Wednesday, 19 February 2014

39. Under the gooseberry tree where the princess roams...

Verse 39
நெல்லி மரச் சோலையின் கீழ் பிரம்ம யோகி
நிச்சயமாய்த் தவமிருந்தார் நினைவால் சேரு
வல்லி திரு நடமாடு வனத்தின் ஊடே
மாதவங்கள் புரிந்து நிற்கும் விருஷத் தோடே
அல்லி அரசாணி சுத்தி வருவதங்கே
அஞ்செழுத்தும் தவம் புரிவார் முனிவோர் அங்கே
சொல்லி விளையாடி வரும் வாழை அங்கே
சூக்ஷமெலாம் கரு நெல்லி சூக்ஷம் தானே

Translation:
The Brahma yogin, under the gooseberry tree grove
Performed tapas, for sure, join through thoughts
Through the forest where valli dances
Along with the tree that stands performing severe penance
There, the queen (alli arasāni) roams
The sages will perform penance on the five letters
The plaintain will come there playing and declaring itself
All the subtleties are the subtleties of the black gooseberry.

Commentary:
This verse is about the black gooseberry.  Just like the previous verse about the white rat snake the black gooseberry is also not the medicinal plant but has an esoteric meaning.  Agatthiyar says that Brahma yogin is performing austerities under the gooseberry tree.  The tree here is the sushumna nadi that ends in the sahasrara.  The yogin interested in realizing the Brahman performs vāsi yogam that begins at the muladhara, the base of the tree.  Baladevaraya in his composition kanda sashti kavacham- pazhani pathikam mentions about karu nelli and ven sārai and says that Sadasiva remains on top of it.  Sadasiva is the first manifestation, the state of supreme consciousness.  This verse also reflects that idea.  Agatthiyar says that this is the place where the queen kundalini rules and roams around.  A yogin performs his austerities through the five lettered mantra namacivaya here.  This penance makes the plaintain, the cakra at the sahasrara which is usually referred to as the downward facing plaintain flower come about dancing.  Agatthiyar impresses the importance of this process by stating that the subtlety about the gooseberry is the most subtle knowledge of all.

The term vaazhai which means plaintain may also be vaalai, a scribal error.

கருநெல்லியைப் பற்றிய இப்பாடலில் அகத்தியர் முந்தைய பாடலில் கூறியபடி இது நெல்லி மரமல்ல ஓர் உட்பொருளைக் கொண்ட சொல் என்று புலப்படுத்துகிறார்.  நெல்லி மரத்தின் அடியில் பிரம்ம யோகி தவமிருக்கிறார் என்று அகத்தியர் இப்பாடலைத் தொடங்குகிறார்.  பிரம்ம யோகி என்பவர் பிரம்மத்தைப் பற்றி அறிய விரும்புபவர், பிரம்மத்துடன் யோகத்தில் இருப்பவர்.  இங்கு நெல்லி மரம் என்பது சுழுமுனை நாடி சஹாஸ்ராரத்தில் முடிவுறுவதைக் குறிக்கிறது.  பாலதேவராயர் இயற்றிய கந்த சஷ்டி கவசம் பழநியைப் பற்றிய பதிகத்தில் கருநெல்லி வெண்சாரையைப் பற்றிக் கூறி அதன் மேல் சதாசிவன் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.  இந்த இடத்தில் முனிவர்கள் ஐந்தெழுத்தான பஞ்சாக்ஷரத்தைக் கொண்டு தவம் புரிவர் என்றும் அங்கு அல்லி அரசாணி திரிவாள் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அல்லி அரசாணி என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  ஐந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரம் நமது உடலின் பல பகுதிகளாக இருக்கிறது.  அது பஞ்ச பூதங்களையும் சக்கரங்களையும் குறிக்கின்றது.  யோகிக்கும் முனிவருக்கும் உள்ள வேறுபாடு- யோகி இறைவனுடன் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இணைந்தவர், முனிவர் அந்த இணைப்பை வேண்டி முனைபவர்.  இவ்வாறு தவம் புரிந்தால் வாழை விளையாடியபடி தோன்றும் என்கிறார் அகத்தியர்.  சஹஸ்ராரத்தை தலைகீழ் உள்ள வாழைப்பூ என்று குறிப்பிடுவர்.  அதன் அமைப்பு யோக சித்தி ஏற்படுவதற்கு முன் குவிந்தும் பிறகு மலர்ந்தும் இருக்கும்.  இப்பாடலின் முடிவில் அகத்தியர் இந்த தத்துவம் மிக சூட்சுமமானது என்று கூறுகிறார். 

 இங்கு வாழை என்றது வாலையாகவும் இருக்கலாம்.

2 comments:

  1. iyya, enakku vilakkangal book padithum, kuttum, ungal blog-i parthu therinthu konden migavum nandri iyya, aanal ithai seivathu guru illamal seiamudiyathu enakku arvam athigam enakku ena seivathu endru teriyavillai. iyya ithai nan surukkamaga sollivitten mannikkavum, nandri iyya, nandri.

    ReplyDelete
  2. திரு கணேஷ் ராஜன் அவர்களே, தாங்கள் கல்லாரில் உள்ள அகத்திய ஞான பீடத்தில் உள்ள தவயோகி தங்கராஜன் அடிகளைத் தொடர்பு கொள்ளவும். அவர் தங்களுக்கு வழிகாட்டுவார். அவரைப் பற்றிய விவரங்கள் முகப்பக்க நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. அகத்தியர்வனம் என்ற பிளாக்கிலும் அவரைப் பற்றிய விவரங்களும் ஆஸ்ரம முகவரியும் தரப்பட்டுள்ளன. உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்கு அகத்தியர் வழிகாட்டுவார்.

    ReplyDelete