Tuesday 8 April 2014

147. The gluttonous yogi

Verse 147
பூரித்துப் பூவையர்க்கு ஈவான் பின்பு
புரிசமுடன் குரு பாத்திரம் நிறையக் கொள்வான்
மாரித்து வந்தோர்க்கு கொடுத்துத் தன்போல்
மறம்கெட்டு நிலை கெட்டுப் புலம்பச் செய்வான்
காரித்து வந்தக் கால் வாந்தி செய்வான்
கருத்துகந்து சுழி நாடிக் கொள்ளா தாலே
வாரித்து சுவையோடே உண்டு தேர்ந்து
மதியோடே இருக்காமல் மாள்வான் காணே

Translation:
He will offer to women with great pleasure
He will have in the vessel of the Guru piling it high
Giving greatly to those who come to him
And make them lose valor and lament like him
When concentration happens he will vomit
As he has not developed his capacity to arose the sushumna
Eating greatly and enjoying
He will die without being mindful, see.

Commentary:
The showy yogi described in the last verse will focus only on food.  He will offer food to everyone in great amounts and he will consume it also in great amounts.  If he tries to raise his consciousness he will throw up as he has not developed his capacity to raise the kundalini through the sushumna.  Such a yogi will spend all his time nurturing his tongue and die without ever being mindful.


மேலே கூறிய “உணவே பிரதானம்” என்று எண்ணும் யோகியைப் பற்றி இந்தப் பாடலில் அகத்தியர் கூறுகிறார்.  தானும் அதிக அளவில் உண்டு தன்னைப் பார்க்க வருபவருக்கும் உணவை அளித்து அவரைத் தன்னைப் போல மதி மயங்கச் செய்வான்.  தியானத்தை மேற்கொள்ள முனைந்தால் அந்த யோகி தனது சுழுமுனை நாடியைத் திறக்காததால் வாந்தி எடுப்பான்.  இவ்வாறு அவன் சுவையான உணவை உண்டு மதி கேட்டு முடிவில் மாண்டு போவான்.

No comments:

Post a Comment