Thursday, 17 April 2014

155. Agatthiyar and tantric sex

Verse 155           

புணர்ச்சி
ஆறாக விரும்புவதும் தள்ள வேண்டாம்
ஆகாரம் உலகத்தோர் வேணும் என்பார்
கூறாகத் தள்ளுவது மிகவும் நன்று
கூடினால் விந்து விழாதிருத்தல் நன்று
ஏறினால் இது பாதை ராஜ யோகி
இது விட்டு விழுவதெல்லாம் கெடுதி ஆகும்
சாறினால் வெகுக்கடினம் கல்பக்கூறு
சையோகம் விந்துவிட்டால் கெடுதி தானே

Translation:
                                                                            copulation

You do not have to give up wishing to become the sixth/the path
The Worldly would say “we need nourishment/enjoyment”
Giving it up completely is very good
Otherwise, if there is coitus, it is good if the semen is not expelled
If it climbs up, it is the path of the raja yogin
Leaving this, if the semen falls, it is only destruction,
Kalpa is very difficult with the fluid,
Intercourse where the semen is released is very bad, indeed.

Commentary:
Agatthiyar is talking about a very important concept in this verse.  This is the third method to attain kaya siddhi or the perfected body.  It is called ulta sadhana or contrary practice.  It is also called pariyanga yoga or the yoga performed on a cot.  Another name for this is maithuna yoga.   Thirumular in his Tirumandiram third tantra section 19 talks about this yoga (mantiram 825-844).  This concept should be understood properly so that one is not deluded by the claim that tantra means sex.

Pariyanga yoga is not tantric sex or worship through sex.  It is the transmutation of the yogin’s sexual energy without engaging in the act of sex.  Tirumular says that when the silvery lust of the man meets the liquid gold (that of woman) then both of them bemoan as they have lost the chance to attain spiritual heights.  However, if the “goldsmith closes with coal, the way of the silver melting and going to the gold, the rising fire is channeled through the funnel and he keeps it controlled at the uvula”. 

The semen is known as bindu, the source of life.  It is called bodhicitta in Buddhism.  Immortality can be achieved if the usual downward flow of semen is reversed and made to flow up through yogic practices.  This method is called paravritti.  The most restless rasa in our body is the semen.  If it can be turned into a hard element, vajra, its restless character is destroyed.  This is similar to the way of transforming liquid mercury into a solid.  The Yoga Upanishad says that when the flow of semen is arrested the body will get a special fragrance.  The Natha siddhas practiced this ulta sadhana.  This method is considered to be the reversal of manifestation or reabsorption of the cosmos.  This is the samhara of Siva. 

When the flow of the semen is controlled from its normal behavior of flowing downwards, it becomes ojas or the spiritual energy.  Transmuted ojas becomes tejas or effulgence.  Reversing the direction of flow of the semen is called urdhva rethas.  In Tamil it is called vindhu marittal.  Dr. T.N.Ganapathy has written an article about this in his book, Essays on Tirumandiram (Babaji’s Kriya yoga order of Acharyas Publication).  He says that the yogic technique of non-spilling of the semen is called skanda.  As long as the control of semen is not attained, skanda is not born.  Bogar has mentioned this yoga in his ashtanga yogam and Saint Ramalingar in Anubava maalai.  The term ashtanga yoga itself is interesting.  It means eight limbs.  It does not mean the eight limbs, the two hands and two legs of the each partner in the coupling as it would then be bhoga and not yoga!  It is that the four anthahakarana or internal organs of the couple- manas, buddhi, ahamkara and citta becoming one between the couple.   Ramalingar says that this is the supreme love between the lover and the beloved.  The human soul is the lady while the 
Supreme Lord is the beloved.  They embrace in the pure state of supreme love without any physical aspect attached to it.  This is referred to in Buddhism as yuga naddha.  The erotic overtures of Jayadevar’s Gita Govindam also reflects this sentiment. 

Three types of yoga are mentioned in the Siddha parlance.  They are the black yoga, grey yoga and white yoga.  Black yoga is when the semen is released.  Grey yoga is when the semen is released sometimes and withheld sometimes.  White yoga is when the semen is withheld at all times.  The white yoga is the supreme yoga.  This supreme technique has unfortunately deteriorated to physical gymnastics and lost its value.  This method beongs to the vamachara where the term vama refers to a lady of kundalini.   

Tirumular has given the specifics of this process in the Tirumandiram.  In verse 521 he says, “He sports the garland of the white skulls, his spreading locks are matted, he supports Universe vast, He fills space in eight directions, on the throat of his downward directed face darkness suffuses, they say he swallowed poison, they are ignorant, they know not the truth.” When the sexual energy Shukla is directed below in this body space it is dark.  When it is sublimated above the throat it becomes the white light that illuminates the body.  Tirumular remarks “Without knowing this concept people say that Siva has swallowed poison.  They are ignorant, they know not the truth.”  Siva sublimates the dark physical energy above the ajna cakra.  Siva’s form as Neelakantha represents this concept.  The downward directed face represents the downward sex energy and the upward facing face represents the sublimation of this energy. 

How to carry out this process? 
In mantra 825  tirumular says that anointing the damsel’s body with fragrance if one knows how to shoot the breath through the sushumna during the physical union the enjoyment will never cease. 

The lady should be 28 yrs old and the man 30 yrs. The first eight days of the waxing moon are not appropriate. One can perform this union on the remaining six days and the first six days of the waning moon. He also advises to avoid the fifth, sixth and the eleventh day after menstruation and to perform in the six days in the middle and the remaining three weeks that follow.  He mentions how to release the semen as follows:  let it be the fourth muhurtha when they perform the sexual act when the moon’s kala shines bright (left nadi) and the breath in the sun’s nadi runs low.  Emit the bindu holding the breath, with the breathing occurring through the right nostril and that in the left nostril is suppressed.  The time stipulated for this practice is five ghatikas or approximately two and a half hours. In the sixth ghatika the damsel goes to sleep in her lover’s arms.

Tirumular warns that this practice is only for the most advanced practitioners who are experts in the kechari mudra. The yogi experiences the supreme space or vetta veli at the pinnacle of this technique.  Tirumular says that this technique was taught by Siva to Sakti and if one is able to unite Siva and Sakti through this process, in the cranium, one wil live for millions of trillion years. (841).

In the verse  1967 he mentions that the bindu can be conquered by merging the letter ‘ci’ with the pranava.  This results in the mantra civayanama.  

According to Tirumular samsara and nirvana are coessential.  In the verse 1491 he says that the yogi may have both bogha and yoga.  “Through bhoga all the earthly blessings and through yoga Siva’s divine form.”    This is similar to Agatthiyar’s words in the first two lines where people like worldly pleasures and one need not necessarily avoid it.  However, it will be better if the emission is avoided and made to flow upwards.   the six in the first line may mean the sixth ghatika or the pinnacle of pleasure. 

அகத்தியர் இப்பாடலில் மிக முக்கியமான விஷயம் ஒன்றைப் பற்றிக் கூறுகிறார்.  அது காயசித்தியின் மூன்றாம் வகையான உல்டா சாதனா அல்லது விந்து மறித்தல்.  இதை சித்தர்கள் பரியங்க யோகம் என்றும் அழைப்பர்.  “ஆணின் வெள்ளி பெண்ணின் தங்கத்தைச் சந்தித்தால் இருவரும் ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று மூச்செறிவர்.  ஆனால் தட்டான் கரியால் வெள்ளியுருகி தங்கத்தை அடைவதைத் தடுத்தால் நெருப்பு, துருத்தியின் மூலம் பாய்ந்து அண்ணாக்கில் வைக்கப்பட்டிருக்கும் என்கிறார்.

பரியங்க யோகம் என்பது உடலுறவின் மூலம் வழிபாடு அல்ல, அது ஒரு யோகியின் சக்தியை மேல்நோக்கி திருப்புவது, அதன் ஓட்டத்தை மாற்றுவது.  இதைப்பற்றி சரியாக அறிந்துகொள்வது பல தவறான சாதனைகள் குழப்பங்களைத் தவிர்க்கிறது.
சுக்கிலம் அல்லது விந்து உயிர்ச்சக்தி.  அதை பௌத்த மதத்தில் போதிசித்தம் என்பர்.  இந்த விந்துவின் இயற்கையான கீழ்நோக்கிய ஓட்டத்தைத் தடுத்து அதை மேல்நோக்கித் திருப்புவது பரவிருத்தி எனப்படுகிறது. இயற்கையாக ஓட்டத்தை உடைய ரசமான விந்துவை மேல் நோக்கித் திருப்பும்போது அது கெட்டிப்பட்டு வஜ்ரம் போல் ஆகிறது.  இது ரசவாதத்தில் பாதரசத்தை கெட்டிப்படுத்துவதை ஒக்கும்.  யோக உபநிஷத் இவ்வாறு விந்துவை மாற்றுவது அந்த யோகியின் உடலுக்கு ஒரு விசேஷ மணத்தை அளிக்கும் என்கிறது.  நாத சித்தர்கள் இந்த உல்டா சாதனையை மேற்கொள்வர்.  இது லய யோகம் அல்லது வெளிப்பட்டு உள்ள உலகம் மீண்டும் லயம் அடைவதைக் குறிக்கிறது.  இதுவே சிவனின் சம்ஹாரம்.

கீழ் நோக்கி ஓடும் விந்துவை மடைமாற்றினால் அது ஓஜஸ் ஆகிறது.  அந்த ஓஜஸ் மேலும் பயிற்சி செய்யும்போது தேஜஸாகி யோகியின் உடலுக்கு ஒளியூட்டுகிறது. முனைவர் டி.என். கணபதி அவர்கள் தனது திருமந்திரப் பேருரைகள் என்னும் நூலில் இந்த முறையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.  இவ்வாறு விந்துவை வெளிவிடாமல் உள்நிறுத்துவது ஸ்கந்தம் என்கிறார்.  இந்தக் கட்டுப்பாட்டை ஒரு யோகி அடையும்வரை கந்தன் பிறப்பதில்லை!  இந்த முறையைப் பற்றி போகர் தனது அஷ்டாங்க யோகம் என்ற நூலிலும் ராமலிங்க அடிகள் தனது அனுபவமாலை என்னும் நூலிலும் குறிப்பிட்டுள்ளனர் என்கிறார் திரு, கணபதி அவர்கள்.  அஷ்டாங்க யோகம் என்ற சொல் உடலுறவு கொள்ளும் இருவரது எட்டு அவயவங்கள் அல்ல, அவை அவ்விருவரது நான்கு அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்பவை ஒன்றாவது என்று பொருள்.  ஜெயதேவரின் கீதகோவிந்தம் என்னும் பாடலும் இதே கருத்தில் எழுதப்பட்டது.

கருப்பு, சாம்பல், வெள்ளை எனப்படும் யோகத்தில் கருப்பு யோகத்தில் சுக்கிலம் சுரோணிதத்துடன் சேருகிறது.  சாம்பல் யோகத்தில் சில சமயம் சேருகிறது மற்ற சமயங்களில் சேருவதில்லை.  வெள்ளை யோகத்தில்சுக்கிலம் வெளிப்படுவதில்லை.  இதுவே யோகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.இது வாமாசாரம் எனப்படும்.

திருமூலர் இந்த முறையைப் பற்றி விளக்கும்போது தனது மந்திரம் 521ல் “ அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம், கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை, உண்டது நஞ்சு என்று உரைப்பார் உணர்வு இலோர், வெண்சடை மாலை விரிசடையோர்க்கே” என்கிறார்.  கபால மாலையும் விரிசடையும் கொண்ட சிவனுக்கு கண்டம் கறுத்த காரணத்தை அறியாதவர்கள் அவன் நஞ்சை உண்டான் என்பர் என்கிறார் திருமூலர்.  தொண்டைக்குக் கீழே சுக்கிலத்தைப் போக விட்டால் கழுத்து கறுக்கும்.  அதை தொண்டைக்கு மேலே எழச் செய்தால்,  ஆக்ஞை வரை எழச் செய்தால் அது அமிர்தமாகி உடலை ஒளிரச் செய்யும்.  இதுவே சிவபெருமான் நீலகண்டனாக காட்சியளிப்பதன் பின் உள்ள தத்துவம். 
சரி இந்த முறையை எவ்வாறு நிகழ்த்துவது?
மந்திரம் 825 ல் மங்கையின் உடலை வாசனை திரவியங்களால் அலங்கரித்து ஒரு ஆண் மூச்சை உறவின்போது மேலே செலுத்த அறிந்தால் இறப்பிலா இன்பம் என்கிறார் திருமூலர்.  இதைப் பயிற்சி செய்ய அந்த ஆண்மகன் 30 வயதினனாகவும் பெண் 28 வயதினளாகவும் இருப்பது நல்லது. மாதவிலக்கிற்குப் பிறகு 5, 6, 11 நாட்களில் மேற்கொள்ளக் கூடாது, மற்ற ஆறு நாட்கள் மற்றும் மூன்று வாரங்கள் பயிற்சி செய்யலாம் எனவும் வளர்பிறையில் முதல் எட்டு நாட்களைத் தவிர்த்து மீதி ஆறு நாட்கள் தேய்பிறை முதல் ஆறு நாட்கள் இதைப் பயிற்சி செய்யலாம் என்றும் அவர் கூறுகிறார்.  இந்த யோகத்தின்போது நான்காவது முகூர்த்தத்தில் உடலுறவைக் கொண்டு மூச்சு சந்திர நாடியில் ஓடி சூர்யா நாடியில் தடைப்பட்டபோது சுக்கிலத்தை வெளிவிடவேண்டும்.  இதற்கு ஐந்து கடிகைகள் அல்லது இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்துவிட்டு ஆறாவது கடிகை அப்பெண் தனது காதலனின் தோளில் தூங்குவாள்.

இந்தப் பயிற்சியை யோகத்தில் உச்சநிலையை அடைந்தவர்களே கேசரி முத்திரையில் தேர்ந்தவர்களே மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் திருமூலர் இதை சிவன் சக்திக்குக் கற்றுக் கொடுத்தார் என்கிறார்.  மேலும் அவர் இந்த பிந்து வெற்றி சி என்னும் மந்திரத்தை ஓம் என்னும் பிரணவத்துடன் சேர்த்தால் சிவயநம என்று தோன்றும்போது அடையலாம் என்கிறார். 

ஒரு யோகி போகத்தையும் யோகத்தையும் அனுபவிகிறார், போகத்தினால் உலக இன்பம், யோகத்தினால் சிவனுருவம் என்ற கூறும் திருமூலர் இதைத் தள்ளவேண்டிய அவசியமில்லை ஆனால் தள்ளினால் நன்று என்று கூறுவது அகத்தியர் இப்பாடலின் முதலில் கூறுவதை ஒத்து உள்ளது.  

2 comments:

  1. Dear sir

    I heard about this Pariyanga yogam very little. it is possible to you to tell me completely.

    ReplyDelete
  2. Paryanga yogam is called madai maattral or vindhu maatral. It is the process of reversing the flow of the semen. This esoteric tantric practice is only for adepts. Agatthiyar does not prescribe it. He says that this will lead to the cranium splitting open. please refer to the explanations given by Dr.T.N.Ganapathy on that section of Tirumandiram or any other Tantra text book to get more information.

    ReplyDelete