Tuesday 29 April 2014

198. All their tortures seem to have happened only for a second when...

Verse 198
வழக்கிட்டு மடிபிடித்து இழுத்துப் போவார்
மனை ஆசை பெண்சாதி மயக்கமோடா
பிழைக்கொட்டான் வேளைகண்டு சோறும் போடான்
பொய் உரைத்தால் மெய் என்பான் மெய் பொய்யாகும்
கடைகட்டார் எவ்வாறு தப்பினாலும்
கனவழக்கு மடி மாங்காய் தலை போறுப்போல்
இழைக்கட்டார் மதுவுண்ட மயக்கத்தாலே
இத்தனை நாள்செய்ததெல்லாம் க்ஷணப்போதாமே

Translation:
He will file a claim and drag (you) holding on to your lap
Saying “Are you enchanted by desire for a house or a wife?”
He will not let you survive, not even offer you food at the right time
If you say a truth he will say it is a lie and vice versa
He will not go away how much ever you try to escape
(will file) unfair pleas like a mango in one’s waist band
He will not tether the string (breath) due to the delusion that ensued from consumption of alcohol
All that was done will appear as if it happened for a second.

Commentary:
This verse is a continuation of the previous verse on gurus with extreme qualities.  Agatthiyar says that such gurus will never let their disciples get away even if their ways are torturous.  They will file false claim and drag them back.  One is reminded of the episode in Sundarar’s life when Lord Siva filed a false claim that Sundarar was his slave and dragged with him towards jnana deeksha.  The actions of such gurus will appear unfair at that time.  The disciple will never get a reprieve.  Nor will he get food and other comforts.  This is similar to the story of Milarepa we saw in the above verse.  The last but one line is not very clear.  The string may be the kundalini sakti that travels through the thread like sushumna nadi.  Agatthiyar assures that all his extreme actions seem to have happened for only a second when one receives upadesa from him.


இப்பாடல் முந்தைய பாடலின் தொடர்ச்சியாகும்.  அதீத குணமுள்ள குருக்கள் தமது துன்பகரமான செயல்களால் எவ்வாறு சீடர்களைப் படுத்துவார்கள் என்று அகத்தியர் இப்பாடலிலும் கூறுகிறார்.  சீடர்களைத் தம்மை விட்டுப் போக விடமால் பொய்வழக்கு போட்டு அவர்களைத் தம்முடன் இழுத்துப்போவார்கள்.  இது சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தனது அடிமை என்று பொய் வழக்கிட்டு அழைத்துப் போனதை நினைவுபடுத்துகிறது!  இவ்வாறு அவர்களது செயல்கள் எல்லை கடந்த கொடுமையாகத் தோன்றும்.  தமது சீடர்கள் பிழைப்பதற்கு அவர்கள் ஒரு வழியையும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு உணவு கூட சரியான நேரத்தில் தரமாட்டார்கள்.  ஆனால் அவர்கள் உபதேசத்தை அருளும்போது அவர்களது இந்த செயல்கள் அனைத்தும் ஒரு நொடிப்பொழுதே நடந்ததுபோலத் தோன்றும்.

Monday 28 April 2014

197. Extreme behavior of a Guru.

Verse 197
பாரப்பா அதீத குணக் குருவைக் கேளு
பஞ்சில் இட்ட தீபோல பற்றுவார்கள்
சீரப்பா இவருடனே தொண்டு செய்தேன்
சிவசிவாபடும்பாட்டை செப்புவேன் கேள்
நேரப்பா நின்றாலும் கோபம் கோபம்
நெருங்கிவந்து இருந்தாலும் அடிமேற் பாயும்
பூரப்பா சலித்து நீ இருந்திட்டாலும்
பொன் பணத்தைத் திருடினான் வழக்கு தானே

Translation:
See son, listen about the guru with extreme qualities
They will catch fire like a spark in cotton
I served him properly
Siva sivaa!  I will tell you about the misery that would be faced
Anger, Anger, even if stood straight
If came close beating happens
See son, even if you remain disgusted
A case that you stole gold and money (will be charged)

Commentary:
Agatthiyar is talking about another guru who has extreme qualities.  He is like fire caught on cotton. He is full of anger.  Even if one serves him sincerely he will scream at the person, hit him.  He will file a case of theft even if one remains quiet and exhausted by his behavior.  One wonders why gurus behave in this fashion.  Let us see what Swami Krishnanada of Divine Life Society says about a guru sishya relationship.  “The disciple the sishya is part and parcel of the Guru himself, and the will of the guru is the will of the disciple.  …The disciple should not interpret the guru in any manner… use reason in judging the instructions of his guru. ….(the disciple) was tested to such a point where any weak-minded or rational-minded disciple would have run away from that place.  The guru were only testing and the test was very sever.  After such a test the guru would summon the disciple and without any premeditation would initiate him.”  He explains why the gurus do so with the example of Milarepa’s story.  “Milarepa’s guru told him… I do not want anything from you.  I have got everything by divine grace. But you have committed several sins and all those sins had to be expiated which is why I tested you, put you to hardship, extracted hard labor from you and never even gave you a proper meal daily.”  Thus, all the actions of a true guru, even if they seem intolerably harsh sometimes, are for the benefit of the disciple.
இப்பாடலில் அகத்தியர் அதீத குணமுடைய குருவைப் பற்றிப் பேசுகிறார்.  இந்த குரு எவ்வாறு செயல்படுவார் என்று ஒருவராலும் எதிர்பார்க்கமுடியாது, ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாது.  பஞ்சில் இட்ட நெருப்புப் போல அவருக்கு எப்போதும் கோபம்தான், சீடனுக்கு திட்டும் அடியும்தான்!  அவன் சும்மா இருந்தாலும் அவன்மீது திருடிவிட்டான் என்று வழக்குதான்! 

சரி,ஒரு குரு எதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறார்?  இத்தகைய கொடுமையான செயல் அவசியம்தானா?  இதற்கு சுவாமி கிருஷ்ணானந்தா (Divine life society) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.   


“ஒரு சீடன் தனது குருவை விட்டு வேறுபட்டவனல்லன்.  அவரது ஒரு பகுதியைப் போன்றவன்.  குருவின் சங்கல்பமே சீடனின் எண்ணம்.  குருவின் செயல்களை சீடன் எக்காரணம் கொண்டு அறிவினால் அலசக் கூடாது.  அதை சீர்த்தூக்கிப் பார்க்கக் கூடாது.....  வலுவற்ற மனதை உடையவர்களையும் அறிவினால் எல்லாவற்றையும் அலசுபவர்களையும் விலக்க ஒரு குரு தனது சீடனை மிகத் தீவிரமாக சோதனை செய்வார்.  அந்த சோதனைக் காலத்தின் முடிவின் எவ்வித முன்னறிவிப்புமில்லாமல் அவனுக்கு தீட்சை அளித்து ஞானத்தை அருளுவார். எதற்காக ஒரு குரு இவ்வாறு செய்கிறார்?  மிலரேபாவின் குரு அவரிடம் இவ்வாறு கூறினார்.. எனக்கு உன்னிடமிருந்து ஆக வேண்டியது எதுவும் இல்லை.  இறைவனின் அருளால் என்னிடம் அனைத்தும் உள்ளன.  ஆனால் நீ பல பாவங்களைப் புரிந்துள்ளாய்.  அந்த பாவங்களைக் கழிப்பதற்கே நான் உன்னை இவ்வாறு துன்பத்து ஆளாக்கினேன், கொடுமை செய்தேன், உனக்கு தினமும் உணவுகூட சரியாகக் கொடுக்கவில்லை” என்றார்.  இவ்வாறு, ஒரு உண்மையான குருவின் அனைத்துச் செயல்களும் ஒரு சீடனின் நன்மைக்கே செய்யப்படுகின்றன.

