Thursday 13 February 2014

26. Siva vaalai pujai-2 cakras

Verse 26
சொல்லுவேன் ஐந்து முகம் மூன்று முகமுமாச்சு
சுகமாக ஆறுமுகம் எங்கே என்றால்
நல்லுவேன் அடிமூலம் நாலு கோணம்
நாயகனார் புள்ளிபதி பத்தும் ஆச்சு
அல்லுவேன் புருவமையம் மூன்று கோணம்
ஆறுமுகம் இதிலடக்கம் அறிவுள்ளோர்க்கு
கெல்லுவன் நாலு பத்துமூன்று மாச்சு
கிருபையுள்ள புலத்தியனே இன்னங் கேளே

Translation:
I will tell. The five faces and three faces
“Where is the comfortable six face?”- If this is enquired
I will grant the four corners in the lower terminal, origin (muladhara)
The Lord’s focused existence became ten
I will say, the triangle at the middle of the brows
The six faces are contained within this for the wise.
I will say for the wise that it became four tens and three
The merciful Pulatthiya! Hear further.

Commentary:
This verse describes the SriCakra, the supreme yantra for worshipping Sakti.  The topic is so vast.  There are several books on SriCakra and SriVidya method of worship.  The significance of Agatthiyar mentioning it here is that it is a ritual that, even though claims an origin in Kashmir, was common throughout India including the Tamil Siddha land. The kadhi sampradaya, one of the methods of Srividya upasana claims Agatthiyar as the rishi responsible for it.  This verse adds credence to this theory.
For brevity let us look at only the most significant aspects of this cakra that Agatthiyar is describing here. 

The cakra has a central dot called the bindu that represents the union of Siva and Sakti.  This is the point from which the manifested world emerges.  It is here that everything dissolves in the end.  This bindu emerges into the next stage of creation, the triangle.  This triangle represents the three qualities sattva, rajas and tamas the foundation of the world.  The triangle is also referred to as Devi’s three eyes, the sun, the moon and the fire.

The next stage of emergence is the five downward facing triangles representing sakti and four upward facing triangles representing Siva.  The five sakti triangles represent the five elements that make up this world.  They also represent the five components of the human body namely flesh, fat, skin, blood and bone.  The four siva triangles represent the four types of fires: maya, suddha vidya, maheswara and sadasiva.  They also represent the marrow, semen, breath (prana) and life (jiva).  The five sakti cakra are identified with creation and the four triangles of siva are identified with dissolution. 

More than the major cakras the minor or subcakras, the lines of intersection, two sets of lotus petals and three lines forming the outer gateways are important.  The three circles, eight petalled lotus, sixteen petalled lotus and the three lines of the gateway are identified with Siva while the innermost triangle, the 8 minor triangles (vasukona), two sets of ten triangles and fourteen triangles (manvasra) are identified with Sakti.  The innermost triangle and the bindu expands into eight minor triangles, the vasukona.  The vasukona and the inner triangle encompases all the symbols, deities and powers of the entire Sricakra.  This is what Agatthiyar refers to as five and three faces, the total of eight triangles, the essence of Sricakra. 

The six faces referred to next means the union of an upward facing triangle and a downward facing triangle that leaves with a sixpointed star, the shatkona of Subramanya.  This represents the union of Siva and Sakti which leads to the birth of Skanda. This is seen in the muladhara, the primary axis, the point from which the manifested world emerges.   

The next level of emanations are the two sets of ten triangles that Agatthiyar refers to as the loci of ten.  The inner set of ten triangles refer to the five elements and their five subtle qualities and the outer ten triangles represent the ten vital breaths.  Agatthiyar says that all these abide in the triangle in the ajna.  The cakras below the ajna, the anahata, the manipura and svadishtana represent the five elements, five tanmatra, five organs of knowledge and five organs of action. All these abide in the ajna at which point only the atma exists. He also says that the six faces abide within this.  The six faces, the manifested universe abide here.  Beyond this only states of consciousness exists from ajna to sahasrara and beyond.

Agattthiyar concludes this verse by saying that this is the secret of the forty three triangles that the wise will understand.  

வாலைப் பூஜையைப் பற்றிக் கூறத்தொடங்கிய அகத்தியர் இப்பாடலில் தேவியின் உச்சகட்ட யந்திரமான ஸ்ரீ சக்கரத்தை விவரிக்கிறார்.  ஸ்ரீ வித்யா உபாசனையைப் பற்றியும் ஸ்ரீ சக்கரத்தைப் பற்றியும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.  ஸ்ரீ வித்யா மந்திரத்தின் ஒரு வகையான காதி சம்பிரதாயத்துக்கு அதிபதி அகத்தியர் என்று கூறுவதற்கு இப்பாடல் சான்றாகத் திகழ்கிறது.  இதனால் ஸ்ரீவித்யா உபாசனை, காஷ்மீரத்தில் தோன்றியதாகக் கூறப்பட்டாலும் அது இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு வித உபாசனை முறை என்றும் அதைத் தமிழ் சித்தர்கள் அறிந்திருந்தனர் என்று நமக்குத் தெரிகிறது.  இப்பாடல் எவ்வாறு ஸ்ரீ சக்கரத்தை விளக்குகிறது என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருப்பது பிந்து எனப்படும் புள்ளி.  இது சக்தியும் சிவனும் கூடிய நிலையைக் குறிக்கும்.  இந்தப் புள்ளியிலிருந்துதான் உலகம் தோன்றியது, அதில்தான் மறைகிறது.  இந்த புள்ளியின் அடுத்த நிலை முக்கோணம்.  இதுவே உலகத்தின் முதல் தோற்றம்.  இந்த முக்கோணம் சத்துவம், ரஜஸ் தமஸ் என்ற உலகம் தோன்றுவதற்குக் காரணமான முக்குணங்களைக்  குறிக்கிறது.  இந்த முக்கோணத்தை தேவியின் மூன்று கண்களான சந்திரன், சூரியன், அக்னி என்பர். 
இதனை அடுத்த வெளிப்பாடு மேல்நோக்கி உள்ள நான்கு முக்கோணங்களும் கீழ் நோக்கி உள்ள ஐந்து முக்கோணங்களும்.  மேல் நோக்கியுள்ள முக்கோணங்கள் சிவனையும் கீழ்நோக்கியுள்ள முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன.  ஐந்து முக்கோணங்கள் மனித உடலில் உள்ள மாமிசம், கொழுப்பு, தோல், ரத்தம், எலும்பு ஆகியவற்றையும் ஐந்து பூதங்களையும் குறிக்கின்றன.  நான்கு முக்கோணங்கள் நான்குவிதமான தீக்களான மாயை, சுத்தவித்யா, மகேஸ்வரன் மற்றும் சதாசிவனையும் குறிப்பதுடன் எலும்பினுள் இருக்கும் மஜ்ஜை, விந்து, பிராணம் ஜீவன் ஆகியவற்றைக் குறிக்கின்றன.  சக்தி முக்கோணங்கள் உலகின் தோற்றத்தையும் சிவனின் முக்கோணங்கள் உலகின் லயத்தையும் குறிக்கின்றன. 

பெரிய முக்கோணங்களை தவிர சிறிய முக்கோணங்கள், அவை சந்திக்கும் இடங்கள் சிறிய சக்கரங்கள் அல்லது முக்கோணங்கள் மற்றும் வரிகள் முக்கியமாக் கருதப்படுகின்றன. 
மூன்று வட்டங்கள், எட்டு மற்றும் பதினாறு இதழ் தாமரைகள், மூன்று வரிகளால் ஆன வாயில்கள் ஆகியவை சிவனுடனும்  எட்டு சிறிய முக்கோணங்கள் (வசுகோணங்கள்), இரண்டு பத்து முக்கோணங்கள், பதினான்கு முக்கோணங்கள் (மந்வசர) ஆகியவை சக்தியுடனும் அடையாளப்படுத்தப்படுகின்றன.  உள்ளே இருக்கும் பிந்துவும் முக்கோணமும் எட்டு வசுகோணங்களாக விரிந்து ஸ்ரீ சக்கரத்தின் எல்லா குறியீடுகள், தேவதைகள், சக்திகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.  இதைத் தான் அகத்தியர் ஐந்து முகம் மூன்று முகம் என்கிறார்.  இந்த வசு கோணங்களே ஸ்ரீ சக்கரத்தின் முழு சாரம்.

அடுத்து அகத்தியர் ஆறு முகங்களைக் குறிப்பிடுகிறார்.  மேல்நோக்கிய சிவ முக்கோணமும் கீழ்நோக்கிய சக்தி முக்கோணமும் சந்திக்கும்போது தோன்றுவது ஆறு முனைகள்.  இதுவே முருகனின் ஷட்கோணம் எனப்படுகிறது.  சிவனும் சக்தியும் சேர்ந்தபோது பிறப்பதே ஸ்கந்தன்.  இதைக் காட்டுவது நான்கு மூலைச் சதுரமான மூலாதாரம்.
ஸ்ரீ சக்கரத்தின் அடுத்த வெளிப்பாடு இரண்டு பத்து முக்கோணங்களாகும்.  அவை உள்ளே வெளியே என்று இரண்டு பிரிவுகளாகக் கருதப்படுகின்றன.  உள்ளே உள்ள பத்து முக்கோணங்கள் ஐம்பூதங்களையும் அவற்றின் குணங்களான தன்மாத்திரைகளையும் குறிக்கின்றன.  வெளியே உள்ள பத்து முக்கோணங்கள் பத்துவிதமான பிராணன்களைக் குறிக்கின்றன.  இவையிரண்டும் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞையில் அடங்குகின்றன.  ஆறுமுகங்களும் இங்கே அடங்குகின்றன என்பது காணால் உலகம் இங்கே முடிகிறது என்று பொருள்படும்.  ஆக்ஞைக்கு மேலே இருப்பது விழிப்புணர்வின் நிலைகள் மட்டுமே. 


இவ்வாறு கூறிய அகத்தியர் இந்த நாற்பத்து மூன்று முக்கோணங்களைப் பற்றிய விவரங்களை அறிவுள்ளோர் அறிவர் என்று கூறி பாடலை முடிக்கிறார். 

4 comments:

  1. Simple and clear Explanation ...Love it..

    ReplyDelete
  2. Thanks jnana jyothiamma for this comment!


    Six faces signify the six attributes of Divinity..Viz, Wisdowm, Dispassion, Strength,Fame, Wealth and Power.The six Chakkarams through which the Kundalini passes...overpowering the Animalistic nature in us and reaches the mid brain...Hypothalamus region and the Pineal Gland...an Equilateral triangle in the middle of the brows....Ajna Chakkram. There, body, mind and soul : thought , word, deed: 'ICHCHA', 'JANANA' AND 'KRIYA' SAKTHIS...Feeling, Knowing and Willing parts of the Mind...All these Merge in Equanimity...Hence the Equilateral Triangle in between the brows....the Ajna Chakra..

    ReplyDelete
  3. Explanation though simple, YET I feel the Creation/Supreme Consciousness Abides Within..." THAT."

    ReplyDelete
  4. Thanks Jnana Jyothi amma. Agatthiyar showed this explanation at the right time, as usual!

    ReplyDelete