Sunday 16 February 2014

31. Guru is kundalini sakti..

Verse 31
ஆசான் பூஜை
பகரு என்றே கேட்கவந்த புலத்தி யா கேள்
பார் உலகெலாம் திரிந்து எங்கும் தானாய்
சுகமான துக்கமுடன் இரண்டும் தானே
சூக்ஷமாய் உட்புறமாய் துரியம் தானாய்
பகலுமாய் இராப்பகலாம் இரண்டும் தானாய்
பார் எல்லாம்தானானேன் ஆசான் ஆகும்
அகமான அகந்தோறும் நிறைந்தோன் ஆசான்
அவரிருக்கும் இடமேது சுழி ஒன்றாமே
                                        
Translation:
Worship of guru
Pulatthiya who came to ask me to describe it! Now listen
See- roaming around the worlds with everything being himself
As the twin experiences- happiness and sorrow
As the subtle inside, as the turiya
As night and day
The one who remains as all the universes is the preceptor
The one who remains as the refuge, the one who fills everyone’s hearts is preceptor
The place where he resides, is the whorl. 

Commentary:

This is a very beautiful verse where Agatthiyar describes to Pulatthiyar who a true preceptor is.  He is all the manifested, all the dualities- night and day, happiness and sorrow, as inside and outside.  He is the supreme consciousness- the state of turiya. He is the refuge who remains in everyone’s heart, he suffuses them. 

Agatthiyar says that the residence of such a guru is the coil.  This word suzhi has several meanings.  It may indicate the kundalini sakti which remains coiled in the muladhara.  It may mean the omkara which is also called suzhi ezhutthu or the curved letter.  It may mean the sushumna nadi which is called suzhimunai in Tamil. The word suzhi onru may also mean “one of the residences is the coil”. 

முந்தைய பாடலில் குரு எங்கே இருக்கிறார் என்று கேட்ட புலத்தியருக்கு அகத்தியர் இப்பாடலின் மூலம் பதிலிறுக்கிறார்.  உண்மையான குரு கண்ணால் காணும் இவ்வுலகமாய், இரவு பகல், இன்பம் துன்பம், அகம் புறம், விழிப்புநிலை துரியம் என்ற  எல்லாவித இருமைகளாகவும், ஒருவரது அகத்தில் அதை நிரப்பியவராய் இருக்கிறார்.  அகத்தியர், அந்த குருவின் இருப்பிடம் சுழி என்கிறார்.  சுழி என்பதற்கு பல பொருள்களைக் கூறலாம்.   மூன்றைச் சுற்றுக்களைக் கொண்ட குண்டலினி சக்தி அல்லது சுழிமுனை எனப்படும் சுஷும்னா நாடியை அல்லது சுழிஎழுத்து எனப்படும் ஓம் என்பதாக அதற்குப் பொருள் கூறலாம்.  அகத்தியர் அடுத்த பாடலில் குண்டலினி யோகத்தையும் குண்டலினி சக்தியின் எழுச்சியையும் குறிப்பிடுவதால் நாம் இதை குண்டலினி சக்தி என்று கருதுவதில்லை தவறில்லை என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment