Sunday 2 February 2014

18. Ganapathi puja

Verse 18

கணபதி பூசை
காணப்பா கணபதியின் பூசை கேளு
கருவாக முக்கோணம் கணக்கைப்போட்டு
ஆணபா அதினுள்ளே விந்து விட்டு
அர அரா சிவயோக எழுத்தைப் போட்டு
தோணப்பா முக்கனியும் பாகும் சேர்த்து
தூப தீபம் கொடுத்துக் குட்டிக்கொண்டு
பேணப்பா பூரண சூத்திரத்தில் சொன்ன
பெருமையுள்ள மந்திரத்தைச் செபமே பண்ணே  (18)

Translation:

Worship of Ganapathy

See here, Listen to Ganapathy puja,
Draw the triangle as the womb
Placing the bindu within it
Hara harā drawing the letter of Sivayogam
Mixing the three fruits and caramel
Fragrance, lamp, and ceremonial knock on the temples
Cherish the famous mantra mentioned in the purna sutra
Chant it.

Commentary:
This verse describes the Ganapathy yantra.  The yantra contains a downward triangle to signify the base or the essence or the womb.  The bindu or the dot is placed in the middle with the letter of Sivayogam.  Three fruits are mango, jackfruit and banana.  Caramel is made by boiling jiggery and thickening.  These three fruits represents the qualities of satva, rajas and tamas.  The worship ritual includes offering fragrance, lighting the lamp and the ceremonial knock at the temples, on either side of the head.  This point on the skull is said to arouse the glands on both sides of our skull and activate the amrit that flows down through the sushumna nadi to the muladhara.  This nectar serves as the fluid for sacred ablution for Ganapathy the Lord of the muladhara cakra.  Agatthiya does not reveal the mantra for worship but tells us that it is mentioned in the purna stura, one of his other works. 

The two verses (6, 7) in purna sutram that describes the Ganapathy pooja are given below.
நிசமான பூரணத்தைச் சொல்லக் கேளு
நின்மலர்த்தாய்  என்றனுக்கு உபதேசித்தாள்
வசமான அடி மூலம் கணேசர் கோயில்
வட்டமாய் ஐங்கோணம் திரிகோணத்தில்
எசமான கணேசரோடு வல்லபையும் கூட்டி
இருக்குமடா ஓம் ஈம் கிலீயும் என்று
வசமான அங்சிவ கணபதி தேவா என்று
வாழ்த்தடா குண்டலினித்தாய் வணங்குந் தானே

Summary:
The mother (sakti) taught me this. The muladharam in the lower terminus is the temple of Ganesar.  Draw the circle, five angles, triangle, invoke Ganapathi and Vallabai.  Chant aum eem kleem ang siva ganapathi deva.


வணங்குவதுக்கு இப்படி நீ சக்கரத்தை
வரிசையாய்க் கீறியே அட்சரங்கள்
பிணங்காமல் ரீங் காரம் நடுவே இட்டு
பேரான கோணாமதில் ஐந்தும் இட்டு
இணங்கவே தூப நைவேத்தியத்தோடு
இலச்சம் உருவேற்றிடக் குண்டலிதான் என்றும்
கணமான கணபதிதான் பிரகாசிக்கும்
கயிலாயப் பரகதியைக் காட்டுந்தானே

Summary:
Drawing the yantras as mentioned above draw the rī in the middle, draw the five angles. Offer fragrance, food offerings and chant one lakh 1,00,000 times.  Then Ganapathy, the kundalini will shine.  It will show the Kailayam.  The supreme state beyond the sahasrara is the kailayam.


Thus from the above two verses we realize that the letter that should be written in the middle is rī and the mantra that should be chanted is aum eem kleem ang siva ganapathy deva.


இப்பாடல் எவ்வாறு கணபதி பூஜை மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகிறது.  கணபதி யந்திரத்தில் ஐந்து கோணங்களும் முக்கோணமும் இட்டு அதன் நடுவே பிந்துவும் சிவயோக எழுத்தையும் எழுதி முக்கனியும் பாகும் படைத்து தலையில் குட்டிக் கொண்டு தூப தீபம் காட்டி கணபதி மந்திரத்தை உச்சரிக்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  கணபதி மந்திரத்தை வெளிப்படையாகக் கூறாமல் அதை பூரண சூத்திரம் என்னும் நூலில் கூறியுள்ளபடி உச்சரிக்கவேண்டும் என்கிறார்.  பூரண சூத்திரத்தில் மேலேயுள்ள இரு பாடல்கள் காணப்படுகின்றன.  அதில் கணபதி யந்திரத்தில் ஐங்கோணமும் முக்கோணமும் இட்டு அதன் மத்தியில் ரீங் என்னும் எழுத்தை எழுதி ஓம் ஈம் க்லீம் அங் சிவ கணபதி தேவா என்ற மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றினால் குண்டலினி, கணபதி வெளிப்பட்டு கைலாயத்தைக் காட்டுவார் என்று அகத்தியர் கூறுகிறார். கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைத் தாண்டி நிலவும் உணர்வு நிலை. 

No comments:

Post a Comment