Verse 37
கேளப்பா இதற்கல்லோ முன்னால் சொன்னேன்
கிருபையுள்ள கற்பநெறி கேளு கேளு
வாளப்பா மயேந்திரமாம் கிரியில் சென்று
மகாதவத்தைப் புரிவாய் வெண்சாரை உண்டு
ஆளப்பா ஆச்சாரை வருகும் பாரு
அரகரா உம் என்று தம்பித்தேந்தான்
கோளப்பா அகலுமடி பிடித்துக்கொண்டு
குருமணியாய் சுடர் விளங்கக் குறித்துப் பாரே
Translation:
Listen son, this is the reason why I told before
Listen to the special procedure karpa neri.
Going to the Mahendra giri
Perform severe austerities consuming the white serpent
That snake will come
Arahara, performing the sthambanam with "um"
Arahara, performing the sthambanam with "um"
Listen, holding to the lower terminus it will move away
Focus and see the effulgence which remains as the flame of the gurumani.
Commentary:
Agatthiyar is answering Pulatthiyar’s question, “What to do if death occurs before the stipulated waiting period?” Agatthiyar tells him that this was the reason for him mentioning about the karpa neri or the way of karpam first. kaya kalpam is a special medicinal preparation that keep one healthy and alive for a very long time so that one can accomplish his spiritual goal. Agatthiyar tells Pulatthiyar to go to Mahendragiri and perform intense austerities (tapas) consuming the “ven sārai”. He says that when the sthambanam or arresting the breath and mind are performed uttering "um" it will move up from the bottom terminus. If one looks at it carefully one will find that it is the gurumani.
Sārai in Tamil refers to a type of snake. In his work karpa deekshai (verses 81 and 82) Agatthiyar mentions about ven sārai in a coded language. He says that crores of miles away from Podigai hill is the Mount Meru. There is a place kōdhai aravu. To the left of it is the snake that is poisonous and to the right the white serpent (ven sārai). When they play together at Mount Meru it will become poisonous. When these two snakes remain entwined there will be too much desire and if a yogi goes there he will be turned into putrid. If a Siddha with a medicinal concoction goes there, he will remove the desire through deeksha and control the flow of energy.
Superficially this seems to refer to a place and two snakes. The inner meaning is as follows: Just as how the Podigal hills bring rain from the monsoon clouds and makes the water run as Tamraparani river with several tributaries, the point three finger measures above the muladhara is the location from where all the energy channels branch off. This is called Podigai in Siddha parlance. The distance of several crore refers to 72000 nadi or energy channels in our body that connects to the sushumna. Kodhai means a garland, aravu is the nadi- that is, the snake, kundalini moves through the nadi which is like a garland. When the prana moves through the two channels, ida (left) and pingala (right), the result will be like poison, it will terminates one’s lifespan. The left corresponds to the chandra kala and the right to the pingala and surya kala. For kundalini yoga the surya kala and the sushumna nadi are preferred to direct the breath up with the help of the fire of kundalini.
If a Siddha with the ‘kulikai’ a magical potion, the secret of how to control the mind, directs his prana, then it will move through the sushumna nadi which is said to be red in color. Desires are removed and he is granted diksha and subsequently the realization. Thus, the ven sārai is the chitra nadi which is within the sushumna nadi.
If a Siddha with the ‘kulikai’ a magical potion, the secret of how to control the mind, directs his prana, then it will move through the sushumna nadi which is said to be red in color. Desires are removed and he is granted diksha and subsequently the realization. Thus, the ven sārai is the chitra nadi which is within the sushumna nadi.
அகத்தியர் பன்னிரண்டு வருடங்கள் குருவுக்கு சேவை செய்யவேண்டும் என்று கூறியபோது புலத்தியர் அந்த காலம் முடிவதற்குள் இறப்பு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு அகத்தியர் அதனால்தான் தான் கற்ப நெறியை முதலில் விளக்கியதாக பதிலிறுக்கிறார். காய கல்பம் என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்து ஒருவரது ஆயுளை அதிகரிக்கும் ஒரு மருந்தாகும். இதைத்தான் அகத்தியர் கற்பநெறியில் விளக்கினார். அதன் பின் அவர் புலத்தியரை வெண் சாரையை உண்டு பன்னிரண்டு வருடங்கள் மகேந்திர கிரியில் கடும்தவம் புரியவேண்டும் என்று கூறுகிறார். அந்த சாரை வரும்போக்கை விளக்கும் அகத்தியர் அது ஒருவரை ஸ்தம்பிக்கச் செய்யும் என்றும் அது அடியைப் பிடித்துக்கொண்டு அகலும் என்றும் கூறுகிறார். வெண்சாரை என்றால் என்ன என்று இப்பொழுது பார்ப்போம்.
சாரை என்பது ஒருவகைப் பாம்பு. இந்த சாரையைப் பற்றி அகத்தியர் தனது கற்ப தீட்சையில் குறிப்பிட்டுள்ளார். (http://yogicpsychology-research.blogspot.in/)
பொதிகை மலைக்கு ஆயிரம் கோடி காததூரம் மேரு மலை உள்ளது என்றும் அங்கு இருக்கும் கோதை அரவின் இடப்பாகத்தில் பெரும் விஷமும் வலப்பாகத்தில் வெண் சாரையும் இருக்கின்றன என்றும் இவை இரண்டு சர்ப்பங்களும் மேருவில் பிணைந்து விளையாடுகின்றன என்றும் அதை சாதாரண மக்கள் கண்டால் காமம் மிகுந்து அவர்கள் மலமாவார்கள் என்றும் குளிகையைப் பெற்ற ஒரு சித்தர் அங்கு போனால் அந்த காமத்தை தீட்சையின் மூலம் நீக்கி சக்தியை ஓடச் செய்வர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
வெளிப்பார்வைக்கு இரு பாம்புகளைப் பற்றிக் குறிப்பதைப் போல உள்ள இப்பாடலின் உட்பொருள் கீழ்க்காணுமாறு: பொதிகை மலை எவ்வாறு காற்றைத் தடுத்து மழை நீரை தாமிரபரணி ஆறாக ஓடச்செய்கிறதோ அதைப் போல மூலாதாரத்துக்கு மூன்று விரற்கடை மேலுள்ள ஒரு இடத்திலிருந்து நாடிகள் தோன்றி உடல் முழுவதும் ஆற்றைப் போல ஓடுகின்றன. இவ்விடத்தையே சித்தர்கள் பொதிகை என்று குறிக்கின்றனர். இதற்கு வெகுதொலைவில் உள்ளது மேருமலை அதாவது சஹஸ்ராரம். இங்கு பிராணன் இடை பிங்கலை என்ற இருநாடிகளின் ஊடே, (பாம்புகளாக) செல்லும்போது அது ஒருவரை ஆசைகள் மிகுந்த சம்சாரத்தில் தள்ளி அவரை மலமாக்கிவிடும். ஆனால் வெண் சாரையான சித்திரநாடியின் உள்ளே இருக்கும் சுழுமுனை நாடியில் பிராணனை செலுத்தக் கூடிய ஒரு குளிகையை, தகுதியைப் பெற்ற ஒரு சித்தர் இங்கு, சஹாஸ்ராரத்துக்குச் சென்றால், தனது பிராணனை ஏற்றினால், ஆசைகள் தீட்சையால் அறுந்து பரவுணர்வு ஏற்படும். இதுவே இப்பாடலின் உட்பொருள்.
இவ்வாறு வெண்சாரை உண்டு தவம் புரிவது என்பது பிராணனை சுழுமுனை வழியே ஏற்றுவது என்று பொருள். இவ்வாறு ஒருவர் செய்தால் குண்டலினி சக்தி மூலாதாரமான அடியைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறும், மூலாதாரத்தைவிட்டு அகலும். அது ஒருவரை செயலற்று ஸ்தம்பிக்கச் செய்யும். இந்த ஓட்டத்தை ஒருவர் கூர்ந்து கவனித்தால் அது குருமணியின் ஒளி என்று காண்பர் என்று அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment