Verse
24
தானென்ற
கர்மமெட்டில் இப்படியே போடு
தருவான பூஜைவிதி தாவடமும்
பூசை
வானென்ற
பொருள்களெல்லாம் வெளியாய்ச் சொன்னேன்
வஞ்சம் விட்டு இந்நூலில்
மகிழ்ந்தேன் அப்பா
பானென்ற
பானம் உண்டாள் எனக்குச் சொன்னாள்
பாசம்விட்டு நேர்மை வைத்து
பரத்தைக் கேளு
கோனென்ற
புலத்தியனே பிரம்ம யோகி
குருவான சிவவாலை பூஜை கேளே (24)
Translation:
Write
so for all the eight karmas
Perform the worship according to the
rules mentioned
I
told you clearly all the secret topics
Without any deceit, in this work,
Sir
The
Lady who consumed the drink told this to me
Leaving attachment listen to the
words of the Supreme
The
king, Pulatthiya is the Brahma yogi
Listen about the Siva vālai puja
which is the guru. (24)
Commentary:
This yantra is used for all the ashta
karma listed in verse 10. Agathiyar says
that he has revealed here all the rituals that were held secret so far. He adds
that he has done so without any deceit and that he received this knowledge from
the Supreme Being. He explains to
Pulatthiyar his disciple, the brahma yogi- one who is interested in merging
with the Brahmam, that he will be teaching about the Siva vālai puja next.
Agatthiyar has composed a work
Chidambara Cakkaram exclusively for this worship. He says that it is a very esoteric practice
that should not be revealed to general pubic freely. Those who are interested please check the
original work at Adyar Library Chennai.
இந்த சிதம்பர யந்திரத்தை பத்தாம்
பாடலில் கூறியுள்ள அஷ்ட கர்மங்களுக்கு பயன்படுத்தலாம் என்று அகத்தியர்
கூறுகிறார். மேலும் அவர், தான் இப்பூஜைகளை
எவ்வித வஞ்சனையும் இல்லாமல் வெளிப்படையாக கூறியுள்ளதாகவும் தனக்கு இவ்விவரங்களை
சக்தி கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.
அதனை அடுத்து, தான் எல்லா பூஜைகளிலும் தலையாயதான சிவ வாலைபூஜையை விளக்கப்
போவதாக தனது சீடர் பிரம்மா யோகி, யோகிகளில் அரசரான புலத்தியருக்குக் கூறுகிறார்.
அகத்தியர் சிதம்பர சக்கரம் அன்று ஒரு
தனி நூலை இயற்றியது இவ்வழிபாட்டின் முக்கியத்துவத்தை நமக்குக் காட்டுகிறது. அந்நூலில் அகத்தியர் அதன் விவரங்களை
அனைவருக்கும் கூற வேண்டாம் என்று குறிப்பிடுகிறார். விருப்பமுள்ளவர்கள் சென்னை அடையாறு நூலகத்தில்
அந்த ஓலைச் சுவடியைக் காணவும்.
No comments:
Post a Comment