Wednesday 19 February 2014

40. where is this black gooseberry tree, what is so special about it?

Verse 40
சூக்ஷமென்றால் வெகு சூக்ஷம் மௌன சூக்ஷம்
சொல்ல வென்றால் வெகுதூரம் சொன்னால் சூக்ஷம்
காக்ஷி என்ற காக்ஷிகளும் நெல்லியூடே
கைவல்லிய மாடுதற்குக் கடினமப்பா
சாக்ஷிஎன்ன வென்றக்கால் குருவே சாக்ஷி
தவத்தோர்க்கு லபிக்கும் அடர் கறுத்த நெல்லி
ஆக்ஷி எங்கே என்றக்கால் சொல்லக் கேளு
ஆயிரத்து இருநூற்றில் அறைந்திட்டேன்

Translation:
Subtle very subtle, the subtlety of silence
To tell, it is the deep subtlety,
All the scenes through the gooseberry
Kaivalyam is difficult to remain in,
The only witness for this is guru
For those who performed austerities, the dark black gooseberry will be attained.
Where does it rule, if questioned, listen to me say it
I told clearly in thousand two hundred

Commentary:
Agatthiyar says that the principle behind the black gooseberry is very subtle and that one witnesses all kinds of scenes there.  When kundalini rises through the cakra the aspirant is blessed with various visual and aural experiences.  No one other than the aspirant gets to see these scenes.  Hence, Agatthiyar says that the one witness is the guru, the kundalini sakti.  If one questions where this black gooseberry tree is Agatthiayar says that he has explained it in 1200 verses.  He may be referring to this work or to his other work, Saumya sagaram or any other work with 1200 verses.  


கருநெல்லியின் காட்சி மிக சூட்சுமம் என்று கூறும் அகத்தியர் அதை அனுபவிக்கும் ஒரு யோகி பல்வேறு காட்சிகளைக் காண்கிறார் என்கிறார்.  குண்டலினி சக்தி சக்கரங்களின் ஊடே மேலே ஏறும்போது பல்வேறு காட்சிகளும் ஓசைகளும் தோன்றுகின்றன.  அவை அந்த யோகிக்கு மட்டுமே பிரத்யேகமாக ஏற்படுபவை.  அதற்கு இருக்கும் ஒரே சாட்சி குருவான குண்டலினி சக்திதான்.  இந்த கருநெல்லி மரம் எங்கே உள்ளது எங்கே அரசாளுகிறது என்று கேட்பவருக்கு அகத்தியர் தான் அதை  1200 பாடல்களில் விளக்கியுள்ளதாகக் கூறுகிறார்.  அப்பாடல்களை இனி வரும் பதிவுகளில் காண்போம்.

No comments:

Post a Comment