196. Peaceful yet verbally sharp gurus, the second best!

Verse 196
தாமப்பா அவர்கள் நாமம் சொல்லக் கேளு
சாந்தகுணம் துடுக்கான குருக்கள் ஆகும்
ஆமப்பா இக்குருக்கள் இரண்டாம் பக்ஷம்
அர அரா இவர் மனதோ அளவே காணேன்
போமப்பா வெகுகடினம் மறந்திடாமல்
பேசினால் கிடைக்குமப்பா இல்லாட்டில்லை
சோமப்பா ஊட்டி வைப்பார் சூக்ஷம் காட்டி
சுருக்காகச் சித்துகளும் சொல்வார் பாரே

Translation:
They son, listen to their names being uttered
They are the peaceful yet verbally sharp gurus
Yes son, these gurus are only second best
Ara araa!  I have not seen the depth of their minds
Go without forgetting it, Son! It is very difficult,
It is available if they speak, otherwise not possible
Feeding the milk of soma they will show the subtlety
Quickly they will tell you about mystical accomplishments.

Commentary:
Agatthiyar says that what he has described so far are the qualities of a peaceful yet verbally sharp guru.  He has mercy in his heart but his words will not be pleasant or soothing.  They will be powerful, chiding and pushing the disciple towards wisdom.  Agatthiyar is saying that these gurus are only second best, which means he will be talking about the best of the best later.  They are second best because wisdom is attained only when they decide to speak.  Otherwise, one will not attain jnana through them. If they decide to grant jnana they will grant the milk of soma or the secretion from the uvula and show the disciple the Divine, the subtlety.  They will also teach how to attain siddhis or mystical accomplishments.


அகத்தியர் தான் இதுவரை சாந்தமான ஆனால் துடுக்கான குருவைப் பற்றிக் கூறியுள்ளதாகவும் அத்தகைய குருக்கள் இரண்டாம் பட்சமே என்றும் கூறுகிறார்.  ஏனெனில் அவர்கள் மனதுள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாது.  அவர்கள் பேசலாம் என்று மனதில் நினைத்தால் தான் சீடனால் ஞானம் பெறமுடியும்.  இல்லாவிட்டால் ஞானம் கிடைக்காது.  அவர்கள் அவ்வாறு பேசலாம் என்று முடிவு செய்துவிட்டால் சீடனுக்கு அமுதப்பால் அல்லது சொமப்பால் எனப்படும் ஊற்றை அளித்து பரம் சூட்சுமமான இறைவனைப் பற்றியும் எவ்வாறு சித்திகளைப் பெறுவது என்பதைப் பற்றியும் கற்றுக்கொடுப்பார்.  

Sunday 27 April 2014

195. Display your knowledge at the right time, the guru will be ecstatic!


Verse 195
போடப்பா நாள் தோறும் பல பேச்சுள்ளே
பொறுக்குள்ள வார்த்தை கண்டால் பொரிக்க முட்டை
நாடப்பா கோழியைப் போல் மனதின் உள்ளே
நல்ல குணம் வந்த தென்றால் சொல்வேன் என்பார்
ஆடப்பா அப்போது மறந்திடாதே
அந்நேரம் முட்டைதனை அவித்துப் போடு
தோடப்பா இவனல்லோ பிள்ளை என்று
தூக்கி முத்தாடுவார்கள் குருவும் தாமே

Translation:
Lay it son, daily, within the several conversations
If you see a word that should be picked, the egg that should be hatched
Seek it within the heart like a hen
He will say, “If good qualities occur, I will tell,”
Dance son, do not forget then,
Boil the egg and display it at that time
Happily thinking, “He is the worthy son/person”
The guru will lift you and kiss you.

Commentary:
A guru offers knowledge to the disciple and waits to get feedback before he offers more.  Agatthiyar equates this knowledge to an egg.  One should collect this knowledge, the right words and place them in one’s heart for them to hatch.  Mere hearing of the guru’s words will not grant wisdom.  One should ruminate of those words and see the nuances and esoteric meanings hidden in them.  This is the process of boiling the egg.  When the right time comes, the disciple should talk about what he learnt from the guru as a way of feedback, to let the guru know that the knowledge was received and understood correctly.  This will gladden the guru immensely.  Agatthiyar says that the guru will be ecstatic with joy; he would kiss the disciple in his mirth.
                                    

ஒரு தேர்ந்த குரு தனது சீடனுக்கு சிறிது அறிவை முதலில் புகட்டுவார்.  பிறகு அந்த அறிவை அவன் சரியாக ஏற்றுக் கொண்டானா என்று பொறுத்திருந்து பார்ப்பார்.  அது அவனது வார்த்தைகளிலிருந்து புலப்படும்.  குரு அளிக்கும் ஞானத்தை அகத்தியர் முட்டை என்கிறார்.  ஒரு கோழி எவ்வாறு முட்டையைப் பாதுகாக்குமோ அதுபோல சீடன் குருவின் வார்த்தைகளைப் பாதுகாக்கவேண்டும்.  அதை மனதுள் இட்டு அதினுள் இருக்கும் சூட்சுமப் பொருட்களை உணர்ந்துகொள்ள வேண்டும். அதை அகத்தியர் ‘முட்டையை அவிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.  தகுந்த சமயம் வரும்போது இந்த அவித்த முட்டையை அந்த சீடன் தனது குருவுக்குமுன் இட வேண்டும், அதாவது தான் எவ்வாறு கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை அந்த குருவுக்குப் புலப்படுத்தவேண்டும்.  அதைக் கண்டு அந்த குரு பெரிதும் மகிழ்வார்.  ஆகா!  இவனல்லோ நல்ல பிள்ளை, இவனல்லோ நல்ல சீடன் என்று மனமகிழ்ந்து அவனைத் தூக்கி முத்தமிடுவார் என்று அகத்தியர் கூறுகிறார்.

194. A guru's mode of upadesa!

Verse 194
காணப்பா அவர் மனது கனியக் காரு
கால்பிடித்து நீ கைபிடித்து நீ ஏவல் கேளு
தோணப்பா சந்தோஷம் வந்தபோது
சொல் எடுப்பார் அதுவேளை நீயும் பேசு
ஊணப்பா அவர் உரைக்கும் வார்த்தை எல்லாம்
ஓஓஓ தாசியைப் போல் பொறுக்கிச் சேரு
சாணப்பா வீண்வார்த்தைஅநேகம் சொல்வார்
சமயம் வந்தால் நிஜம் சொல்வார் கட்டிப் போடே

Translation:
See son, wait till his heart melts,
Press his feet and hands do his bidding
When he becomes happy, he will
Utter a word/will start speaking, you also speak at that time
Think deeply about his words/plant them deeply
O!O!O!  Pick them and collect them like a prostitute
Be careful son, he will say many useless words,
When the time comes, they will say the truth, tie it up tightly

Commentary:
This verse gives instructions on how to receive upadesa from a guru.  One has to wait patiently until the guru looks upon the disciple favorable.  The disciple should serve the guru sincerely and do all his bidding.  Then the guru will become happy and start talking.  One should not merely listen to him but clear one’s doubts also at that time.  One should plant the words of the guru deeply in one’s heart collecting them like a prostitute who desirously and ambitiously collects wealth from her benefactors.  However, one should be watchful of what the guru says.  He will say many useless things to test if the disciple has the discrimination and knowledge to identify the truth.  They do this also as a way of waiting for the right time to arrive so that the disciple is ready to receive the truth from the guru. When such a time comes they will say the  truth and the disciple should immediately hold on to it as if tying it up within himself.


ஒரு சீடன் எவ்வாறு குருவினிடமிருந்து உபதேசம் பெறவேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  ஒரு சீடன், பொறுமையுடனும் விசுவாசத்துடனும் குருவுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும்.  அவருக்குக் கால் பிடித்து கைபிடித்து சேவை செய்ய வேண்டும்.  அப்பொழுது அவரது மனம் கனிந்து பேச ஆரம்பிப்பார்.  அப்போது சீடன் கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளவேண்டும்.  அவரது வார்த்தைகளை ஒரு தாசி தன்னை ஆதரிப்பவரிடமிருந்து எவ்வளது பேராசையுடன் பொருள்களைப் பொறுக்கிச் சேகரிப்பாளோ அதைப் போல குருவின் வார்த்தைகளைச் சேகரிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  அப்போது குரு சீடனின் அறிவுத் திறனை, விவேகத்தைச் சோதனை செய்ய பல வீண் வார்த்தைகளைச் சொல்வார்.  (அந்த சீடன் பக்குவம் பெற்று உண்மையைக் கண்டுணர அதை ஒரு பயிற்சசியாகவே செய்வார்.)  சரியான சமயம் வரும்போது அவர் தனது உபதேசத்தை அருளுவார்.  அதை அந்த சீடன் தன்னுள் கட்டி வைப்பதைப் போல ஆழமாகப் ஊணிக்கொள்ள வேண்டும்.  

193. They say a thunderbolt-like word, do not run away in fear!

Verse 193
சாந்தத்தில் துடுக்கான ஆசான் குணம்
நன்றப்பா இவர்க்குப் பேசா நாதமூறி
நாட்டில் உள்ளோர்க் கிவர் வாய்த்தால் மிகவும் நன்று
பண்டப்பா பின்னை ஓர் குருவைக் கேளு
பார்த்தோர்க்கு மெய்மறக்கக் கதைகள் சொல்வார்
இண்டப்பா சீஷன் வந்து அடுத்தா னாகில்
இடி விழுந்தாப் போல ஓர் வார்த்தை சொல்வார்
கண்டப்பா நீ பயந்து போய்விடாதே
கனகோபம் உன்னிடத்தே நன்மை காணே 

Translation:
The peaceful yet sharp teacher

Good son, they do not speak, nada soaks them,
If people in the land attain these (gurus), good for them,
Ask a guru later
They will tells stories that will make the observers lose their sense of body
If a disciple approaches them
They will utter one word like a thunderbolt
Seeing it do not run away in fear
Their intense anger towards you is only for your own good.

Commentary:
Agatthiyar mentions that great gurus are suffused with the primordial sound, the nada.  They usually speak unnecessarily.  If one approaches them and posts proper questions, their speech will make one hear their thoughts with rapture that one will forget oneself.  When a true disciple approaches them they will offer an upadesa with a single word which will shake the disciple as if he is hit by thunderbolt.  It is so powerful.  Agathiyar advises that one should not run away in fear when this happens as it happens for one’s own good.


உண்மையான குருக்கள் நாதம் அவர்களுள் ஊறி இருப்பதால் அதிகம் பேசமாட்டார்கள்.  அவர்களைக் கண்டுணர்ந்து தகுந்த கேள்விகளைக் கேட்டால் அவர்கள் கூறும் விஷயங்களைக் கேட்பவர்கள் தம்மையே மறந்துவிடுவர்.  தகுந்த சீடன் வந்தால் அவர்கள் இடி விழுந்ததுபோல ஒரு வார்த்தை கூறுவார்.  அதன் தாக்கத்தைக் கண்டு ஒருவர் அஞ்சி ஓட வேண்டாம் ஏனெனில் அது சீடனின் நன்மைக்கே என்கிறார் அகத்தியர். 

192. They live like lily in the pond, like washing the mucus off of a baby!

Verse 192
பாரப்பா சமுசாரி என்றெண் ணாதே
பார்தனிலே அவர்கள்போல் பெரியோர் இல்லை
காரப்பா சாக்கடையில் பிள்ளை பூச்சு
கழுவினது போலிருந்த கதைபோல் ஒக்கும்
பேரப்பா சேற்றில்செங் கழுநீர் பூத்த
பெருமை எனப் போல் இருப்பார் உலகத்துள்ளே
ஊரப்பா இருப்பார்கள் அனந்தம் பேர்கள்
உன்னறிவால் அவர்கள் வந்தால் மிகவும் நன்றே

Translation:
See son, do not think only a householder.
There is no one as great as they are, in this world,
Consider it so, as washing the covering of the infant
In the gutter, this is like 
Name son, the glory of ‘the lily blooming in the mud’
They will remain so within this world.
There are many who remain within the town so.
If they come due to your wisdom, it is good.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar not to mistake these gurus as mere householders as there is no one as great as they are.  They remain in this world getting rid of their karma like washing the covering off of a newborn in the gutter.  This world is the gutter, the baby is the soul or atma.  The mucus covering is the maya and karma covering the soul.  Great souls living in this world leading a good life is like removing the mucus covering off of the baby so that its true nature shines through.  Agatthiyar mentions another adage here.  Great souls live in this world like lily blooming in the mud.  Withing the dirty mud the lily blooms with its full glory.  It is not tainted by the mud.  Even though great souls live in this world they are not tainted by its distractions and temptations.  Agatthiyar says that there are many such great souls living in a place and that it is great if one is able to identify them with smartness of mind.


இதுவரை பேசிய குருக்களைப் பற்றி இங்கு மேலும் கூறுகிறார் அகத்தியர்.  இந்த குருக்கள் சாதாரண சம்சாரிகளைப் போலக் காணப்பட்டாலும் ஒருவர் அவர்களை சாதாரண குடும்பஸ்தர்கள் என்று தவறாக நினைத்துவிடக் கூடாது.  அவர்கள் இவ்வுலகில் இருப்பது பிறந்த குழந்தையை மூடியுள்ள கழிவுகளை சாக்கடையில் அலம்புவதைப் போலவே உள்ளது.  சாக்கடை என்பது இவ்வுலகம்.  குழந்தை என்பது ஆத்மா, கழிவுகள் என்பவை அந்தக் குழந்தையை மூடியுள்ள சளி போன்ற அசுத்தங்கள்.  ஒரு ஆத்மா இவ்வுலகில் வாழ்ந்து தனது கழிவுகளான கர்மம், சம்ஸ்காரங்கள் புண்ய பாபங்கள் ஆகியவற்றைக் கழுவிக்கொள்கிறது.  இதனால் அதன் உண்மையான தன்மை, ஆத்மாவாக இருக்கும் தன்மை வெளிப்படுகிறது.  இங்கு அகத்தியர் மற்றொரு உதாரணத்தைக் கூறுகிறார்.  சேற்றில் பூத்த செந்தாமரை என்று ஒரு வசனம் உண்டு.  எவ்வாறு சேற்றில் இருக்கும் செந்தாமரை அந்த சேறினால் கரை படாமல் இருக்கிறதோ அதே போல் நன்மக்கள் இவ்வுலகில் இருந்தாலும் அதன் கவனச்சிதறல்கள், ஆசைகள் ஆகியவற்றால் தொடப்படாமல் வாழ்கின்றனர்.  இவ்வாறு வாழும் ஞானிகள் இவ்வுலகில் அதிகம் உள்ளனர் என்றும் புலத்தியர் அவர்களைத் தன் அறிவை உபயோகித்துக் கண்டுணரவேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார். 

