Wednesday 19 February 2014

38. The white snake...

Verse 38
பாரப்பா பொருளான வெள்ளைச் சாரை
பார்த்தோர்க்கு வெகுசுளுவு பரிசு காணும்
சீரப்பா இதன்பெருமை செப்பப் போகா
சிவசிவா சின்மயத்தில் சேர்க்கும் சாரை
ஆரப்பா அறிவார்கள் சாரப் பாம்பை
அகாரமென்றும் இதற்குப் பேர்ஆதி கற்பம்
பேரப்பா தினந்தோறும் கொண்டாயானால்
பெருமையடா இதற்கடுத்த நெல்லி தானே

Translation:
See son, the important white- rat snake
For those who see it, it is very easy, it will award gifts
It is glorious, its fame cannot be explained in words
Siva sivā the rat snake will join one with the embodiment of knowledge
Who will know about the snake
Its name is akāra it is the original karpam
If you consume it daily
Fame.  Next is only gooseberry.


Commentary:
The kundalini sakthi moves up through the sushumna nadi as white fire.  Agatthiyar is referring to this as white snake.

This verse is a continuation of the previous verse on white ratsnake.  Agatthiyar reiterates that such a vāsi yoga will join one with chinmayam.  He says that no one knows about this snake and its glory.  This statement is so true.  The misinterpretations one sees on the web for the verses on ven sārai are ridiculously funny.  Agatthiyar says that akāra is also another name for the snake, that is, it is nothing but the Supreme Being.  He adds further that this is the original karpam.  Agatthiyar’s works seem to be addressed to two levels of initiates- those who are interested in external accomplishments such as physical wellbeing, special powers with regards to the body and those who are interested in spiritual ascendance and realization of the truth.   His medicinal preparations include various types of karpam.  This verse implies that these medicinal preparations may also have an esoteric meaning.  Agatthiyar says here that the white rat snake is the ‘ādi karpam’ or the original karpam. He advises one to practice this vāsi yogam daily to attain fame and glory.  He says that the next step to this is the gooseberry. We will see what that means



வெண் சாரையைப் பற்றிய முந்தைய பாடலின் தொடர்ச்சியாக உள்ள இப்பாடலில் அகத்தியர் வெண் சாரையை மேலும் விளக்குகிறார்.  இந்த வெண்சாரை ஒருவரை சின்மயத்துடன் சேர்க்கும், அதன் மறு பெயர் அகாரம், அதுவே ஆதி கற்பம் என்று கூறும் அகத்தியர் வெண்சாரை என்பது பாம்பல்ல அது சுழுமுனை நாடியின் மூலம் செல்லும் பிராணன் என்று விளக்குகிறார்.  ஒருவர் இந்த வாசி யோகத்தை தினமும் பயின்றால் பெருமையையும் எல்லாவித புகழையும் பெறுவார்  என்று கூறும் அகத்தியர் இதற்கு அடுத்தது நெல்லிதான் என்கிறார். எவ்வாறு வெண் சாரை பாம்பில்லையோ அதே போல் நெல்லியும் நெல்லிக்காயா இல்லையா என்பதை அடுத்து பார்ப்போம்.

No comments:

Post a Comment