Saturday 5 April 2014

140. The learned yet egotistic yogi

Verse 140

துற்குண சீஷன்
உண்டையா புலத்தியனே இன்னம் கேளு
உலத்தரிட சேதி எல்லாம் விரித்து நன்றாய்
பண்டையா தெண்டன் இட்டு சீஷன் ஆகிப்
பணிந்துருகி தாசனாய் தீஷை வாங்கி
நிண்டையா உலகம் எல்லாம் விளப்பம் செய்து
நிலைத்து இவன் நில்லாமல் சிலுப்பிக் கொண்டு
தண்டையாய்ப் பெரியோரை தூஷணித்து
நாய் போலக் குலைத்திறந்துமாள்வான் காணே

Translation:
The disciple with bad qualities
Yes there is Pulatthiya, hear further
Elaborately the actions of the worldly,
Falling at the feet, becoming a disciple
Being humble and melting in devotion as a serviture, obtaining initiation
Fighting with the world and verbally abusing them
Without remaining steady, this man who figts like a cock,
The one who abuses great souls
Barking like a dog, he will die and meet destruction.

Commentary:
This verse is about a vain disciple.  This man seeks a true guru, joins him properly as a disciple, attains all the spiritual and religious knowledge and yet gets destroyed due to his vanity.  He will talk lowly of others, abuse great souls and pick fights all the time.  Agatthiyar says that he will die, barking like a dog (constantly fighting with others) and be destroyed.


இந்தப் பாடல் அகங்காரம் பிடித்த ஒரு சீடனைப் பற்றியது.  இந்த மனிதன் ஒரு குருவை முறையாக அடைந்து, கற்கவேண்டியவற்றைக் கற்றுணர்ந்து தேவையான அறிவையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் பெற்றும் அழிவை சந்திக்கிறான்.  ஏனெனில் அவன் அகங்காரத்தின் பிடியில் சிக்கி பிறரைத் தாழ்மைப்படுத்திப் பேசி, பெரியோரை இகழ்ந்து நாய்போல பிறரிடம் எப்பொழுதும் சண்டை பிடித்தபடி தனது வாழ்நாளைக் கழிக்கிறான் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment