Friday, 28 February 2014

50. What is Siva bodham?

Verse 50
போதம் என்றீர் என் குருவே அகத்துள்ளோனே
பொன்னடிக்கே நமஸ்காரம் புகல்வீர் ஐயா
போதம் என்றால் கள்தானோ கஞ்சா தானோ
புகழ் பெரிய லேகியமோ புகை நீர் தானோ
போதம் என்றால் மங்கையின் மேல் போதம் தானோ
பெண்ணுடுக்கும் சல்லாவின் துடைக்குள் தானோ
போதம்என்றால் மண் ஆசை பொன்னின் ஆசை
புகழ் பெரிய மெய்ப்போதம் அருள் செய்வீரே

Translation:
Guru!  The One who is within the heart!  You talked
 about knowledge.
Salutations to your golden feet, please tell Sir,
What is knowledge- Is it toddy? Is it cannabis?
Is it a famous medicinal preparation?  Is it smoke, water?
Is it desiring a woman?
Is it between the thighs of a woman who wears transparent cloth?
Is knowledge desiring land or gold?
Please grace me with the glorious, true, great wisdom.

Commentary:
Pulatthiyar questions Agatthiyar about the Siva bodham he referred to in the previous verse.  Through his questions he is dispelling the misconceptions about the exalted state.  He asks Agatthiyar whether it is alcohol of cannabis that make one delusional, whether it is a medicinal preparation that would take one to altered states of consciousness, whether it is smoke or water the fragrance or taste that would make one lose his mind, whether it is the highly excited state when one copulates with a woman or watches a scantily clad woman.  He wonders whether it is the great desire one has for landed property or gold.
All the above will make one lose his mind.  Pulatthiyar asks Agatthiyar whether any of these can be called bodham.


இப்பாடலில் புலத்தியர் அகத்தியர்  முன்பு குறிப்பிட்ட சிவ போதம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்கிறார்.  இந்தக் கேள்வியின் மூலம் அவர் பரவுணர்வு நிலையைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கிறார்.  புலத்தியர் அகத்தியரிடம் போதம் என்றால் கள், கஞ்சா, லேகியம், புகை, நீர் இவற்றுள் ஏதாவதா, பெண்ணாசை பொன் ஆசை மண்ணாசையா என்று கேட்கிறார்.  மேற்கூறிய அனைத்து அதீத ஆசைகளும் ஒருவரது மனத்தைக் குழப்பி அவரை மயக்கமுற வைக்ககூடியவை.

Thursday, 27 February 2014

49. Lingodbhavam

Verse 49
சுகமாமோ என்றுரைத்தாய் புலத்தியாகேள்
சுற்றம் உள்ள வெண் சாரை ஆறதாகும்
அகம்என்ற அஞ்செழுத்தும் இலகும் சோதி
ஆதார பீடலிங்கம் பிரம யோகி
இகம்என்ற நதி மூலம் ரிஷி மூலந்தான்
இரண்டைவிட்ட சிலம்பம் இல்லை இதுவே மூலம்
பகம்ஆன மாயையிலே சிக்காமல் தான்
பரமமான சிவபோதம் பரிந்து தேடே

Translation:
Pulatthiya!  You asked whether it will be pleasurable.  Now listen
The white rat snake (energy centres) that has associates/precincts are six
The locus/the center, the five letters will glow as the flame
The lingam and its supporting dais, brahma yogi
The origin of everything “here” is like the origin of the river and rishi (unknown)
There is no sound other than these two, this is the origin
Without getting caught in the maya, the six qualities,
Search for the supreme Siva bodham with effort.

Commentary:

Agatthiyar talked about the white rat snake in the previous verse.  Here he explains that the white sanke or "veN saarai" are the six chakras, the energy centers.  Each center is associated with various principles and is depicted as having multiple enclosures.  
The five letters of na ma si va ya are marked at the chakras as na-muladhara, ma- svadhistana, si-manipuraka, va-anahata and ya- vishuddhi.  There are some changes in this order.  Some works start with muladhara and end at ajna.  When the power of kundalini travels through the sushumna nadi piercing the chakras it travels like a snake.  The sushumna nadi is depicted as white in color to indicate satva guna.
 The chakras are considered as daises or the yoni or sakthi and the kundalini that rises through them is considered as siva.  Thus siva sakti aikya or union is the kundalini rising through the chakras.

The five letters, namacivaya is the inner flame, the sakti, that emerges through the cakras.  Together they form the atma lingam(the energy, namacivaya), with the base, peetam (the cakra).  In Saivam this is called lingodbhavam.  One may recall the episode in Linga puranam when Siva emerged as a column of flame in the presence of Brahma and Vishnu.

Agatthiyar says that the origin of the chakras is as mysterious as the origin of a rishi or a river.  Kundalini rising through the chakra makes sounds.  Siddhas mention that this process produces ten types of sounds.  These sounds are the origin of all the sounds in the world.  Agatthiyar advises Pulatthiyar to not get ensnared by the maya, the evil qualities, but to seek the Siva bodham, the wisdom about Siva, the param-the supreme.

This verse dispels the misconception about the linga worship as the worship of the phallus!  

முற்பாடலில் அகத்தியர் வெண் சாரை என்பதைக் குறிப்பிட்டார்.  இப்பாடலில்  வெண் சாரை என்பது ஆறு சக்கரங்களும்  அவற்றுடன் தொடர்புடைய பிற தத்துவங்கள் நாடிகளும் ஆகும்.  சக்கரங்களை வரையும்போது அவை பல சுற்றுக்களைக் கொண்டதாக வரைவது மரபு.  
ஐந்தெழுத்தான நமசிவய என்பதை சக்கரங்களில் குறிப்பது வழக்கம்.  ந- மூலாதாரம், ம-சுவாதிஷ்டானம், சி- மணிபூரகம், வ- அனாகதம், ய- விசுத்தி.  என்றும் மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரையிலும் அவற்றைக் குறிப்பதும் வழக்கத்தில் உள்ளது.  

குண்டலினி சக்தி சக்கரங்களின் ஊடே பாயும்போது அது பாம்பைப் போல சரசரவென்று ஏறுகிறது.  அது ஏறும் சுழுமுனை நாடியை வெண்மையாக சத்துவ குணத்தைக் கொண்டதாகக் குறிப்பது வழக்கம்.  அதனால்தான் அகத்தியர் இதை வெண் சாரை என்கிறார்.  

சக்கரங்களை யோனி அல்லது பீடம் என்றும் அவற்றின் ஊடே குண்டலினி எழுவதை சிவம் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.  இவ்வாறு சிவ சக்தி ஐக்கியம் என்பது சக்கரங்களின் ஊடே குண்டலினி எழுவதைக் குறிக்கிறது.  இதைத்தான் லிங்கம் காட்டுகிறது. இதுவே  லிங்கோத்பவம் எனப்படுகிறது.  சக்கரங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைக் கூற முடியாது.  அவை சூட்சும உடலில் இருக்கின்றன.  இதையே அகத்தியர் அவற்றின் மூலம் நதி மூலம் ரிஷி மூலம் போல அறிய முடியாதது என்கிறார்.  மாயையில் சிக்கிக் கொள்ளாமல் இந்த  உண்மைகளைப் பார்க்குமாறு சிவ போதத்தைத் தேடுமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

இப்பாடல், லிங்கம் என்பது ஆண்குறி என்றும் பீடத்துடன் கூடிய லிங்கம் ஆண் பெண் குறிகளின் இணைப்பு என்றும் நிலவும் தவறான கருத்தைத் தகர்த்தெறிகிறது.  

Wednesday, 26 February 2014

48. Experience of the Supreme- personal and temporal

Verse 48
ஏறென்றால்  எவ்வாறு குருவே ஐயா
எந்தவழியோஅறியேன்  எவ்விடமேதான்
ஆறென்றால் அறிவாரோ அகத்துக்குள்ளே
ஆச்சென்றால் போவரோ செவிடன் ஐயா
கூறென்றால் கூறுவனோ உ(ஊ)மை ஐயா
கோள் என்றால் வாங்குவனோ குருடன் ஐயா
தாரென்றால் குலை இல்லா வாழை யாமோ
சமையாமுன் புணர்ந்ததினால் சுகந்தான் ஆமோ

Translation:

If you say make it climb, how to do so Sir?
Which is the way, I do not know, where is it
Who is it- will anyone know it is within
If it is said, it is done will they go, the one who cannot hear, Sir?
If asked will he talk about it? the mute one, Sir,
If said “accept it” will he accept it, the blind one, Sir?
If it is bid “fruit” will a banana fruit without the bunch?
If one copulates before getting the physical maturity will it be pleasurable?

Commentary:
In this verse Pulatthiyar is asking Agatthiyar about the state at which realization occurs.  He asks Agatthiyar whether anyone who has experienced it will talk about it.  He himself answers no, they will behave like a mute person.  Can anyone accept it if someone else gives it to them? No. They will be blind, they cannot even see it.  Will anyone realize that it is within us?  Can anyone attain it without being ready for it, being mentally mature for it?  Pulatthiyar refers to this as “can a banana tree fruit without having the flower bunch, can copulating with an immature person give one any pleasure?”  We thus conclude from this verse that this state which is beyond verbal description should be attained by one’s own efforts when one attains the necessary physical, mental and spiritual maturity.  Banana is significant in this verse. Tamil Siddhas refer to the cakras as the flower of a banana tree.  Copulation referred to the soul merging with the Divine and experiencing unlimited bliss.


பரவுணர்வு நிலையைக் குறித்த புலத்தியரின் கேள்விகளாக இப்பாடல் அமைந்துள்ளது.  புலத்தியர் அகத்தியரிடம் “குண்டலினியை ஏற்று என்றால் எவ்வாறு ஏற்றுவது, அதற்கு வழி என்ன?  அதைப் பற்றி யாராவது பேசமுடியுமா?  அதை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கமுடியுமா?  அதை ஒருவரால் பார்க்கமுடியுமா? என்று கேட்கிறார்.  கேள்விகளாக அவர் இந்த பரவுணர்வு நிலையை விளக்குகிறார். இவ்வாறு, வார்த்தைகளுக்கு அப்பால் உள்ள பரவுணர்வு நிலையை ஒருவர் தனது முயற்சியால் தகுந்த உடல், மனம், ஆன்மீக பக்குவத்தை அடைந்தபோது பெறுகிறார் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இப்பாடலில் குறிப்பிட்டுள்ள வாழைத்தார் முக்கியமானது. தமிழ் சித்தர்கள் சக்கரங்களை, குவிந்த வாழைப்பூ என்று அழைப்பர்.  இங்கு கூறியுள்ள புணர்ச்சி ஆத்மா பரமாத்மாவுடன் ஒன்றாகக் கலந்து அபரிமித இன்ப உணர்வை அனுபவிப்பது.

Tuesday, 25 February 2014

47. What is yoga of the backhead, why do the brahmins have a tuft?

Verse 47
ஊதப்பா அடிமூலம் மிகவும் நன்று
உத்தமனே நடுமூலம் அதிலும் நன்று
காதப்பா கண்டமது ஞானிக் காகும்
கருத்துள்ள பிள்ளை என்றால் பிடரி யோகம்
ஏதப்பா அரமனையில் விசாலம் ஒன்று
இதுவஞ்சும் வாசிக்குப் பெருமையாகும்
சூதப்பா வெகுசூது இந்த சூது
சுத்தமுள்ள புலத்தியனே சொக்கி யேறே

Translation:
Blow son, the bottom terminus (muladhara) is very good
The great soul! The middle terminus is better than that
The ear, the throat, are appropriate for a jnani
If it is a person (son) with focus, then the yoga at the nape
In the palace there is an expanse
These five make vasi glorious
This is subtle, it is a great subtlety
The pure Pulatthiya! Climb with enchantment.

Commentary:
Agatthiyar remarks that the muladhara is very beneficial as it is the site of the kundalini, and the middle one is even better.  This may refer to the manipuraka in the navel or the anahata in the heart or the vishuddhi in the throat.  The navel is in the middle of the body.  The heart cakra is the middle one among the cakras in the path of kundalini.  The Visuddhi is the midpoint between animal and divine instincts.  This is indicated by Siva’s blue throat.  Agatthiyar says that the ear and the throat are good for a jnani because a kundalini yogi who manages to raise his kundalini sakti to the vishuddhi hear several divine sounds.

Agatthiyar says that for a highly accomplished yogi the yoga at the nape is better.  He refers to this 'pidari yogam' in several verses later also.  In the book The Inner Journey, Sudha Aditya says, “the ajna chakra is the most difficult to locate.  It is situated in the posterior brain, at the pineal gland at the top of the spinal cord in the medulla oblongata.  Its trigger point is in the center of the eyebrows.  This is the point where the ida, pingala and sushumna nadis merge and travel as one to the crown of the head.  The bindu is …. one of the most important chakras in kundalini yoga. It is present in the back of the head.   It is said to be the seat of psychic and mystical experiences.  The Brahmins wear a tuft to indicate this point”.  During the Srividya upasana one of the rituals is tying up the tuft.  This is done to put pressure at that point so that the aspirant can fix his concentration there.  

The next cakra is the sahasrara which Agatthiyar refers to as the expansive palace.  This is the place where the consciousness expands beyond its previous limits.   Agatthiyar indicates that these are highly esoteric concepts by saying that it is deceit or a great concealment.  He advises Pulatthiyar to raise is prana holding these ideas in mind and with enchantment.


அகத்தியர் மூலாதாரம் மிக நல்லது அதனினும் நல்லது நடுவில் உள்ள சக்கரம் என்கிறார்.  நடுச் சக்கரம் என்பது நாபியில் உள்ள மணிபூரகம், அல்லது இதயத்தில் உள்ள அனாஹதம் அல்லது தொண்டையில் உள்ள விஷுத்தி சக்கரமாக இருக்கலாம்.  நாபி உடலுக்கு மத்தியில் உள்ளது.  அனாஹதம் சக்கரப் பாதையில் மத்தியில் உள்ள சக்கரம்.  விஷுத்தி மனிதத் தன்மையும் இறைதன்மையும் கூடும் இடம்.  சிவனின் கழுத்து நீலமாக இருப்பது இதையே குறிக்கிறது.  அகத்தியர் இதை காது, கழுத்து ஞானிகளுக்கான இடம் என்கிறார்.  குண்டலினி யோகம் பயிலும் ஒரு யோகி தனது காதுகளில் பலவிதமான ஒலிகளைக் கேட்கிறார். 

அகத்தியர் மனக்குவிப்பைப் பெற்ற ஒரு யோகிக்கு பிடரி யோகம் நல்லது என்கிறார். 
சுதா ஆதித்யா அவர்கள் தனது புத்தகமான “உள்பயணம்” (The inner journey) என்ற புத்தகத்தில் ஆக்ஞா சக்கரம் தலையின் மத்தியில் இருக்கிறது என்றும் அதன் ஊக்கப்புள்ளி புருவமத்தியில் இருக்கிறது என்றும், பிந்துவின் இடம் தலையின் பின் பகுதியில் உள்ளது என்றும் அதைக் காட்டவே பிராமணர்கள் குடுமியை வைத்திருந்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.  இதைத்தான் அகத்தியர் பிடரி யோகம் என்று கூறுகிறார்.  அது பிராணனை பிந்து நிலைக்கு ஏற்றுவது, ஆக்ஞா சக்கரத்தில் இருத்துவது.  இதை மேற்கொள்ள மிகுந்த மனக்குவிப்பு தேவை. ஸ்ரீ வித்யா உபாசனையில் குடுமியை முடிதல் என்ற ஒரு சடங்கு உள்ளது.  இது குடுமிப் பகுதியில் கவனத்தைக் குவிக்க உதவுகிறது.

இந்த சக்கரங்கள் அனைத்துக்கும் மேலே இருக்கும் சக்கரம், சஹஸ்ராரம்.  அதை ஒரு விசாலமான அரண்மனை என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்தப் பயிற்சி எவ்வளவு கடினம், எவ்வளவு ரகசியமானது என்பதைக் குறிக்க அவர் அதைச் சூது என்கிறார்.  இவையனைத்தையும் மனதில் கொண்டு குண்டலினி சக்தியை உன்மத்தத்தோடு மேலே ஏற்றுமாறு அவர் புலத்தியரிடம் கூறுகிறார். 

46. The foot will become the head...

Verse 46
விட்டெழுத்து விடாதெழுத்து
வாசி என்ற குதிரைக்கு இதுவே மாட்டு
மாட்டாட்டால் குதிரையது பிடிபடாது
தேசி என்ற அகாரமது விட்டிடமும் ஆகும்
சிவசிவா சிகாரமது விடாதிடமும்  ஆகும்
மூசிதமாய் இவை இரண்டும் சேர்த்து வாசி
பூரிக்கும் பித்து ரேசத் தேறு
காசி என்ற ரேசகபூரகமும் கும்பம்
கால் தலையாய் மாறி நிற்கும் கண்டு ஊதே

Translation:
The letter that was left and the letter that was held

This is the tether for the horse, the vāsi
If it is not tied so the horse will never come under control
The horse.  The akāra is the place that is left (exhaled)
Siva sivā, the cikāra is the place that is not left (not exhaled)
These two together will blossom
As vāsi.  The enchantment will climb
The brilliance- the inhalation, exhalation and retention
The air will reach the head.  Seeing this blow

Commentary:
In this verse Agatthiyar clearly explains the term “cingam” he had mentioned in the previous verse so that people are clear about it and about vāsi yoga.  This term literally means a lion.  However, Agatthiyar is actually meaning “cing” and “am” or ci and a.   

Agatthiyar calls the breath as an unbridled horse that should be brought under control with the help of the breath.  Siddhas call the prana "pari" or horse.  Tirumandiram talks about how the horse should be tethered.  

A puranic episode should where Siva is said to have turned "nari into pari" should be recalled here.  nari or fox refers to breath that steals away one's life.  When nari is turned to 
pari then it offers eternal life.

The letter that is allowed, "let" refers to akara.  When this letter is uttered the mouth is opened and the air is let in. thus the letter aa or vaa is uttered during inhalation.  "vidaadha ezhuthu" refers to the letter where the breath is not allowed in.  It is the exhalation.  So si is uttered during exhalation.  thus vasi yogam is uttering vaa during inhalation and si during exhalation.  This pranayama technique will control the breath and thus the prana.  

 "pitthu" or enchantment means super consciousness.  Siva is called "Pitthaa" which means one who is in this enchanted state full of love.  Agatthiyar clarifies that through this process the "kaal" or breath reaches the head or the sahasrara.  Thus the pranayama which involves inhalation or poorakam, rechakam or exhalation and kumbakam or retention will produce divine consciousness.

 Agatthiyar says that following this type of breathing will make the fire of kundalini, the kasi or brilliance to ride up the sushumna nadi.  This word may also be "vaasi" and a scribal error.  The yogin thus reaches an exhalted state.  The prana will reach the head or the sahasrara.  The term ‘kāl thalaiyāi māri nirkum’ literally means the foot and the head will be interchanged.  This expression actually means, the air-prana, will reach the head!  In Tamil there is an expression “thalai kāl puriyāmal iruppadu”.  This is said to imply that one is out of control, over excited.  Actually this means “the prana is traversing the sushumna nadi between the muladhara and sahasrara and one does not know where it is existing”.   Agatthiyar tells Pulatthiyar to realize this and blow the prana or follow this breathing pattern.


இப்பாடல் வாசியோகத்தை விளக்குகிறது.  அகத்தியர் கட்டுப்படுத்தப்படாத மூச்சை சேணமிடப்படாத குதிரை என்கிறார்.  அக்குதிரையை மூச்சுப் பயிற்சியினால் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்.  சித்தர்கள் பிராணனுடன் கலந்த மூச்சைப் பரி என்கின்றனர்.   இங்கு திருவிளையாடலில் "நரியைப் பரியாக்கிய" நிகழ்ச்சியை நினைவு கூறவேண்டும்.  நரி என்பது நமது ஆயுளைத் திருடிவிடும் மூச்சு,  அதே மூச்சைப் பரியாக்கினால் அது நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.  

விட்ட எழுத்து என்பது மூச்சை உள்ளே வர விட்ட எழுத்து.  அ என்று கூறும்போது நாம் வாயைத் திறந்து காற்றை உள்ளே வரவிடுகிறோம்.  இவ்வாறு மூச்சை உள்ளே இழுப்பதான பூரகத்தில் அகாரத்தை உச்சரிப்பதே விட்ட எழுத்து.  மூச்சை வெளிவிடும்போது அதாவது அதை உள்ளே விடாதபோது சி என்று உச்சரிக்கப்படுகிறது.  இதுவே விடாத எழுத்து.  இவ்வாறு வாசி யோகத்தில் பூரகம் அல்லது உள்மூச்சில் வா அல்லது ஆ என்றும் வெளிமூச்சு அல்லது ரேசகத்தில் சி என்றும் உச்சரிக்க வேண்டும்.  இதுவே வா சி யோகம்.

 இவ்வாறு வாசி பிராணாயாமத்தைச் செய்யும்போது பரி எனப்படும் பிராணனும் மூச்சும் கட்டுக்குள் வருகின்றன.  அதனால் உயருணர்வு என்ற பித்து ஏற்படுகிறது.  இந்த உணர்வைப் பெற்றவர், உணர்வாக இருப்பவர் என்ற கருத்தில்தான் சிவபெருமானைப் பித்தா என்று பாடியுள்ளனர்.

 முந்தைய பாடலில் அவர் அதை “சிங்கம்”  என்று கூறுகிறார்.  இப்பாடலில் அதை எவ்வாறு உச்சரிப்பது என்று கூறியுள்ளார்.   யோகமும் மிருகங்களின் ராஜாவான சிங்கத்தைப்போல யோகங்களின்  ராஜா வாசி யோகம்அ ன்றோ!  இந்த மூச்சுப் பயிற்சி குண்டலினி அக்னியை, காசியை சுழுமுனை நாடியில் ஏறச்செய்யும்.  அப்போது உயர்விழிப்புணர்வு அல்லது பித்து தலைக்கேறும்.  காசி என்பது வாசியாகவும் இருக்கலாம்.

அகத்தியர் இதைக் கால் தலையாய் மாறி நிற்கும் என்கிறார்.  கால் என்பது காற்று அல்லது பிராணன்.  தலைக்கு ஏறுதல் என்பது சஹஸ்ராரத்தை அடைதல்.  பேச்சு வழக்கில் “தலை கால் புரியாமல் இருப்பது” என்றொரு தொடர் உள்ளது. இதன் பொருள் பிராணன் மூலாதாரத்துக்கும் சஹாஸ்ராரத்துக்குமிடையே பயணிக்கிறது.  அதனால் அது தலையில் இருக்கிறதா கீழே இருக்கிறதா என்று உறுதியாகக் கூறமுடியாது என்று பொருள்.  இதை உணர்ந்து பிராணாயாமத்தை மேற்கொள்ளுமாறு, காற்றை ஊதுமாறு, அகத்தியர் கூறுகிறார்.

Monday, 24 February 2014

45. Body, soul and Vaasi...

Verse 45
அங்கமென்ற அஞ்செழுத்தே உடலதாச்சு
ஆதியென்ற மூன்றெழுத்தே வுயிரதாச்சு
தங்கமென்ற மூன்றெழுத்தின் விபரம் கேளு
சாற்றுகிறேன் பசுபதி பாசம் அப்பா
பொங்கமென்ற ஐஞ்செழுத்தும் ராசா வாச்சு
புகழான ஓங்காரம் கோட்டை ஆச்சு
சிங்கம் என்ற இரண்டெழுத்தும் மௌனத்தோடே
சேர்ந்தக்கால் சிவ சிவா வாசி ஆச்சு

Translation:
The part, the five letters, became the body
The three letters that are the origin became the soul
Listen to the details about the golden/precious three letters
I will tell you, it is pasu (limited soul), pathi (universal soul) and pāsam (relationships)
The great five letters became the king, happily
The glorious omkara became the fort
The two letters sing and am (the lion-like two letters) along with the silence
When they came together, Siva sivā, became the vāsi (universal energy in the body)

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that the five letters of namacivaya became the body. 

Sivavakkiyar refers to this as

With na as the two legs, ma as the stomach,
ci as the two shoulders, the superior va as the mouth,
ya as the two eyes, that which remained truthfully so,
As supreme object in the subtle body, everything remained within the five-lettered                                                                                                                                           Civayam  (verse 96)

na represents the earth principle, ma the water principle, si the fire principle, va the air principle and ya the space principle.

na represents the turiyathitha state, ma the turiya state, si the deep sleep state, va the dream state and ya the wakeful state.

na is marked at the muladhara where the turiyathitha state is experienced, ma at the svadishtana, si at manipuraka, si at anahata, va at the vishuddhi and ya at the ajna where the above states are experienced.
All these occur in the background of omkara.  Its tripartite exististence as a u and ma represents its fully manifested state. a represents the pati (Isvara/Supreme Being), u the pasu (limited soul or Jiva) and m paasam (their relationship/ attachment) respectively. The five letters became the king, the Jiva.  The omkara is the fort that protects the Jiva.  Namasivaya is the fully manifested form of om.  

Cing and am- Siddhas use the base letter si as sing and sim.  sing represents drawing of the prapancha prana sakthi or universal force into the body.  sim represents stabilizing it in the body.  am represents stabilizing the universal energy ang in the body.  si also represents the maha karana sareera or the universal form which is represented as fire or flame.  Thus sing am represent drawing of mahakarana sareera into the body and stabilizing it within.

Vasi is prana.  It is not the air we draw in, the breath.  It is the prapancha prana, the universal force that uses the breath as its vehicle to enter the body.  Thus, vasi yogam is joining the prapancha prana with the prana in the body.  The sing am represents the universal energy that comes into the body.

இப்பாடலில் அகத்தியர் உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பையும் அவற்றைக் குறிக்கும் எழுத்துக்களையும் வாசி யோகத்தையும் விளக்குகிறார்.  ஐந்தெழுத்தான நமசிவாய என்பது உடலாயிற்று.  சிவவாக்கியரும் இதை

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துள

நமசிவயத்தில் ந என்பது கால்கள், ம- வயிறு, சி-தோள், வ- வாய், ய- கண்
ந- பூமி தத்துவம், ம- நீர்தத்துவம், சி- அக்னி தத்துவம், வ- காற்று தத்துவம், ய- ஆகாய தத்துவம்,
ந- துரியாதீதம், ம- துரியம், சி- ஆழுறக்கம், வ- கனவு நிலை, ய- விழிப்பு நிலை.

இந்த நிலைகள் முறையே மூலாதாரம், , மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்னையில் உணரப்படுகின்றன.  இந்த எழுத்துக்களும் அதனால் அந்த சக்கரங்களில் குறிக்கப்படுகின்றன.  இவற்றை விசுத்தியோடு நிறுத்துவதும் உண்டு.

மேற்கூறிய நமசிவாயம் முழு வெளிப்பாடு நிலை.  அதற்கு அடித்தளமாக இருப்பது ஓங்காரம்.  இங்கு ஓங்காரம் எழுத்துக்களான அ உ ம என்பவையாக இருக்கிறது.  அவை முறையே பதி, பசு, பாசத்தைக் குறிக்கின்றன என்று அகத்தியர் கூறுகிறார்.  உடலான நமச்சிவாயத்தை ராஜாவாக்குவது ஓம்காரம் என்னும் கோட்டை. 

இதனை அடுத்து அகத்தியர் வாசி என்பதை விளக்குகிறார்.  வாசி என்பது பிரபஞ்ச பிராண சக்தி.  அது மூச்சைத் தனது வாகனமாகக் கொண்டு உடலினுள் நுழைகிறது.  வாசி யோகம் என்பது பிரபஞ்ச பிராண சக்தி உடலினுள் இருக்கும் பிராணனுடன் சேர்ப்பதாகிறது.  இதைக் குறிப்பதே சிங் அம் என்ற சொற்கள்.  
பிரபஞ்ச பிராண சக்தி என்பது மகா காரண சரீரம் என்றும் அழைக்கப்படுகிறது.  அதன் உருவம் சோதி அல்லது அக்னி.  சி என்னும் எழுத்து இந்த அக்னியைக் குறிக்கிறது.   சிங் என்பது பிரபஞ்ச பிராண சக்தி உடலினுள் நுழைவதையும் சிம் என்பது அதை உடலில் நிலைபெறச் செய்வதையும் குறிக்கின்றன.  அம் என்பது இறைவன் எனப்படும் சக்தி உடலினுள் நிலைபெறுவதைக் குறிக்கிறது. இவ்வாறு சிங் அம் என்பது பிரபஞ்ச பிராண சக்தி உடலுள் வருவதை, வாசியைக் குறிக்கிறது.

Saturday, 22 February 2014

44. Like a rope swaying in the air ..

Verse 44
சாற்றுகிறேன் புலத்தியனே தயவுள்ளோனே
தன்னிடத்தே இவ்வளவும் தெரிவிப்பேன் கேள்
போற்றுகிறேன் சின்மயத்தை மனதுள் பூண்டு
பூரணத்தை அறிவில் வைத்துப் புகழ்ந்து கேளு
ஆற்றுகிறேன் தாய் மகளை ஆற்றினாப்போல்
அஞ்செழுத்தை அல்லாது வேறொன்றில்லை
காற்றிலே இழுதுபட்டக் கயறு போலே
கலந்து நின்ற அங்கமதைக் கண்டு தேறே

Translation:
I will tell you, the merciful Pulatthiya!
I will tell you about all these, listen
I salute the chinmaya holding it in my heart
Holding the fully complete in the mind listen to this while praising it
I will pacify you just as how a mother pacifies her daughter
There is nothing other than the five letters
Like the string that wavers in the wind
See the body and become wise

Commentary:
Agatthiyar explains to Pulatthiyar that he is offering this knowledge while contemplating upon the chinmayam or the embodiment of knowledge, the Divine.  He instructs Pulatthiyar to receive it while holding the Divine in his mind.  This tells us how a guru should impart a knowledge and how a student should receive it.  Both should be in the right state of mind so that the exchange becomes effective.  

The sloka "sahana vavathu"  invokes this idea.  Here the prayer says "May God protect us both (teacher and student during the journey of awakening our knowledge) and nurture us with energy and vigor (cleanse us so that the flow of energy for the knowledge occurs uninterruptedly). May our study be enlightening and not give rise to hostility, Peace"

Agatthiyar states that he is pacifying Pulatthiyar just as how a mother would calm down her daughterĀṛṛuppadai is a type of poetry in Tamil literature.  The term means “showing the way”.  Agatthiyar’s expression that he will pacify Pulatthiyar is in this manner. 
Agatthiyar  starts his teaching by saying that everything is panchakshara or namacivaya.   He explains the relationship between the body and the soul by equating it to a rope that is buffeted by the wind.  Just as how the wind makes the rope move, the prana or vital breath makes the body move.
Another interpretation could be that body is buffeted by desire like the rope, moved around in the wind. Also, the soul is the rope that dances in the body, the wind that takes it all over the place.

ஒரு குருவுக்கும் சீடனுக்கும் இடையே ஞான பரிமாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்று அகத்தியர் இப்பாடலில் நமக்குக் காட்டுகிறார்.  குருவானவர் தனது மனதில் இறைவனை, ஞானத்தின் உருவை நினைத்தவாறு உபதேசம் செய்கிறார்.  அதை ஒரு சீடர் இறைவனான பரிபூரணத்தை புத்தியில் வைத்தபடி பெற்றுக்கொள்கிறார்.  இவ்வாறு ஞான பரிமாற்றம் ஒரு உயர் விழிப்புணர்வு நிலையில் ஏற்படுகிறது.  

