் பரம்பொருளின்
மாறுபாடே என்பதை அறிவார். அவ்வாறு அறிவதன்
மூலம் அவர் சஞ்சலம் என்ற மனத்தைக் கடக்கிறார் என்கிறார் அகத்தியர். மனம் சஞ்சலமடையும் என்று கூறுவது வழக்கம். சஞ்சலமே மனம் என்று அகத்தியர் இங்கு
கூறுகிறார். சஞ்சலம் என்பது அசைவு, அசைவு சக்தி நிலை. இவ்வாறு சஞ்சலம் என்பதன் உண்மையை அறிந்தால்
ஒருவர் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கலாம் என்பது அகத்தியரின் கருத்து.
Verse 3
கடந்திட்ட மனமே கேளு காசினி
மன்னர் கோடி
இடந்திட்ட இந்திரர் கோடி
எண்ணவு முடியா தப்பா
படைத்திட்ட அண்டங் கோடி
பரகெதி ஞானங் கோடி
கடந்திட்ட மனத்தினாலே கண்டறி
நீதானப்பா (3)
Translation:
Listen mind that crossed (the wavering), Kings millions
in this world
Indra millions, we cannot even count,
The universes created-millions, Paragati, Jnana- millions
You see them with the mind that has gone beyond (3)
Commentary:
Agatthiyar continues with his description about
creation. He says that millions of
humans (kings), celestials (Indra), universes, paths to reach the Param, and
knowledge systems were created. He tells
his disciple, may be Pulathiyar as most of his songs are addressed to him, to
see these with the mind that has gone beyond distinctions, variations,
multiplicity. Only a properly
conditioned mind will show the truth.
Hence Agatthiyar says that one should see these with the mind that has
gone beyond wavering.
In the previous verse Agatthiyar mentioned that all the divinities were
created in the body of the Jiva. If we
apply this to this verse also then it follows that the kings, celestials and
universes are present in the human body.
Thus the theory, what is in the macrocosm is present in the microcosm,
is established.
படைப்பைப் பற்றிய தனது
விளக்கத்தை இப்பாடலிலும் தொடர்கிறார் அகத்தியர்.
மேற்கூறிய விதத்தில் எண்ணற்ற மன்னர்களும் (மானிடர்களும்), இந்திரர்களும்
(தேவர்களும்), அண்டங்களும் (ஜட வஸ்துக்களும்) பரகதி, ஞானங்களும் படைக்கப்பட்டன
என்று அவர் கூறுகிறார். முற்பாடலில் அவர் இறைவர்கள் அனைவரும் ஜீவன் தோன்றும்
உடலில் படைக்கப்பட்டனர் என்று கூறினார். அதை இப்பாடலிலும் பொருத்தினோமானால் இந்த
தேவர்கள், மனிதர்கள், அண்டங்கள் என்ற அனைத்தும் நமது உடலுள் இருக்கின்றன என்று அவர் கூறுவதாகத்
தோன்றுகிறது. இவ்வாறு அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற கருத்து
நிறுவப்படுகிறது. இவையனைத்தையும் தனது
சீடர், பொதுவாக அகத்தியரது பாடல்கள் புலத்தியரைக் குறித்து
இருப்பதால் அவர், தனது வேறுபட்ட நிலையைக் காண்பதைக் கடந்த
மனத்தினால் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். செம்மைப்படுத்தப்பட்ட
மனம் உண்மை நிலையைக் காட்டும் என்பது அகத்தியரது கருத்து.
Verse 4
கண்டறி ஞானந் தன்னைக் கருவுடன் கண்டாயானால்
அண்டத்தில் குளிகை தேறு மதில் வாதங் காணலாகும்
எண்டிசை யுலகந் தன்னை எளிதினில் காணலாகும்
சண்டருக்குரைக்க வேண்டாம் சாயுச்சிய ஞானமுற்றே (4)
Translation:
Seek and know
the jnana. If you see it with the
essence
The “kuligai” of
the universe will become visible, The
vada can be seen there.
The world with
eight directions will be seen there
Do not reveal
this to arguers. It is the jnana about
sayujyam. (4)
Commentary:
Agatthiyar is
continuing to address his mind. He says,
“Mind! This is how millions of people, divinities, universes and worlds
appeared,” and calls this knowledge as “jnana karu” or the essence of
wisdom. He also says that this knowledge
will bring about an alchemical transmutation like a “kuligai”.
T.V.
Sambasivam Pillai in his dictionary of Siddha terms defines “kuligai” as a
medicinal preparation that transforms things.
For example, rasa kuligai or vada kuligai transmutes metals. Agatthiyar calls the knowledge about creation
as vada kuligai. It makes the person see
the truth and this brings about a a transmutation in him. He attains sayujya or oneness with
everything. Yuj, the origin of the word
yoga means joining with or becoming one with.
Thus, the person who realizes the truth becomes one with everything and
with the Divine.
While this is
an essential knowledge Agatthiyar warns that it should not be shared undeserving.
They will waste their time arguing about it without attempting to seek
the truth.
Tamil Siddhas generally use alchemical terms to explain their
esoteric concepts. For example
Sivavakiyar sings:
Good silver six (parts) copper as four
Tungsten three gold as two
With the sound of the bow as one, if you are able to blow
It will become eight part purity which is shinning/it will
be possible to reach the threshold effulgent one.
This song is applicable in the three levels, material,
mental and spiritual. In the material
world it talks about an alchemical process involving silver, copper, gold and
tungsten that is blown together in a goldsmith’s apparatus with a bellow and
the resultant metal will be “ettu maatru” or supremely pure.
In the mental level six part silver refers to semen or
kundalini sakthi. The semen is the locus
where the lifeforce or prana is stored in our body. Tamil Siddha yoga methods attempt to reclaim
this stored energy for spiritual progress
Along with the lifeforce the four- manas,
buddhi, chittham and ahamkaram are merged.
To that is added the three-satva, rajas and tamas that are represented
by ida, pingala and sushumna nadi, that is these three nadi are used in the
process. The two are inhalation and exhalation or prana
and apana. They are blown through the
nadi like blowing a bellow and with the sound of the arrow released from the
bow, at that pitch. Then the eight part
body will be transformed into divya deha or supreme body.
At the
spiritual level it means the six chakra, the loci of state of consciousness are
joined to the four states, wakeful, dream, deep sleep and turya at four
timepoints- morning, evening, midday and midnight. That the spiritual practice
is carried out at four timepoints in a day. Hatayoga Deepika calls this as
theevra pranayama. To them the three types of breathing inhalation,
exhalation and cessation are practices with the two, prana and apana by blowing
like a bellow with the sound that emerges when an arrow is released from the
bow. The one reaches the “effulgent one”
or the Divine who is the vettaveli or ellai nilam the frontier. One attains the state of akara (which is the
letter that indicates the number eight in Tamil)
அகத்தியர் தனது மனதை நோக்கி, “மனமே! இவ்வாறே பல கோடி மக்களும் தேவர்களும்
அண்டங்களும் உலகங்களும் திசைகளும் தோன்றின” என்று கூறி இந்த அறிவை ஞானத்தின் கரு என்கிறார்,
ரசவாதத்தைத் தோற்றுவிக்கும் குளிகை என்கிறார்.
T.V. சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது அருஞ்சொல் விளக்கத்தில் குளிகை என்பதை
தேன் போன்ற வஸ்துக்களைக் கொண்டு மருந்துப் பொருள்களை அருவருக்காது எளிதாக
விழுங்குவதற்கு ஏற்றதாகச் செய்யும் ஒரு தயாரிப்பு என்கிறார். அதாவது உண்மையான
மருந்தை பிற பொருள்களில் பொதித்துத் தருவது என்கிறார். இங்கு உண்மை என்ற ஞானம்
உலகினுள் பொதித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த ஞானத்தைப் பெற்றால் அது அவ்வாறு பெற்றவருள்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
கீழ்ப்பட்ட உலோகங்களை எவ்வாறு ரசவாதம் உயர்ந்ததாக மாற்றுகிறதோ அதேபோல அவரை
உயர்ந்த சாயுச்சிய பதவிக்கு உயர்த்துகிறது.
தமிழ்
சித்தர்கள் பொதுவாக ரசவாத சொற்களைக் கொண்டு உள்ளே ஏற்படும் மாற்றத்தைக்
குறிக்கின்றனர்.
உதாரணமாக:
நல்லவெள்ளி
ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்
கொல்லுநாகம்
மூன்றதாய் குலாவு செம்பொனி ரண்டதாய்
வில்லின்
ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லீரேல்
எல்லை
ஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே
என்று பாடுகிறார் சிவவாக்கியர்.
இப்பாடலின் மேலெழுந்த பொருள் ஆறு பங்கு வெள்ளியை நான்கு
பங்கு செம்புடனும் மூன்று பங்கு துத்தநாகத்துடனும் இரண்டு பங்கு பொன்னுடனும்
கலந்து வில்லின் ஓசையுடன் துருத்தியிட்டு நெருப்பில் ஊதினால் அது ஒளிபொருந்திய
எட்டு மாற்றாக மாறும் என்பது. இது ஒரு
உலோகங்களின் தரத்தை மாற்றும் ஒரு முறையைப் போலத் தோன்றுகிறது.
இதை மனவளவில் எடுத்துக்கொண்டால் ஆறு வெள்ளி என்பது
குண்டலினி சக்தி அல்லது சுக்கிலத்தைக் குறிக்கும். பிராணன் நமது உடலில் சேமித்து
வைக்கப்படும் இடம் சுக்கிலம். தமிழ் சித்தர்களின் யோக முறைகள் எவ்வாறு இந்த
சக்தியை மீட்டு ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத்
தருகின்றன. இந்த ஆறான பிராண சக்தியுடன் மனதின்
நான்கு பரிணாமங்களான புத்தி, சித்தம், மனம், அகங்காரம் ஆகியவற்றையும் மூன்று
பகுதிகளான சத்வம்,
ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் குறிக்கும் இடை, பிங்கலை, சுழுமுனை நாடிகளை சேர்த்து, அதாவது அவற்றைப் பயன்படுத்தி, உள் மூச்சு வெளி
மூச்சு என்ற இரண்டையும் அல்லது பிராணன் அபானன் என்ற இரண்டு வாயுக்களையும் கலந்து
குண்டலினி அக்னியில் துருத்தி போல் வில்லிலிருந்து புறப்படும் அம்பு ஏற்படுத்தும்
ஓசையைப் போல வாசி யோகத்தால் மூச்சை ஊதினால் எட்டு சாண் எனப்படும் இந்த உடம்பு
சாதாரண நிலையிலிருந்து திவ்ய தேகமாகும் என்று கொள்ளலாம்.
இதை ஆன்ம நிலையில் எடுத்துக்கொண்டால் ஆறு தளங்களான
சக்கரங்களில் விழிப்புணர்வின் நான்கு நிலைகளான விழிப்பு நிலை, கனவு நிலை,
ஆழ்நிலைத் தூக்கம் மற்றும் துரியம் என்ற நான்கு நிலைகளை அல்லது காலை மாலை, மதியம்,
நடுநிசி என்று நான்கு காலம் (ஹதயோக பிரதீபிகா இதை தீவிர பிராணாயாமம் என்று
அழைக்கிறது), பூரகம், ரேசகம், கும்பகம் அல்லது உள்மூச்சு வெளிமூச்சு மூச்சின்
தடுப்பு என்ற மூன்று வழிகளில் பிராணன் அபானன் என்ற இரு வாயுக்களை வாசி யோகத்தின்
மூலம் குண்டலினி அக்னியின் உதவியுடன் துருத்தியைப் போல ஊதி மேலே ஏற்றினால் அதன்
மூலம் பரநிலையை அடையலாம், எட்டு எனப்படும் அகார நிலையை அடையலாம் (தமிழ் எழுத்து அ என்பது எண் எட்டைக்
குறிக்கும்), சோதி நிலையை எட்டலாம் என்றும் பொருள்.
இந்த ஞானம் மிக முக்கியமானதால் அதை வீணருடன் பகிர்ந்துகொள்ள
வேண்டாம் என்று கூறுகிறார் அகத்தியர்.