Thursday 27 March 2014

108. Akshara anga yogam, Sivaraja yogam

Verse 108
ராச யோகி பெருமை
ராசன் என்ற சிவராச யோகம் கேளு
நாடுநகர் எதிருண்டோ எதிர்நூல் உண்டோ
ராசன் என்ற யோகிகள் தான் மரிப்பதுண்டோ
நாடி ஓர் மொழி கேட்க இடம்தான் உண்டோ
ராசன் என்ற அக்ஷரங்க யோகம் உண்டோ
நாட்டில் உள்ள காயாசம் வேஷம் உண்டோ
ராசன் என்ற சிவராச தம்பம் நாட்டி
நாகரத்தின் கொடிபோட்டு கண்டியோசை

The king, the Sivaraja yogam, listen about it
Is there any land, city or book against it/equivalent to it?
The yogis, the supreme kings, do they ever die?
Is there a place to seek them and get a word of advice from them?
Is there the king, the yogam of the body of akshara?
Is there any deceit of ochre robe adornment?
Planting the pillar of Sivaraja, the king,
Flying the flag on the 'naagara' with the sound of the bell/ganta

Commentary:

This verse describes the achievement of a Raja yogi.  Agatthiyar says that raja yoga is Sivaraja yogam.  Yogis engaged in it are deathless, it is accepted universally, there is no place where one could meet them as they are all pervading and not limited to a locus. We have heard of the ashtanga yoga but Agatthiyar says akshara anga yogam.  This is the yogam where letters of the mantra namacivaya form the body parts. 

Verse 96 of Sivavakkiyam describes this as follows:
With na as the two legs, ma as the stomach,
ci as the two shoulders, the superior va as the mouth,
ya as the two eyes, that which remained truthfully so,ma
As supreme object in the subtle body, everything remained within the five-lettered                                                                                                                                           Civayam.
This is the akshara anga yogam.  Naagaram is a specific temple construction pattern famous in North India.  It has a square base and other parts like the mantapa etc.  Agatthiyar is saying that the flag is flown on naagaram.  The state when the mulaprana reaches the top terminus or sahasrara is called 'naar chatura siddhi'.  This is the state of supreme consciousness where the yogin hears the words of the Divine.  One should remain in this state only for a few seconds and descend back into the body.  Otherwise only will be washed away in the bliss of aanandamaya kosham.  Being victorious of this state or climbing to this state is the what is referred to as planting the flag in the naagram.  The various sounds one hears during the kundalini yoga is the sound of the bell referred to here. 

அகத்தியர் இப்பாடலில் ராஜயோகத்தை விவரிக்கிறார்.  ராஜ யோகம் என்பது சிவராஜ யோகம் என்று கூறும் அகத்தியர் ஒரு ராஜ யோகி மரணமடைவதில்லை, எல்லா நூல்களும் நாடுநகரங்களும் இந்த யோகத்தை ஏற்றுக்கொள்கின்றன என்றும் அத்தகைய யோகியை கண்டுணர்வது, அவரிடமிருந்து உபதேசம் பெறுவது கடினம் என்றும் கூறுகிறார்.  இந்த யோகிகள் இடம், காலம் ஆகியவற்றைக் கடந்தவராதலால் அவர்களைக் கண்டுணர்வது கடினமாகிறது.  இந்த யோகிகள் அக்ஷர அங்க யோகத்தைச் செய்பவர்கள் அதாவது ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்பதை உடலின் பாகங்களில் ஸ்தாபித்து உடலை மந்திர மேனியாக்குபவர்கள் என்கிறார் அகத்தியர். 

இந்த யோகத்தைப் பற்றி சிவவாக்கியர்

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துளே


என்று விளக்குகிறார்.  இப்பாடலின் முடிவில் அகத்தியர் நாகரக் கொடியைப் பற்றியும் கண்ட ஓசையைப் பற்றியும் கூறுகிறார்.  நாகரம் என்பது ஒருவகை கோயில் அமைப்பு.  அடியில் நாற்சதுரமாக இருக்கும் இந்த அமைப்பு வட இந்தியாவில் பிரபலமானது.  சித்தர்கள் பரிபாஷையில் நாற்சதுர சித்தி என்ற நிலை ஒன்று உண்டு.  மூலபிராணன் சஹாராரத்தை அடைந்து அந்த உயர் விழிப்புணர்வு நிலையில் நிற்பது நாற்சதுர சித்தி எனப்படுகிறது.  ஒருவர் இந்த நிலையில் ஒரு சில வினாடிகளே இருந்து விரைவில் உடல் உணர்வு நிலைக்குத் திரும்பிவிட வேண்டும்.  இல்லாவிட்டால் ஆனந்த ஆஸ்பதம் என்னும் இன்பவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடுவார்.  இவ்வாறு ஆனந்தமய கோசத்தால் அடித்துச் செல்லப்பட்டவர் தனது உடம்புக்கு மீண்டும் திரும்ப முடியாது.  அகத்தியர் பின்னொரு பாடலில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மணியின் ஓசை என்பது ஒரு குண்டலினி யோகி கேட்கும் பலவித ஓசைகளைக் குறிக்கின்றது.

No comments:

Post a Comment