Saturday 26 April 2014

191. His curse will be like million curses from Sukracharya!

Verse 191

பாடப்பா இப்படிக்குச் சொல்லும் ஆசான்
பரிவான சாந்த குணம் முதற்பா தம்தான்
நாடப்பா இக்குருதான் கிடைப்பதார்க்கு
நல்லோர்க்குக் கிடைப்பதல்லால் மற்றோர்க்கில்லை
சூடப்பா இவர் மனது கோபம் ஆனால்
சுக்கிரனார் சாபமது கோடிக் கேர்க்கும்
காடப்பா இருப்பார்கள் வீட்டில் வாழ்வார்
கைமுறையாய் சமுசாரி உண்ணப்பாரே

Translation:
Sing the praise of the teacher who says so
The merciful peaceful quality, his sacred feet is the prime
Seek this guru son. Who will get such a guru?
Only the good will get him, not others
Adorn it (his sacred feet).  If his mind becomes angry
It is like millions of curses from Sukra
They will remain in the forest, live in a house
Be a householder, see carefully.

Commentary:
Agatthiyar praises a guru who tries actively to impart wisdom to the disciple.  He says that such a guru has immense mercy and grace.  His sacred feet is the prime refuge, the disciple should adorn it. It is very rare to find such a guru, only the good are granted this and not others.  However, if one angers such a guru, his curse will be as detrimental as million curses from the chief of gurus, Sukhracharya.  Such a guru may be a recluse living in the forest or one who lives in a town.  He may be a householder too.  Agattthiyar advises Pulatthiyar to look carefully and identify him.


முன் பாடலில் கூறிய குருவை அகத்தியர் இப்பாடலில் புகழ்கிறார்.  அந்த குரு தனது சீடன் ஞானம் பெறவேண்டும் என்று பெருமுயற்சி செய்கிறார்.  அவர் மிகுந்த கருணையும் சாந்த குணமும் கொண்டவர்.  அவரது திருப்பாதங்களை அந்த சீடன் தலையாய சரணாகப் பற்றவேண்டும்.  இத்தகைய குரு கிடைப்பது எளிதல்ல, நல்லோர்களே இத்தகைய குருக்களைப் பெறுகின்றனர்,  மற்றவர்களுக்கு அவர்கள் கிடப்பது அரிது.  இத்தகைய குருவைக் கோபம் கொள்ளவைத்தால், அவர் சாபமிட்டால் அது குருக்களின் தலையாய குருவான சுக்கிராசாரியார் கோடி சாபங்கள் இட்டதற்குச் சமம் என்கிறார் அகத்தியர்.  இத்தகைய குரு காட்டில் இருக்கலாம், நாட்டில் இருக்கலாம், சம்சாரி என்ற தோற்றத்தில் இருக்கலாம்.  கவனமாகப் பார்த்து அவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று புலத்தியருக்கு அகத்தியர் கூறுகிறார். 

190. Great benefits that await a worthy disciple

Verse 190
குரு சீஷன் இவர்கள் குறிக்குணம்

பிழைத்தாயேல் குருவுக்குப் பரமும் கிட்டும்
பூரணமும் அவர் எனவே புகழ்ந்து கூறும்
பிழைத்தையேல் எந்தனுக்கு முன்னால் முத்தி
பூரணமும் புகழாவார் புதுமை உண்டு
பிழைத்தாயேல் முனிவோர்கள் உன்னைச் சார்வார்
பூதலத்தில் நீயும் ஒரு குருவாய் நிற்பாய்
பிழைத்தாயேல் கும்பருக்குப் பிள்ளை சேரும்
பிழையாட்டால் இருவருக்கும் பாடு தானே

Translation:
If you survive, the guru will attain supreme position also,
The fully-complete (Divine) will also praise him
If you survive, you will attain mukti even before me
The fully complete will also earn praise, there is novelty
If you survive even the munis (those who contemplate) will depend on you,
You will also remain in this world as guru
If you survive Kumbar will get one more child
If you do not survive both of us are in trouble.

Commentary:
In this verse Agatthiyar, through the words of the guru, tells the benefits one would get if one realizes the truth and lives carefully.  The guru will be praised for channeling the disciple in the right path, the Divine will praise him for having rescued a soul, the person will attain liberation, even great saints and contemplators will associate with him, the person will become a guru in this world, and Kumbar or Agatthiyar will gain a child, that is, he will have one more person who will be a part of his lineage, he will be his loved disciple.  If the person does not live so, then both the disciple and the guru are in trouble (as they have not done their job!).


குருவின் வார்த்தைகளாக அகத்தியர் இப்பாடலில் ஒரு மனிதன் குரு கூறியவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் என்னென்ன பலன்களைப் பெறுவான் என்று கூறுகிறார்.  அந்த குருவுக்கு பரம் கிட்டும்,ஒரு உயிரை அவர் நல்வழியில் செலுத்தினார் என்று இறைவன் அவரைப் புகழுவான், அந்த மனிதனுக்கு முக்தி கிட்டும், இறைவனுக்கும் பெருமை ஏற்படும்.  முனிவர்கள் அந்த மனிதனை அண்டுவார்கள், அவன் இவ்வுலகில் ஒரு குருவாக மதிக்கப்படுவான், கும்பர் என்னும் அகத்தியருக்கு ஒரு பிள்ளை கிடைக்கும், ஒரு தகுதிவாய்ந்த சீடன் கிடைக்கும்.  இவ்வாறு இல்லாவிட்டால் அந்த குருவும் சீடனும் பெரும் தொல்லைக்கு ஆளாவார்கள். ஏனெனில் அந்த குருவும் அவரது வேலையைச் சரியாகச் செய்யவில்லை அந்த சீடனும் அவனது வேலையைச் சரியாகச் செய்யவில்லை!

189. Without mincing words he will say...

Verse 189

திட்டுவார் பேய்மகனே பிள்ளாய் பிள்ளாய்
தெரியாத கழுதையடா படித்தில் லாயோ
கட்டுவார் வாயெடுக்க ஒட்டா மல்தான்
கருத்து வந்த சீஷன் என்றால் கன்ன மீதில்
தட்டுவார் தட்டினதோர் சுத்தைப் பார்ப்பார்
சற்று முகம் களைத்தாலும் தடவிச் சொல்வார்
பட்டிலே நில்லாமல் போன துண்டா
பத்திரமாய் இனி பார்த்துப் பிழை என்பாரே

Translation:
He will chide, “You son of a ghost!  Son! Son!
You ignorant donkey, haven’t you read?”
They will tie your mouth without being able to say a word
If it is a disciple who realized what he is saying, on his cheek
He will tap, he will see the reaction
Even if the face falls a little, he will fondle it and say
Like a piece of silk that was cut out
“Remain carefully and live watchfully”.  He will say so.

Commentary:
When the right person comes to the guru and yet does not realize the truth, we saw that the guru will chastise him in private.  He will tell him, “ Are you an ignorant donkey?  Haven’t you read before?”  He will reprimand him in such a way that the person will not be able to open his mouth to utter a word in defense.  If it is a person who understands what the guru is trying to say he will tap him on his cheek and if the person's face flinches a little he will tell him clearly and succinctly, “Remain careful and watchful.”
The expression “saying something as if cutting a piece from silk” is used to indicate that not even one unnecessary word is used in the conversation, no mincing words or beating around the bush.  The guru will say straight in his face, “Live cautiously and watchfully.”

ஒரு மனிதன் தகுதி உள்ளவனாக இருந்தாலும் குருவிடம் வந்தபோதும் உண்மையை உணரவில்லை என்றால் அந்த குரு அவனைத் தனியாக அழைத்துப்போய் அவனுக்கு புத்திமதி சொல்வார்.  அவனிடம், “நீ என்ன அறிவற்ற கழுதையா?  புத்தகங்களில் படித்ததில்லையா?” என்று கோபித்து அவன் அறிவு பெற உதவுவார்.  அவன் குரு கூறியதைப் புரிந்து கொண்டால் அவனது கன்னத்தைத் தட்டி அவனது தளர்ந்த முகத்தைத் தடவி ஆறுதல் கூறி பட்டு கத்தரித்தார்போல “கவனமாக இரு” என்று உபதேசிப்பார்.

188. Actions of a true guru

Verse 188
பொய்யாருடன் பேசாமை நல்ல அனுபோகம்
அம்பானால் தட்டுருவி அகலப் போகும்
அவர் வசனம் அம்புகணை அண்டம் கொல்லும்
கொம்பானால் புளிய மரக் கொம்பு கொம்பு
கோகோகோ முருங்கையிது கொம்போ அல்ல
சம்பாவை பயிர்இட்டோன் முகத்தைப் போல
சாத்திரமும் இருக்காட்டி அருளை ஈவார்
நம்பாமல் போனாலும் அடியைப் பற்றி
நடுக்காட்டில் தனிய வைத்துத் திட்டுவாரே

Translation:
If it is an arrow, it can scrape through the plate and miss the target
His statement, the weapon arrow, it will kill the universe (pierce the universe)
If it is a branch it is the branch of a tamarind tree (special one)
O!O! O! this is drumstick tree, not a branch
Like the face of one who has sown the samba paddy
Sastra and if not grace, he will bestow
If it is not believed, holding the base
Will chastise in the middle of the forest, in private.

Commentary:
This verse talks about the lengths to which a good guru will go to make a worthy person get wisdom.  The words of such a wise one is like an arrow. Even an arrow may miss its target but the words of the wise will kill the universe (make duality disappear/ pierce the universe).  His words are elaborate like a tamarind tree.  It is straight like a drumstick tree bark. He will grant the worthy person all the sastra or at least his grace.  If the person does not believe what he hears, he will take hold his base (may be muladhara? Is it foot?) he will chastise him in private, in the middle of a forest holding him alone.


தகுதி வாய்ந்த ஒருவர் வந்தால் ஒரு நல்ல குரு அவனுக்கு ஞானத்தை அளிக்க எந்த அளவுக்கு முயலுவார் என்று இப்பாடல் காட்டுகிறது.  இந்த குருவின் வார்த்தை ஒரு அம்புக் கணையைப் போன்றது.  அம்பாவது தனது இலக்கை அடையாமல் வழி தவறலாம். ஒரு குருவின் வார்த்தை ஞானம் என்னும் இலக்கைத் தவறவிடவேவிடாது.  அது புளிய மரத்தின் கிளையைப் போல பரந்து விரிந்தது.  முருங்கை மரத்தைப் போல நேரானது.  அந்த குரு அம்மகனுக்கு எல்லா சாத்திரங்களையும் அருளுவார்.  அது இல்லாவிட்டாலும் தனது அருளையாவது தருவார்.  அம்மனிதன் அக்குருவையும் அவர் கூறுவதையும் நம்பாவிட்டால் அவனைத் தனியாக அழைத்துப் போய் அறிவு ஏற்படுமாறு திட்டுவார். 

187. Behavior of the wise

Verse 187

கொள்வாரே குறும்பர் வந்து எதுத்தாரானால்
குறியவர்கள் சொன்னாலு மிவரும் சொல்லார்
கள்வாரே கள்ளர் வந்து எதுத்தாரானால்
கையில் ஒன்றும் இல்லை என்று உதறிப்போவார்
தள்வாரே சமையமதம் கொண்டோர் வந்தால்
சாத்திரமும் நான் அறியேன் சோற்று வேஷம்
விள்வாரே குறியாளர் வந்தாரானால்
மெல்லவே ஓர் வசனம் அம்பும் ஆச்சே

Translation:
If the troublesome ones oppose, they will listen
Even if they talk about the signs, these people (good ones) will not talk
They will hide it if thieves come and fight
They will show empty hand and go away shaking it
They will push it away if religious fanatics approach
“I do not know sastra, I am adorning a garb only to get food”
They will say.  When the right person, one with focus comes
Quietly they will say a statement which will be like an arrow.

Comaptmentary:
Agatthiyar describes a wise soul some more here.  Such people will avoid arguing with trouble makers, thieves and religious fanatics.  They will complete deny any knowledge or wisdom.  However, if the right person comes they will say only one statement.  That statement will be so sharp and pointed that it will reach the target, show wisdom, like an arrow.


நல்ல குணங்களைக் கொண்டோரைப் பற்றி அகத்தியர் மேலும் கூறுகிறார்.  அத்தகையோர் கலகக்காரர்கள், சமய மதம் பிடித்தோர், ஞானத்தையும் புத்தகங்களையும் திருட முனைவோர் ஆகியோர் வந்தார் அவர்களுடன் வெட்டிப் பேச்சு பேச மாட்டார்கள், விவாதிக்க மாட்டார்கள்.  தம்மிடம் ஒன்றுமில்லை என்று கையை விரித்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவார்கள். ஆனால் உண்மையான விருப்பத்தையும் ஏகாக்கிரக சிந்தனையையும் கொண்டவர்கள் வந்தால் அவர்களுக்கு மெல்ல, ஒரு உபதேசத்தை அருளுவார்கள்.  அந்த வார்த்தை அம்பைப் போல தனது இலக்கை அடையும், ஞானத்தைக் காட்டும்.

Friday 25 April 2014

186. Life of a good person

Verse 186
வீணப்பா இவன் வீணன் உதவா வீணன்
வெள்ளாட்டி பயல்களிவர் மெத்த உண்டு
ஆணப்பா இவர்களை நீ கண்டாயானால்
அகற்றிவிடு மலம் போல அகலத்தள்ளு
காணப்பா நல்ல பிள்ளை செய்கை கேளு
கால் அடக்கி சுழிமேவி கருத்தொன்றாகி
சாணப்பா வந்தக்கால் சமையம் சொல்லிச்
சமையம் விண்டு வந்தாக்கால் கைக்கொள்வாரே

Translation:
Waste, he is a waste, a wastrel one who is of no help,
There are many servants (low-life) like him,
You the valorous one, if you see such people
Discard them as if they are offal, push them far away
See son, listen to the actions of a good person
Controlling the breath, spreading over the sushumna, making their focus singlepointed
Revealing the path when the worthy comes along
Explain the religion when they come and remain so.

Commentary:
In this verse Agatthiyar describes the life of a worthy person.  After advising Pulatthiyar to discard unworthy folks he tells him that a worthy person will remain controlling his breath and directing his consciousness through the sushumna and having single pointed attention.  He will reveal the path and the philosophy if another worthy person comes along.

ஒரு நல்ல மனிதன் எவ்வாறு வாழ்வான் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  முதலில் வீணர்களை மலம் போலத் தள்ளிவிட வேண்டும் என்று அறிவுறுத்திய அகத்தியர் ஒரு நல்ல மனிதன் தனது மூச்சைக் கட்டுப்படுத்தி, சுழுமுனையை மேவி தனது கருத்தைக் குவித்தவனாக இருப்பான்.  தகுந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு தனது பாதையை, சமயத்தைக் கற்றுக்கொடுப்பான் என்கிறார் அகத்தியர். 

Thursday 24 April 2014

170-185 A wasted yogi

Verse 170
குறுவினார் கோழியைப் போல் குப்பை சீச்சீ
குறவளையல் கட்டி வைக்கும் கதையைப் போல
தளுவினார் குறவளையல் ஈயைப் போல
தான் அவன்தான் இருந்த இடம் அறியாமற்றான்
புளுவினார் பேடு விட்டுப் பிரிந்து தானால்
பின்னையொரு புறாவுடனே பொருந்துமோ சொல்
களுவினால் நல்லறிவு கற்றோன் ஆனால்
....................................................
Three palm leaves missing in the original

நக்கிவயம் சொல்வான் இப்படியே நேமம் காமம்
மாளுமட்டும் புலம்பியே விழுவான் வீணே (185)

Translation:
He clucked the throat like a hen, garbage, fie!  Fie!
It is like the story of tying up the vocal chords
They held the vocal chords like a fly
Without the knowing where he is, the place.
He lied.  When a dove separates from its pair
Will it go with another pigeon
Even though he learnt good things through studies
……………………..
He will utter namacivaya, lament about love and desire
Until he dies, and fall down wastefully.  (verse 185)

Commentary:
It is very unfortunate that the verses from 170 (a few lines ) to verse 185 are missing in the palm leaf manuscript. 
Let us see what the early part of verse 170 says.  This is a continuation of the yogi who tries to plug the uvula with his big finger.  Agatthiyar says that he will cluck like a hen trying to tie up his vocal chords and make a sound like a fly.   He will lose his sense of location, he will not know where is consciousness is located and he will lie saying that he has attained wisdom. The next line is interesting. Pigeons are famous for remaining as a pair throughout their life.  They will not switch their partners at will.  Similarly a yogin will not go after minor pleasure when he is trying to unite with the Divine.  Agatthiyar remarks about this.
The concluding part of verse 185 talks about a yogi who is also wasting his life not attaining the jnana.  Agatthiyar says that he will die only talking about namacivaya, love and desire.  He would not have attained the true wisdom. 
These verses show the importance of preserving ancient manuscripts.  The wisdom offered by these fifteen verses are lost forever due to our negligence.

பாடல் 170 கடைசி வரிகள் முதல் பாடல் 185 வரை உள்ள ஓலைச்சுவடிகள் நூலகத்தில் இல்லை.  இது நமது துரத்ருஷ்டம் தான்.  இதில் அகத்தியர் உரைத்திருந்த மெய்ஞ்ஞானம் உலகத்தோருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் அழிந்துவிட்டது.  ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கவேண்டியது எவ்வளவு அவசியம் என்று இது நமது முகத்தில் அறைந்து காட்டுகிறது.
பாடல் 170 ல் அகத்தியர் உண்ணாக்கை பெருவிரலால் மூடி அமிர்தத்தை கீழே இறக்க முனையும் யோகியைப் பற்றி மேலும் தொடருகிறார்.  இந்த யோகி தனது குரல்வளையைக் கட்ட முனைவதால் ஒரு கோழியைப்போல கொக்கரிக்கிறான், ஒரு ஈயைப் போல சத்தமிடுகிறான்.  இவனைக் குப்பை என்று தள்ளவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதனை அடுத்து அவர் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறுகிறார்.
புறாக்கள் தமது ஆயுள் முழுவதும் ஒரே ஜோடியுடன் இருக்கும்.  ஒரு பேடு போய்விட்டது என்றால் மற்றொரு புறாவைத் தேடாது.  அதேபோல ஒரு யோகி இறைவனுடன் சேரவேண்டும் என்ற ஒரே எண்ணத்தைக் கொண்டவனாக, வேறு இன்பங்களைத் தேடாதவனாக இருப்பான்.

பாடல்   185 கடைசியில் அகத்தியர் பயனற்ற முறைகளில் ஈடுபட்டு தனது உயிரை விடும் ஒரு யோகியைப் பற்றிக் கூறுகிறார்.  இந்த யோகி நமசிவாயம், நேயம், காமம் என்று பெரிதாக தனது வாழ்க்கையின் இறுதிவரை புலம்பி மாள்வான் என்கிறார் அகத்தியர்.

Wednesday 23 April 2014

169. Auterities- not the shortcut

Verse 169
தானப்பா ஒருகாலில் தவம் செய்வோரும்
தலமதிகம் நாடதிகம் தேடுவோரும்
தேனப்பா சாராயம் குடித்திட்டோரும்
தெருவிலே பல தேசம் திரிந்திட்டோரும்
காணப்பா சிவதீர்த்த பூசையோரும்
கறுத்த மண்ஆற்றுமண் லிங்கத்தாலும்
கோனப்பா சிவபூசை அனந்தம் கோடி
குறுக்குவழி தெரியாமல் குறுவினாரோ

Translation:

Those who perform austerities standing on one leg
Those who seek several sacred sites and places
Those who drink toddy as honey
Those who roamed around several lands
See son, those who perform ablutions to Siva
With linga made of black sand, river sand
Are several millions.  Without knowing the supreme siva puja
They suffered without knowing the shortcut.

Commentary:
Agatthiyar talks about some other people who spend a lot of time in wasteful austerities but do not attain wisdom.  Some people stand of one leg for a very long time and perform tapas.  Some go to all sacred sites and temples.  Some drink toddy and say that in their ineberated state they are raising their consciousness beyond their body level.  Some give up their family life and roam around the world as mendicants as if that would grant them the wisdom.  Some perform elaborate puja rituals such as performing abishekam to the linga.  Agatthiyar says that these people are only suffering without knowing the shortcut, the right path for wisdom.

We should note something here.  Agatthiyar is not dismissing austerities per se.  He is only telling us that they do not grant us wisdom, quickly and easily.

இப்பாடலில் அகத்தியர் பயனற்ற பல்வேறு தவங்களை மேற்கொள்பவர்களைப் பற்றிப் பேசுகிறார்.  சிலர் ஒரு காலில் நின்றுகொண்டு தவம் செய்வர்.  (சிலர் அதையும் தீயின் நடுவில் செய்து தவம் புரிவர்).  சிலர் புனிதத் தளங்களையும் கோயில்களையும் தீர்த்தங்களையும் தேடித்தேடி ஓடுவர்.  இதைத்தான் சிவவாக்கியர் கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் உம்முளே என்று பாடுகிறார்.  ஒரு சிலர் சாராயத்தைக் குடித்துவிட்டு தான் அவ்வாறு தனது விழிப்புணர்வை உடல் தளத்திலிருந்து மேலே ஏற்றுவதாகக் கூறுவார்.  சிலர் தமது குடும்ப வாழ்க்கையை விட்டு ஓடி பண்டாரமாக சுற்றித் திரிவர்.  சிலர் மிக விரிவாக சிவபூஜை, லிங்கத்திற்கு அபிஷேகம் என்று தமது நேரத்தைச் செலவிடுவர். இதை ஊறுபட்ட கல்லின் மீது வண்டின் எச்சிலை ஊற்றுவது என்று சிவவாக்கியர் கூறுகிறார்.  இவ்வாறு ஞானத்தைத் தேதுபவர் கோடி கோடி என்று அகட்ட்தியர் கூறுகிறார்.  இந்த மக்கள் ஞானத்தைப் பெறுவதற்கான குறுக்கு வழியை அறியாமல் தத்தளிக்கின்றனர் என்கிறார் அகத்தியர்.

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  தவங்கள் தவறானவை என்று அகத்தியர் கூறவில்லை.  அவை எளிதாக, விரைவாக ஞானம் பெற உதவாது என்றுதான் கூறுகிறார்.  

Tuesday 22 April 2014

168. Various yogic practices

Verse 168

இருந்திட்டார் நாசிவிட்டு நாசி மாறி
எண்ணி எண்ணி நாசிதனை விழுங்குவாரும்
பிரிந்திட்டு கண் மூக்கைப் போற்றுவாரும்
பெருவிரலால் அண்ணாக்கில் ஏற்று வாரும்
பிரிந்திட்ட தண்ணியினுள் மூழ்குவாரும்
பத்திரமாய்க் குழிவெட்டிப் பதுங்குவாரும்
சரிந்திட்டக் குலை வாழை கவிழ்ந்தாப் போல
தத்தளித்து உலகோர்கள் தவித்தார் தானே

Translation:
They remained alternating between the nostrils,
Counting the breaths and holding it
Splitting away, those who hold the eyes and nose
Those who raise it to the uvula with the big toe
Those who submerge themselves in water
Those safely dig a hole and hide there
Like the fully mature branch of banana tree that fell down
Struggling, people of the world suffered so.

Commentary:
Agatthiyar lists other practices in this verse.  People practice breath control like nadi shuddhi or regulating the breath through alternate nostrils. They practice inhalation, retention and exhalation for specific counts (purakam, kumbakam and rechakam).  Some practice mudras where they close their eyes and nose with fingers and retain the breath within (yoni mudra etc).  Some try perform austerities under water and under the ground.  Agatthiyar says that people suffer in these ways and fall down like a banana tree that collapses after maturing completely.


இப்பாடலில் அகத்தியர் மக்கள் மேற்கொள்ளும் பல்வேறு வகையான தவங்களைப் பற்றிப் பேசுகிறார்.  சிலர் நாடி சுத்தி போன்ற பயிற்சிகளின் மூலம் மூச்சை நாசி மாற்றி நாசியில் செலுத்துகின்றனர்.  சிலர் பூரகம் கும்பகம் ரேசகம் எனப்படும் உள்மூச்சு மூச்சற்ற நிலை, வெளி மூச்சு என்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் மூச்சை விடுகின்றனர்.  சிலர் யோனி முத்திரை போன்ற முத்திரைகளை மேற்கொண்டு மூக்கையும் கண்ணையும் விரல்களால் பொத்திக் கொள்கின்றனர்.  சிலர் நீரின் அடியிலும் நிலத்தின் அடியிலும் புகுந்து தவம் புரிய முனைகின்றனர்.  இவ்வாறு மக்கள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு குலை தள்ளிய வாழை சரிவதைப் போல தவித்துச் சரிகின்றனர் என்கிறார் அகத்தியர்.

Monday 21 April 2014

167. Agatthiyar warns about the dangers of kundalini yogam

Verse 167
வாசியடக்கும் வகை வாசியினால் கெட்டர்களைச் சொல்லியது
காணப்பா மூச்சடக்கிச் செத்தோர் கோடி
கண் தெறித்துச் சூலையிலே மாண்டோர் கோடி
தோணப்பா மெய் மறந்துப் போனார் கோடி
சுற்றெழும்பி கெடத்தோடே விழுந்தோர் கோடி
ஊணப்பா உண்ணாக்கால் அடைப்போர் கோடி
உள்ளடக்கிக் கோழியைப்போல மடிந்தோர் கோடி
சாணப்பா முழம் அப்பா எழுந்தோர் கோடி
தப்பிவிட்டு அற்பர்களாய் இருந்திட்டாரே
Translation:
See son, millions dies trying to control their breath
Millions have died with their eyes popping out and getting ulcers in the stomach
Think about it son, millions have forgotten about their body
Millions have died jumping up and falling down with the pot (body)
See son, millions have blocked their uvula
Blocking it within millions have died like a hen,
Millions have ascended a finger span, a hand span
Letting it escape they remained as mean-minded people.

Commentary:
After warning us that one’s skull will explore if the vãsi yogam is practiced without proper guidance and preparation, Agatthiyar lists other dangers that may happen for those who attempt kundalini yoga.  He says that millions have died (1) controlling their breath, (2) had their eyes pop out from the pressure, (3) had suffered ulcers of the stomach (it is called soolai as it feels like being poked with a spear) , (4) had lost the sensation of their body- lost their mind so that they do not recognize that they have a body, (5) had jumped up and down with the increased energy and fallen down, (6) had died like a croaking hen trying to block their uvula which is said to make the divine nectar descend, (7) had managed to raise their kundalini Shakti marginally and remained as mean-minded people unable to make this happen again or to take it further.


முந்தைய பாடலில் சரியான அறிவும் வழிகாட்டலும் இல்லாமல் குண்டலினி யோகத்தை மேற்கொள்பவர்கள் தமது கபாலம் வெடித்து சாவர் என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் மேலும் பல ஆபத்துக்களைப் பட்டியலிடுகிறார்.  கோடிக்கோடி மக்கள் இப்பயிற்சிகளினால் (1) தமது மூச்சை அடக்கி மாண்டுள்ளனர், (2) கண்கள் தெறித்து இறந்துள்ளனர், (3) சூலை நோய் எனப்படும் கடுமையான வயிற்றுப் புண்களால் மரணத்தைத் தழுவியுள்ளனர் (வயிற்றில் சூலத்தால் குத்துவதைப் போல வலிப்பதால் இந்த நோய் சூலை என்ற பெயரைப் பெற்றது), (4) தமது உடலுணர்வை இழந்துள்ளனர், தாம் உடல் பெற்றுள்ளோம் என்பதையே அறியாமல் இருக்கின்றனர், (5) (அதிகரித்த சக்தியினால் ) மேலும் கீழும் குதித்து உடலுடன் கீழே விழுகின்றனர், (6) உண்ணாக்கை மறித்து (அமிர்தம் ஏற்பட) கோழியைப் போலக் கொக்கரித்து இறந்துள்ளனர் (7) தமது குண்டலினி சக்தியை ஒரு சாண் அல்லது முழம் மட்டுமே எழுப்ப சக்தி பெற்று அதையும் இழந்துவிட்டு அற்பர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் கூறுகிறார். 

166. Kumbamuni talks about dangers of kumbakam

Verse 166
பொறுக்காமல் போவரால் புத்தி போச்சு
புடம் இட்ட சொர்ணம்போல் மனதுள் சேரு
குறுக்காமல் மெய்ஞ்ஞானம் விளையப் பாரு
கோடிரவி கண் கூசும் கூடி வாழு
இறுக்காதே வாசிதனை விழுங்கி உள்ளே
இசை கேடு வந்ததென்றால் கபாலம் போகும்
மறிக்காதே வழியறிந்து மறித்தால் நிற்கும்
வந்துமே வாராது போலாம் காணே

Translation:
Those who couldnot wait lost their intellect
Collect it within the heart like heat processed gold
See the meijnanam grow without any shrinkage
Millions of suns!  Eyes will glare, live associated (with it)
Do not constrict the breath (vaasi) swallowing it within (holding it within)
If it does not suit, the skull will explode
Do not inhibit it, if inhibited with knowledge it will stop
It may occur and immediately be lost.

Commentary:
In this verse Agatthiyar describes the fruits of the knowledge from meijnanam.  He says that thos who cannot wait for it will lose their mind.  (This does not mean that they will become crazy!)  The intellect or the questioning mind tries to question everything.  It tries to find an explanation for everything, rationalize everything.  It does not realize its limitations.  Anything that does not meet with its rules are rejected as illogical or irrational.  To experience true spirituality one should go beyond the intellect.  This is what Agatthiyar means by ‘those who could not wait lost their intellect’.  Agatthiyar advises Pulatthiyar that he should contemplate upon the meijnanam in his heart.  This heart is not the material heart but the spiritual one, the site of our soul, the mind.  This heart should be free of anything evil, it should be pure like purified gold.  Agatthiyar does not say pure gold he says purified gold.  The heart is not pure to begin with.  It has to be purified through regular, carefully watched sadhana.  Then one will realize that the meijnanam, true wisdom, is growing without any stunting.  Stunting means, misconceptions, erroneous twists, misinterpretations etc all born from ahamkara.  The result is the brilliance of millions of suns, the supreme consciousness.  Agatthiyar advises Pulatthiyar to live in this state, he says ‘koodi vaazh’ means join it and live. 

Next, Agatthiyar is advising Pulatthiyar about the dangers in kundalini yoga.  He says that if one tries to hold the breath within without proper training one’s skull will explode.  One should not practice kumbaka or retention of breath without proper knowledge.  Even if it is practiced with knowledge it may occur only for a moment. 


இப்பாடலில் அகத்தியர் மெய்ஞ்ஞானத்தால் ஏற்படும் பலன்களைக் கூறுகிறார்.  இவ்வாறு இந்த அறிவைப் பெறவேண்டும் என்று பொறுக்கமுடியாமல் இருப்பவர், தீவிர ஆசை கொண்டவர்கள் தமது புத்தியை இழப்பர்.  (அவர்களுக்குப்பைத்தியம் பிடித்துவிடும் என்று எண்ணவேண்டாம்!).  புத்தி என்பது விட்டாமல் கேள்விகேட்கும் ஒன்று, எல்லாவற்றிற்கும் காரணத்தைக் கண்டுபிடிக்க முனையும் ஒரு ஆயுதம்.  ஆனால் அது எல்லைக்குட்பட்டது.  அதற்குப் புரியாக விஷயங்கள் பல உள்ளன.  ஆனால் அது தனக்குத் தெரியாதவற்றை இல்லை என்று சாதிக்கிறது, அவற்றைத் தள்ள முனைகிறது.  ஆனால் ஆன்மிகம் என்பது புத்திக்கு அப்பாற்பட்டது, ஒரு புரிதல், ஒரு உணர்வு.  அதனால் மெய்ஞ்ஞானம் பெற்றவர் புத்தியை இழக்கின்றனர், அளவுகடந்த விழிப்புணர்வைப் பெறுகின்றனர்.  புத்தி என்பது பிரகிருதியால் ஆனது, அழிவுக்குட்பட்டது.  விழிப்புணர்வு, பருப்பொருள் சார்ந்த உலகைக் கடந்தது. 

இந்த விழிப்புணர்வைப் பெற்றவர்கள் தமது மனம் தங்கம் போல புடமிட்டிருப்பதனால் அங்கு மெய்ஞ்ஞானம் எவ்வித குறுக்கமும் இல்லாமல் வளருவதைக் காண்பார்கள்.  குறுக்கம் என்பது குறைபாடு, தவறான விளக்கங்கள், கருத்துக்கள், புரிதல் இல்லாமை ஆகியவை. அதன் ஒளி கோடி சூர்யப் பிரகாசம் எனபதைப் போல கண்களைக் கூசச் செய்வது.   இத்தகைய விழிப்புணர்வுடன் கூட வாழுமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

அடுத்து அகத்தியர் புலத்தியருக்கு குண்டலினி யோகதின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கூறுகிறார்.  சரியான பயிற்சி இல்லாமல் ஒருவர் வாசியோகம் செய்ய முனைந்தால், மூச்சைக் கும்பகத்தில் அடக்கும்போது கபாலம் சிதறிவிடும் என்று அகத்தியர் கூறுகிறார்.  சரியான வழிகாட்டலோடு ஒருவர் கும்பகத்தை முனைந்தால் கூட அது நொடிப்பொழுது ஏற்பட்டு அதன்பின் மறைந்துவிடும் என்கிறார் அவர்.


Sunday 20 April 2014

165. Like a stork waiting at the threshold...

Verse 165
நூலில் பொருள் அறியவும்
அறியாமல் சஞ்சரித்து உலகத்துள்ளே
அனைவோரும் தூஷணிப்பார் அறிந்து கொள்ளு
குறியாமல் போவாயேல் குருடாய்ப் போவாய்
குருநிஷ்டை தில்லாது குருட்டு வேடம்
பிறியாமல் உலகத்தே பறை செய்யாமல்
பொய் ஒன்றும் சொல்லாமல் அருளைத் தேடு
பறிவாசல் காத்து நின்ற கொக்கு போலப்
பாடலிலே பொருள் கண்டால் பொறுக்கிக் கொள்ளே

Translation:
To get knowledge from the book
Ignorantly roaming around in the world
Everyone will heap insults, know this.
If you go without noting you will become blind
The garb of a blind without contemplation upon the guru
Without leaving it, without announcing/ telling
Without lying search for the grace
Like the stork that waits at the threshold
Pick up the meaning if you see knowledge in the song.

Commentary:
This is a great verse which tells us how to gain knowledge from meijnanam.  Previously Agatthiyar told us to not merely read this book but to process it within.  Now he tells us how to gain knowledge from it.  He tells that one should not live in the world, merely roaming around it, without knowing about this book.  Such a life will only earn dishonor and insults.  It is like the life of a blind person as he does not see that which should be seen.  Contemplating upon the guru will remove this blindness as the Guru will show the wisdom.  Agatthiyar advises that one should remain with the quest for knowledge, never go away from the book, never talk about it to another or announce his meager knowledge he gained from the book to another.  One should never tell lies but to search for grace and wisdom in the book carefully like a stork waiting for the right fish.  When one realizes the wisdom found in the book one should grab it, pick it, collect it immediately.


இப்பாடல் மெய்ஞ்ஞானம் என்னும் இந்நூலிலிருந்து எவ்வாறு ஞானத்தைப் பெறுவது என்று கூறுகிறது.  அறிவற்றவராக ஒருவர் இவ்வுலகில் சுற்றிக்கொண்டிருந்தால் உலகத்தோர் அவரைப் பழிப்பர்.  இந்த நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை அறியாவிட்டால் ஒருவர் குருடுதான்.  குரு நிஷ்டை ஒன்று மட்டுமே இந்த குருட்டுத்தனத்தை விலக்கக்கூடியது.  அதனால் ஒருவர் இந்த நூலைவிட்டுப் பிரியாமல், இதில் உள்ளவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையைவிட்டுப் பிரியாமல், இந்த நூலைப் பற்றியும் தான் எவ்வளவு அறிவு பெற்றுள்ளோம் என்பதைப் பற்றியும் பேருரை நிகழ்த்தாமல் பொய் சொல்லாமல் அருளைத்தேடவேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கைப் போல இந்த நூலில் தனக்கேற்ற ஒரு கருத்து தென்பட்டால் அதை உடனே பொறுக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.