Wednesday, 2 April 2014

126. Discard them like dogs

Verse 126
காணப்பா இவனுடைய கிரமம் என்ன
கண்டோர்கள் தனை அடுத்துத் தொண்டு செய்வான்
ஊணப்பா வாதம் என்றால் உற்றுக் கேட்பான்
ஓஓஓ ஞானம் என்றால் அகலப்போவான்
வேணப்பா ஒருநாளும் உதகாணையா
வெள்ளாட்டிப் பயல்களுடன் சேர வேண்டாம்
ஆணப்பா உன்னிடத்தில் வந்தாலுந்தான்
அகற்றும் நாய் அது போல அகற்றுவாயே

Translation:
See what this man's method is.
He will serve those who have realized
He will listen carefully when there is an argument
He will go away if it is wisdom
Not needed, he will never help
Do not associate with such useless fellows
Even if they come near you
Discard them as if they are dogs.

Commentary:
This category of cheats that Agatthiyar describes loves to serve popular people who engage in empty arguments.  When there is exchange of real knowledge they are not interested.  Agatthiyar says that such people are useless, they will never be of any help.  He advises Pulatthiyar to get rid of them as if they are dogs.


அகத்தியர் இப்பாடலில் விளக்கும் மக்கள் வெட்டிப் பேச்சு பேசுபவர்களுக்குத் தொண்டு செய்து அவர்கள் வாதிடுவதைக் கேட்பார்.  ஆனால் உண்மையான ஞானம் பெறுவதில் அவர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை.  இத்தகைய மக்கள் பயனற்றவர்கள், பிறருக்கு உதவமாட்டார்கள் என்றும் அவர்களை நாயை விலக்குவதைப் போல விலக்க வேண்டும் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார். 

No comments:

Post a Comment