Thursday 3 April 2014

128. Good to be amiable- ஊரோடு ஒட்டி வாழ்

Verse 128
ஒப்புரவான் சீஷன்
மேலப்பா வெகு மேலு மேலு மேலு
மென்மேலு மேலப்பா எல்லாம் நீக்கி
காலப்பா சமுசார கர்ம தர்மம்
கண்டோர்க்கு அன்னமொடு தவதானம்
ஆலப்பா ஆலயங்கள் தீர்த்தம் ஆடி
அகுதிபரதேசியார்க்கும் ஐயோ வென்றும்
சேலப்பா சிவன் செயலே அல்லா துண்டோ
 தேசத்தோ டொத்திருக்க மிகவும் நன்றே

Translation:

The amiable disciple

Superior, Son, Superior, Superior
Supreme, superior, removing everything
The air, the samsara, karma and dharma
Food, austerities and offerings to everyone seen
Visiting temples, bathing in sacred waters
For destitute and vagabonds, feeling sorry for them
Actions, Son, Are there any that are not the actions of Sivan
Remaining sociable is very good.

Commentary:
Agatthiyar says that one need not become a mendicant.  It is good to live in this world, with a friendly attitude, performing karma, dharma, austerities, offering food and other things to the needy, visiting temples and bathing in sacred water bodies.  All these actions are good as there is no action in this world that is not the action of God.


தான் இதுவரை உலகிலுள்ள பல்வேறு மக்களைப் பற்றியும் அவரது குணங்களைப் பற்றியும் பேசியதால் ஒருவர் இந்த உலக வாழ்க்கையை விட்டு சந்யாசி ஆகவேண்டும் என்பதில்லை.  உலகோடு ஒட்டி வாழ்வதே நல்லது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  ஒருவர் இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு, கர்ம தர்மங்களை செய்து கொண்டு, பிறருக்கு உணவும் பிற பொருட்களையும் ஈந்து, கோயில் குளங்களுக்குச் சென்று பரதேசிகளுக்கும் பிறருக்கும் பரிதாபத்துடன் உதவி செய்து கொண்டு வாழ்வது நல்லது என்கிறார் அவர்.  ஏனெனில் உலகில் நடைபெறும் எல்லா செயல்களுமே சிவனின் செயல்கள் தான்.

No comments:

Post a Comment