Saturday 5 April 2014

138. Learned drunkard

Verse 138
காணாமல் போனவன் முன் குருவை நோக்கி
கலகத்தே மனம் இருக்கக் குடிப்பான் கள்ளை
வாணாளை மறக்குமடா வாசிச் சீரும்
மரித்தாலும் நில்லானே பித்த ராசன்
வீணாக காற்றேழும்பிப் போச்சுதானால்
வெளியில் வைத்த கற்பூரம் போலாம் பிரமம்
நாணாமல் நாணி தலை விழுவான் ஐயோ
நல்லோர்கள் பெரியோர்கள் நகை செய்வாரே

Translation:
The one who got lost, with his mind
In distress and directed towards his Guru, will drink toddy.
One’s life will be forgotten and also the glory of vasi.
Even when stopped the pitta will not stop
If the air rises wastefully
The Brahmam (wisdom) will vaporize like camphor kept in the air,
He will be ashamed shamelessly, his head will fall, Sir
Good souls and the Wise will laugh at him.

Commentary:
When a person starts drinking alcohol he will lose his memory, forget about himself.  The vasi or breath control that he learnt will go waste.  Among the three humors, pitta will rise in the body. Even if he raises the prana it will go waste like camphor kept in the air.  He will earn dishonor.  However, he will not even feel the shame.  The wise and good souls will ridicule him.


ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும் அவர் குடியை விடவில்லை என்றால் தன்னைப் பற்றியும் தனது வாழ்க்கை, தான் கற்றுக்கொண்டவை என்று அனைத்தையும் மறந்துவிடுகிறார்.  வாசி யோகம் கற்றிருந்தாலும் அதுவும் பயனற்றுப் போகிறது.  உடலில் பித்தம் அதிகரிக்கிறது.  அவர் தனது பிராணனை மேலே ஏற்றினாலும் அது காற்றில் வைத்த கற்பூரம் போல கரைந்துவிடுகிறது.  நாணம் என்றால் என்ன என்பதையே மறந்த அவரைப் பார்த்து அனைவரும் கேலி செய்வர்.  

No comments:

Post a Comment