ஓம் சஹானாவவது" என்று தொடங்கும் மந்திரம் இந்தக் கருத்தையே குறிக்கிறது.  "இறைவன் நம் இருவரையும் இந்தப் பயணத்தில் காத்து நமது சக்திகள் இந்த ஞானப்பரிமாற்றத்துக்கு ஏற்றவாறு வைக்கட்டும்.  இப்போது நடைபெறும் கல்வி ஞானத்தை நமக்கு அளிக்கட்டும் பகைமையை அல்ல.  சாந்தி" என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அகத்தியர், மேலும், தான் புலத்தியரை ஒரு தாயார் தனது மகளை ஆற்றுவதைப் போல ஆற்றுவதாகக் கூறுகிறார்.  தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படை என்ற ஒருவித பாடல்முறை உள்ளது.  ஆற்றுப்படை சொல் நல்வழிபடுத்துவது என்று பொருள்படும்.  அகத்தியர் புலத்தியரை இவ்விதத்தில் ஆற்றுவதாகக் கூறுகிறார்.  

உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை விளக்கத் தொடங்கும் அகத்தியர் எல்லாமே நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரம் என்று கூறுகிறார்.  எவ்வாறு ஒரு கயிறு காற்றில் ஆடுகிறதோ அதைப் போல ஒரு உடல் பிராணன் என்னும் காற்றினால் ஆடுகிறது.  அல்லது ஆசை என்னும் காற்றினால் உடல் அல்லாடுகிறது.   அவ்வாறு ஆட்டப்படும் உடலினுள் இருக்கும் ஆத்மாவும் அதனுடன் அல்லாடுகிறது. 

43. Pulatthiyar's questions

Verse 43
சோதியே என்குருவே சிவமே ஐயா
சொல்லேதோ பொருளேதோ கருத்தானதேதோ
நீதியாய்க் காயத்தை நிலைக்கச் சொன்னீர்
நிலைத்ததனால் முத்தி வரும் என்றீர் ஐயா
வேதியர்கள் பூஜைசெய்த இடந்தான் எங்கே
மெய்யான பதிஎங்கே மெய்நூல் எங்கே
சாதி பல மந்திரங்கள்பிறந்த தெங்கே
சாத்திரங்கள் ஆனதெங்கே சாற்றிடீரே

Translation:
The flame, my preceptor, Sivam, Lord,
What is a word, a meaning, and its essence
You told us how to preserve the body
You also mentioned that by preserving it so one would attain liberation
Where is the place where the Vedics performed worship
Where is the true place, where is the true book
Where from did the different classes of mantra emerge?
Where did they become the scripture?  Please tell.

Commentary:
In this verse Pulatthiyar is raising some doubts and beseeches Agatthiyar to answer them.  He addresses Agatthiyar as the preceptor, the effulgence and Sivam.  He wants to know what a word, its meaning and this essence are, where the vedics performed worship, which is the true location, book, from where did the mantras occur and what became a sastra.

Pulatthiyar addresses Agatthiyar as Sivam.  This term indicates the state of supreme consciousness.   

A word is the completely manifested form of sound.  Its meaning is what the mind understands it to be.  For example cat is a word.  The mind understands it as a living being with four legs, a tail and other qualities that define a cat.  The essence is what it actually means, that it is soul embodied as an entity that appears as cat.  The essence is the true meaning of the cat, beyond the senses and the mind.  Pulathiyar requests Agatthiyar to explain the essence of everything.

Kaya siddhi is the process of perfecting the body so that it serves as a vehicle to perform the austerities.  This is achieved through consumption of medicinal preparations, physical austerities and mental discipline.  Rasavada or alchemy is a process where certain herbs and chemicals transform the body into a more permanent one.  Kundalini yoga and ulta sadhana are other processes that transform a material body into a sacred body or body of light.  Please refer to the article "Types of bodies" at www.scribd.com where the different types of bodies that a Siddha goes through before attaining realization are described. 
The essence of Vedas is knowledge about the Supreme.  A Vedic is one who attempts to reach the supreme state following the physical and mental procedures listed in the Vedas.  Mantras are sounds that take one to this state and sastras are the principles that explain this process.
Pulatthiyar wants Agatthiyar to explain all these concepts.

இப்பாடலில் புலத்தியர் அகத்தியரிடம் பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு பதில் கூறுமாறு வேண்டுகிறார்.  ஜோதி, குரு, சிவம் என்று அகத்தியருக்குப் பல பட்டங்களை அளித்து அவர் அகத்தியரிடம் சொல், பொருள் அதன் கருத்து என்றால் என்ன, வேதியர்கள் எங்கே பூஜை செய்தனர், உண்மையான நூல், இடம் எது, எங்கிருந்து மந்திரங்கள் தோன்றின அவை எவ்வாறு சாத்திரங்கள் ஆகின என்ற கேள்விகளைக் கேட்கிறார். 

புலத்தியர் அகத்தியரை சிவமே என்று அழைக்கிறார். சிவம் என்பது உயர் விழிப்புணர்வு நிலையைக் குறிக்கும்.  சொல், பொருள், அதன் கருத்து- சொல் என்பது புலன்களால் பெறப்படும் அறிவு, அதன் பொருள் என்பது அதை "இது" என்று புத்தியால் உணர்ந்துகொள்வது.  உதாரணமாக பூனை என்பது ஒரு சொல்.  அந்த சொல்லை புத்தியினால் நான்கு கால்களை உடையது, இவ்வாறு குரலையுடையது என்று அதனால் இந்த சொல் இந்த பொருளைக் குறிக்கிறது என்று புரிந்துகொள்வது.  கருத்து என்றால் அந்தப் பொருள் உண்மையிலேயே என்னது என்று அறிவது.  பூனை என்பது குறிப்பிட்ட கர்மங்களைஉடைய ஒரு ஆத்மா குறிப்பிட்ட குணங்களையுடைய உடலை எடுத்துக்கொண்டு வந்துள்ளது.  அது இவற்றைச் செய்யும் என்று புரிந்துகொள்வது.  இவற்றை அகத்தியர் விளக்க வேண்டும் என்று வேண்டுகிறார் அகத்தியர்.

காய சித்தி என்பது பருப்பொருளால் ஆன இந்த உடலை திவ்விய தேகம் அல்லது பொன்னுடலாக மாற்றுவது.  ரசவாதம், குண்டலினி யோகம் மற்றும் உல்டா சாதனா அல்லது மடை மாற்றம் என்றும் பல வழிமுறைகள் இந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.  இதைப் பற்றிய ஒரு கட்டுரையை www.scribd.com என்னும் தளத்தில் காண்க.  

