Saturday 10 January 2015

288. Gurus who cheat

Verse 288
உரை சொல்வான் பொருள் வாங்கிப் போக மட்டும்
உத்தமனே மனை விடுத்தால் மனதுள் வையான்
கரைசொல்வான் பின் ஒருக்கால் வந்தானானால்
காதலைந்து எழுத்துக்கோ நிலைதான் என்பான்
இரைதேடும் பக்ஷியைப் போல் இவ்வண்ணம் தான்
இறந்திறந்து இவன் மாண்டான் சீஷன் கூட
பரையேது சிவம் ஏது என்பான் பேயன்
பஞ்செழுத்தைக் காட்டி அவன் பலுக்குவானே

Translation:
He will lecture only to get materials.
The good one!  When he leave the house he will not remember
He will caw (like a crow) when he comes later at another time
He will say, “Is it love for the five letters?  Only for this state”
He will lived and died like this, along with his disciple
Like a bird that seeks food.
He will ask, “What is parai, what is sivan?” the ghostly one
Showing the five letters he will cheat

Commentary:
This is the continuation of the previous verse on the fallacious priest.  This person will do all the upanyasa for the sake of money and material wealth.  Once he leaves the house where he lectured he will forget everything as they are only for material  benefit.  He will say, “What love for five letters! I like only this status”.   Seeking money and materials in this fashion he will live and die along with his disciples like a bird that is only interested in seeking its prey.  Such a lowly person will ask, “What is parai(sakti) or what is Sivam (the Divine)”.  With the five lettered namacivaya as a ruse he will attract people for his personal benefit.


மேலே கூறிய பொய் குருக்கள் இவ்விதம் பொருள் பெறவே பல உபநியாசங்களையும் நிகழ்த்தி தனது நிலையை உயர்த்திக்கொள்ளவே முயல்வர்.  இரைதேடி அலையும் பறவையைப் போல எப்போதும் தனது நிலையில் முன்னேற்றம் என்ற குறியையே விடாமல் பற்றிக்கொண்டும் தானும் இறப்பர், தனது சீடரையும் இந்த முடிவை நோக்கியே அழைத்துச் செல்வார்.  இந்த பேய்ப் பிறவிகள் பரை என்றால் என்ன சிவம் என்றால் என்ன என்று கேட்பவர்களாக ஐந்தெழுத்து மந்திரத்தைக் காட்டி பிறரை ஏய்த்து வாழ்வர்.