Sunday 2 February 2014

19. Ganapathy puja- verse 2

Verse 19

பண்ணப்பா கணபதிதான் பிரகாசிக்கும்
பார்க்கையிலே சிவ வாசி பளிச்சென்றேறும்
உண்ணாப்பா முக்கனியின் ரசத்தை வாங்க
ஓஓஓ மந்திரங்கள் எல்லாம் சித்தி
விண்ணப்பா தானோக்கி விழித்துப் பார்த்தால்
மெய்யாறு தலங்கள் எல்லாம் வெளியாக் காணும்
கண்ணப்பா கடுத்ததென்றால் பிரட்டி எடுத்து
            கயிலாய பூரணத்தைக் கலந்து கூட்டே   (19)

Translation:
If you do so Ganapathy will shine
The siva vāsi will rise up promptly while perceiving it.
Drink the essence of the three fruits
O O O siddhi of all the mantras will be attained
If the sky/top is seen with eyes wide and focused
All the six true sites will be seen as space
If the eye hurts blink
And merge with the fully complete kailaya.    (19)

Commentary:
This verse talks about a special type of meditation.  Here the attention is focused at the sahasrara or the top of the head.  The eye is made to look up so that the mind remains focused at the sahasrara.  During this meditation, the prana sakthi or kundalini sakti rises up.  Agatthiyar calls this as siva vasi.  The pranayama that the Tamil Siddhas perform is called vasi yogam.  During inhalation the yogin perceives the sound va and during exhalation he perceives si.  The vasi rises to the top that Agatthiyar calls as Kailasa.  The juice of the three fruits refers to the amrit from the lalata that is the essence of the three basic qualities satva, rajas and tamas.  The yogin thus goes beyond these qualities.  Siddhi of all the mantras is attained by this practice.  The yogin will perceive the six lower chakras as space.  Space here refers to the supreme state.  The Divine is called vetta veli or fully complete space that is not tainted by anything.  It is space and space only with nothing in it or nothing changing its nature.  
As the eyes are focused up towards the sahasrara and half closed, they will start to hurt.  Agatthiyar says that one should bring them down, blink and then take them up to focus at the sahasrara.  

அகத்தியர் இப்பாடலில் ஒரு முக்கியமான தியான முறையை விளக்குகிறார்.  இந்த தியான நிலையில் கண்களை சகஸ்ராத்தை நோக்குமாறு  வைத்து, அரைக்கண் மட்டுமே திறந்து கவனத்தை சஹாஸ்ராரத்தில் குவிக்க வேண்டும். அப்போது வாசி எனப்படும் பிராணனுடன் கலந்த மூச்சு மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்தை நோக்கி எழும்.  தமிழ்அ சித்தர்களின் பிராணாயாம முறை வாசி யோகம் எனப்படுகிறது.  இதைச் செய்யும் ஒரு யோகி மூச்சை உள்ளிழுக்கும்போது வா என்றும் வெளி விடும்போது சி என்றும் எழும் சத்தங்களைக் கேட்கிறார்.  அவ்வாறு செய்யும்போது எல்லா மந்திரங்களும் சித்தியாகும்.  ஆறு சக்கரங்களும் வெளியாய் காணும்.  இங்கு வெளி என்றால் என்ன என்று சிறிது பார்ப்போம்.  தமிழ் சித்தர்கள் இறைவனை வெட்ட வெளி என்று அழைக்கின்றனர்.  வேறு எதுவும் கலக்காத, வேறு எதுவும் அதன் தன்மையை மாற்றாத வெறும் வெளி மட்டுமே என்று இதற்குப் பொருள்.  ஆறு சக்கரங்களும் வெளியாகத் தெரியும் என்றால் அவை யாவும் இந்த உயருணர்வு நிலையாக, இறைமையாக்த் தெரியும் என்று பொருள்.  சக்கரங்கள் தாம் குறிக்கும் தத்துவங்களாக இல்லாமல் உச்ச நிலையான வெளியாகும் என்று இதற்குப் பொருள்.  

கண்களை இவ்வாறு சகஸ்ராரத்தை நோக்கி வைத்தால் அதில் வலி ஏற்படும்.  அதனால் அவற்றைக் கீழே கொண்டு வந்து கொட்டிவிட்டு மீண்டும் கைலாயம் எனப்படும் சஹஸ்ராரத்தை நோக்கி ஏற்ற வேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment