Tuesday 18 February 2014

33. Act as if everyday is a celebration

 Verse 33
காணப்பா இதுதான் ஆசான் செய்கை
காசினியோர் மெச்சுமிந்தக் கருணை ஞானம்
தோணப்பா உலகமதில் இருப்பாரிந்த
சூக்ஷமதை அறிந்து நீ கண்டு தேறு
கோணப்பா மனதுவாக நடந்து கொள்ளு
குருவகுத்த பணிவிடைகள் எல்லாம் கேளு
ஊணப்பா ஒரு மனதாய் ஒத்துக்காரு
ஒரு நாளும் திருநாளாய் நடந்து கொள்ளே

Translation:
See son, this is the action of the preceptor
This is the merciful wisdom praised highly by worldly people
Some will be in this world with this knowledge
Knowing this subtlety you realize this
Son, keep this in mind and act accordingly,
Perform all the services for the guru
Contemplate this with mental focus,
Live everyday as a celebration.

Commentary:
Agatthiyar tells us that this is the action of the preceptor and that everyone will praise the guru for these actions.  He tells Pulatthiyar that the guru will remain so in the world and he should keep this in mind and act accordingly.   He advises Pulatthiyar to do all the guru’s biddings, perform all services for him and live everyday joyously, as a celebration (as it holds the opportunity to attain wisdom).


அகத்தியர் தான் இதுவரை கூறியதே குருவின் செய்கை என்றும் அந்த செய்கையை உலகத்தோர் பெரிதும் பாராட்டுவர் என்றும், இதை மனதில் கொண்டு உலகில் குருக்கள் வாழ்வதைக் கண்டுணர்ந்து அவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து ஒவ்வொரு நாளையும் ஒரு திருநாளைப் போல மகிழ்ச்சியாக ஞானத்தைப் பெறக்கூடிய சாத்தியம் உள்ளது ஒரு முக்கிய நாள் என்பதாக வாழுமாறு அகத்தியர் புலத்தியருக்கு அறிவுரை கூறுகிறார். 

No comments:

Post a Comment