மந்திரம் என்பது உயர்விழிப்புணர்வு நிலையைத் தரும் சொற்கோர்வை.  ஒரு தத்துவத்தைக்இ கூறுபவை.  சாத்திரம் என்பது அந்த மந்திரம் குறிக்கும் ஒரு பொருளைப் பற்றிய கருத்துக்கள் வழிமுறைகள்.  வேதம் என்பது இறைவனை எவ்வாறு அடைவது என்று கூறும் விளக்கவுரை.  வேதியர்கள் என்பவர் வேதத்தின் உட்பொருளான இறைவனை அடைய அந்த வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள்.  அவர்கள் பூஜை செய்யும் இடம் என்பது குண்டலினி யோகம் மேற்கொள்ளப்படும் உடலாகவோ, கர்ம யோகம் செய்யப்படும் இடமாகவோ தவங்கள் மேற்கொள்ளப்படும் மனமாகவோ இருக்கலாம்.  இந்த விஷயங்களை விளக்கிக் கூறுமாறு அகத்தியரிடம் புலத்தியர் வேண்டுகிறார். 

Friday, 21 February 2014

42.Theme of different books

Verse 42
அந்த நூல் ஆயிரத்து இருநூற்றுள்ளே
ஆட்டம் என்ற ஆட்டம் எல்லாம் ஆடித்தீர்ந்தேன்
பிந்த நூல் சௌமியமாம் சாகரத்திலே
பேசினேன் சகலநூல் பெருக்கமெல்லாம்
முந்த நூல் காவியந்தான் ஆயிரத்துள்ளே
முறை முறையாய் ஞானமொடு சரக்கு வைப்பும்
இந்த நூல் காவியந்தான் ஆயிரத்துள்
ஏக நிராமயமான சோதி தானே

Translation:
In that work that contains thousand two hundred
I performed all the dances/ actions
In the following work, saumya sāgaram
I talked about all the works, their expansions
In the previous composition of thousand verses
I spoke about wisdom and storage methods
Within this composition of thousand
Only the fully complete effulgence.

Commentary:
Agatthiyar describes the topics he has elaborated upon in his different works.  He says that he has previously elaborated upon all kinds of topics in the 1200 (kalaijnanam) and saumya sagaram, and spoke about wisdom and storage methods in the previous composition of 1000 verses.  In this work he has focused only on the Divine experience, the fully complete effulgence, nirāmaya jyoti.


அகத்தியர் மெய்ஞ்ஞானம் என்னும் இக்காவியத்தினுள் அகத்தியர் கலைஞானம் என்றொரு பகுதியைத் துவங்குகிறார்.  முதலில் தனது பிற நூல்களைப் பற்றிய சிறுகுறிப்பைத் தரும் அகத்தியர் தான் ஆயிரம் என்னும் நூலில் எல்லாவற்றையும் விரிவாக விளக்கியுள்ளதாகவும் அதே போல் சௌமிய சாகரம் என்ற நூலிலும் பல விஷயங்களை விளக்கியுள்ளதாகவும் கூறுகிறார்.  தனது ஞானம் ஆயிரம் என்ற நூலில் ஞானத்துடன் சரக்கு வைப்பை பற்றிக் கூறியுள்ளதாகவும் இந்நூலில் தான் பரவுணர்வு, நிராமயமான பரஞ்சோதியைப் பற்றி மட்டுமே கூறப்போவதாகவும் குறிப்பிடுகிறார்.

41. Agatthiyar's work with 1200 verses

Verse 41
கலைஞானம் 1200
அறைந்திட்டேன் பேர்வகையும் ஊரும் சொல்லி
அரஅரா அகாரமொடு உகாரம் ரெண்டும்
நிறைந்திட்டேன் நிராமயப் பொருளைக் காட்டி
நிச்சயமாய் அகாரசித்தி நிலைக்கச் சொன்னேன்
திறந்திட்டேன் ஆதி அந்தக் குருவைக் காட்டி
சிவ சிவா முப்பூவும் தெளிவாய்ச் சொல்லி
குறைந்திட்டுப் போகாமல் சகல சித்தும்
கொட்டினேன் அந்த நூல் கூர்ந்து பாரே

Translation:
I announced forcefully uttering the names and the town
Araharā both the akāra and ukāra
I became full, showing the fully complete object
I taught you how to surely attain the akāra siddhi
I opened, the origin, showing the guru
Siva sivā! describing the muppū clearly
I revealed all the mystical accomplishments (siddhi) without holding anything back
See that book carefully where I have poured (everything).

Commentary:
Agatthiyar says that he elaborated about the akāra and ukāra mentioning all the names and sites, that he has revealed the fully complete object- the Divine, that he has taught Pulatthiyar how to attain akāra siddhi showing the guru- the kundalini and the site of the guru (at the entrance of the sahasrara),  described the muppū and all the siddhis that would occur.  He advises Pulatthiyar to read that work carefully.   Details about muppu were given in verse 5


இப்பாடலில் அகத்தியர் தான் தனது நூலில் அகார உகாரங்களைப் பற்றி விளக்கியுள்ளதாகவும் எல்லா பெயர்கள் இடங்களையும் நிராமயப் பொருளையும் காட்டியுள்ளதாகவும் எவ்வாறு அகார சித்தியை அடைவது என்பதைக் கூறியுள்ளதாகவும் முப்பூவைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளதாகவும் அதனால் தனது நூலைக் கவனமாகப் படிக்குமாறும் கூறுகிறார்.  முப்பூவைப் பற்றிய விவரங்கள் ஐந்தாம் பாடலில் கொடுக்கப்பட்டன.

Wednesday, 19 February 2014

40. where is this black gooseberry tree, what is so special about it?

Verse 40
சூக்ஷமென்றால் வெகு சூக்ஷம் மௌன சூக்ஷம்
சொல்ல வென்றால் வெகுதூரம் சொன்னால் சூக்ஷம்
காக்ஷி என்ற காக்ஷிகளும் நெல்லியூடே
கைவல்லிய மாடுதற்குக் கடினமப்பா
சாக்ஷிஎன்ன வென்றக்கால் குருவே சாக்ஷி
தவத்தோர்க்கு லபிக்கும் அடர் கறுத்த நெல்லி
ஆக்ஷி எங்கே என்றக்கால் சொல்லக் கேளு
ஆயிரத்து இருநூற்றில் அறைந்திட்டேன்

Translation:
Subtle very subtle, the subtlety of silence
To tell, it is the deep subtlety,
All the scenes through the gooseberry
Kaivalyam is difficult to remain in,
The only witness for this is guru
For those who performed austerities, the dark black gooseberry will be attained.
Where does it rule, if questioned, listen to me say it
I told clearly in thousand two hundred

Commentary:
Agatthiyar says that the principle behind the black gooseberry is very subtle and that one witnesses all kinds of scenes there.  When kundalini rises through the cakra the aspirant is blessed with various visual and aural experiences.  No one other than the aspirant gets to see these scenes.  Hence, Agatthiyar says that the one witness is the guru, the kundalini sakti.  If one questions where this black gooseberry tree is Agatthiayar says that he has explained it in 1200 verses.  He may be referring to this work or to his other work, Saumya sagaram or any other work with 1200 verses.  


கருநெல்லியின் காட்சி மிக சூட்சுமம் என்று கூறும் அகத்தியர் அதை அனுபவிக்கும் ஒரு யோகி பல்வேறு காட்சிகளைக் காண்கிறார் என்கிறார்.  குண்டலினி சக்தி சக்கரங்களின் ஊடே மேலே ஏறும்போது பல்வேறு காட்சிகளும் ஓசைகளும் தோன்றுகின்றன.  அவை அந்த யோகிக்கு மட்டுமே பிரத்யேகமாக ஏற்படுபவை.  அதற்கு இருக்கும் ஒரே சாட்சி குருவான குண்டலினி சக்திதான்.  இந்த கருநெல்லி மரம் எங்கே உள்ளது எங்கே அரசாளுகிறது என்று கேட்பவருக்கு அகத்தியர் தான் அதை  1200 பாடல்களில் விளக்கியுள்ளதாகக் கூறுகிறார்.  அப்பாடல்களை இனி வரும் பதிவுகளில் காண்போம்.

39. Under the gooseberry tree where the princess roams...

Verse 39
நெல்லி மரச் சோலையின் கீழ் பிரம்ம யோகி
நிச்சயமாய்த் தவமிருந்தார் நினைவால் சேரு
வல்லி திரு நடமாடு வனத்தின் ஊடே
மாதவங்கள் புரிந்து நிற்கும் விருஷத் தோடே
அல்லி அரசாணி சுத்தி வருவதங்கே
அஞ்செழுத்தும் தவம் புரிவார் முனிவோர் அங்கே
சொல்லி விளையாடி வரும் வாழை அங்கே
சூக்ஷமெலாம் கரு நெல்லி சூக்ஷம் தானே

Translation:
The Brahma yogin, under the gooseberry tree grove
Performed tapas, for sure, join through thoughts
Through the forest where valli dances
Along with the tree that stands performing severe penance
There, the queen (alli arasāni) roams
The sages will perform penance on the five letters
The plaintain will come there playing and declaring itself
All the subtleties are the subtleties of the black gooseberry.

Commentary:
This verse is about the black gooseberry.  Just like the previous verse about the white rat snake the black gooseberry is also not the medicinal plant but has an esoteric meaning.  Agatthiyar says that Brahma yogin is performing austerities under the gooseberry tree.  The tree here is the sushumna nadi that ends in the sahasrara.  The yogin interested in realizing the Brahman performs vāsi yogam that begins at the muladhara, the base of the tree.  Baladevaraya in his composition kanda sashti kavacham- pazhani pathikam mentions about karu nelli and ven sārai and says that Sadasiva remains on top of it.  Sadasiva is the first manifestation, the state of supreme consciousness.  This verse also reflects that idea.  Agatthiyar says that this is the place where the queen kundalini rules and roams around.  A yogin performs his austerities through the five lettered mantra namacivaya here.  This penance makes the plaintain, the cakra at the sahasrara which is usually referred to as the downward facing plaintain flower come about dancing.  Agatthiyar impresses the importance of this process by stating that the subtlety about the gooseberry is the most subtle knowledge of all.

The term vaazhai which means plaintain may also be vaalai, a scribal error.

கருநெல்லியைப் பற்றிய இப்பாடலில் அகத்தியர் முந்தைய பாடலில் கூறியபடி இது நெல்லி மரமல்ல ஓர் உட்பொருளைக் கொண்ட சொல் என்று புலப்படுத்துகிறார்.  நெல்லி மரத்தின் அடியில் பிரம்ம யோகி தவமிருக்கிறார் என்று அகத்தியர் இப்பாடலைத் தொடங்குகிறார்.  பிரம்ம யோகி என்பவர் பிரம்மத்தைப் பற்றி அறிய விரும்புபவர், பிரம்மத்துடன் யோகத்தில் இருப்பவர்.  இங்கு நெல்லி மரம் என்பது சுழுமுனை நாடி சஹாஸ்ராரத்தில் முடிவுறுவதைக் குறிக்கிறது.  பாலதேவராயர் இயற்றிய கந்த சஷ்டி கவசம் பழநியைப் பற்றிய பதிகத்தில் கருநெல்லி வெண்சாரையைப் பற்றிக் கூறி அதன் மேல் சதாசிவன் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.  இந்த இடத்தில் முனிவர்கள் ஐந்தெழுத்தான பஞ்சாக்ஷரத்தைக் கொண்டு தவம் புரிவர் என்றும் அங்கு அல்லி அரசாணி திரிவாள் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அல்லி அரசாணி என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  ஐந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரம் நமது உடலின் பல பகுதிகளாக இருக்கிறது.  அது பஞ்ச பூதங்களையும் சக்கரங்களையும் குறிக்கின்றது.  யோகிக்கும் முனிவருக்கும் உள்ள வேறுபாடு- யோகி இறைவனுடன் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இணைந்தவர், முனிவர் அந்த இணைப்பை வேண்டி முனைபவர்.  இவ்வாறு தவம் புரிந்தால் வாழை விளையாடியபடி தோன்றும் என்கிறார் அகத்தியர்.  சஹஸ்ராரத்தை தலைகீழ் உள்ள வாழைப்பூ என்று குறிப்பிடுவர்.  அதன் அமைப்பு யோக சித்தி ஏற்படுவதற்கு முன் குவிந்தும் பிறகு மலர்ந்தும் இருக்கும்.  இப்பாடலின் முடிவில் அகத்தியர் இந்த தத்துவம் மிக சூட்சுமமானது என்று கூறுகிறார். 

 இங்கு வாழை என்றது வாலையாகவும் இருக்கலாம்.