Verse
47
ஊதப்பா
அடிமூலம் மிகவும் நன்று
உத்தமனே
நடுமூலம் அதிலும் நன்று
காதப்பா
கண்டமது ஞானிக் காகும்
கருத்துள்ள
பிள்ளை என்றால் பிடரி யோகம்
ஏதப்பா
அரமனையில் விசாலம் ஒன்று
இதுவஞ்சும்
வாசிக்குப் பெருமையாகும்
சூதப்பா
வெகுசூது இந்த சூது
சுத்தமுள்ள
புலத்தியனே சொக்கி யேறே
Translation:
Blow
son, the bottom terminus (muladhara) is very good
The
great soul! The middle terminus is better than that
The
ear, the throat, are appropriate for a jnani
If
it is a person (son) with focus, then the yoga at the nape
In
the palace there is an expanse
These
five make vasi glorious
This
is subtle, it is a great subtlety
The
pure Pulatthiya! Climb with enchantment.
Commentary:
Agatthiyar
remarks that the muladhara is very beneficial as it is the site of the
kundalini, and the
middle one is even better.
This may refer to the manipuraka in the navel or the anahata in the heart or
the vishuddhi in the throat. The navel is in the middle of the body. The heart cakra is the middle one among the cakras in the path of kundalini. The Visuddhi is the midpoint between animal and divine instincts. This
is indicated by Siva’s blue throat. Agatthiyar says that the ear and the throat are good for a jnani because a kundalini yogi who manages to raise his kundalini sakti to the vishuddhi hear several
divine sounds.
Agatthiyar says that for a highly accomplished yogi the yoga at the nape is better. He refers to this 'pidari yogam' in several verses later also. In the book The Inner Journey, Sudha Aditya says, “the ajna chakra is the most difficult to locate. It is situated in the posterior brain, at the pineal gland at the top of the spinal cord in the medulla oblongata. Its trigger point is in the center of the eyebrows. This is the point where the ida, pingala and sushumna nadis merge and travel as one to the crown of the head. The bindu is …. one of the most important chakras in kundalini yoga. It is present in the back of the head. It is said to be the seat of psychic and mystical experiences. The Brahmins wear a tuft to indicate this point”. During the Srividya upasana one of the rituals is tying up the tuft. This is done to put pressure at that point so that the aspirant can fix his concentration there.
The
next cakra is the sahasrara which Agatthiyar refers to as the expansive
palace. This is the place where the
consciousness expands beyond its previous limits. Agatthiyar
indicates that these are highly esoteric concepts by saying that it is deceit
or a great concealment. He advises
Pulatthiyar to raise is prana holding these ideas in mind and with enchantment.
அகத்தியர்
மூலாதாரம் மிக நல்லது அதனினும் நல்லது நடுவில் உள்ள சக்கரம் என்கிறார். நடுச் சக்கரம் என்பது நாபியில் உள்ள மணிபூரகம்,
அல்லது இதயத்தில் உள்ள அனாஹதம் அல்லது தொண்டையில் உள்ள விஷுத்தி சக்கரமாக
இருக்கலாம். நாபி உடலுக்கு மத்தியில் உள்ளது. அனாஹதம் சக்கரப் பாதையில் மத்தியில் உள்ள சக்கரம். விஷுத்தி மனிதத்
தன்மையும் இறைதன்மையும் கூடும் இடம்.
சிவனின் கழுத்து நீலமாக இருப்பது இதையே குறிக்கிறது. அகத்தியர் இதை காது, கழுத்து ஞானிகளுக்கான இடம்
என்கிறார். குண்டலினி யோகம் பயிலும் ஒரு
யோகி தனது காதுகளில் பலவிதமான ஒலிகளைக் கேட்கிறார்.
அகத்தியர் மனக்குவிப்பைப் பெற்ற ஒரு யோகிக்கு பிடரி யோகம் நல்லது என்கிறார்.
சுதா
ஆதித்யா அவர்கள் தனது புத்தகமான “உள்பயணம்” (The inner journey) என்ற
புத்தகத்தில் ஆக்ஞா சக்கரம் தலையின் மத்தியில் இருக்கிறது என்றும் அதன்
ஊக்கப்புள்ளி புருவமத்தியில் இருக்கிறது என்றும், பிந்துவின் இடம் தலையின் பின்
பகுதியில் உள்ளது என்றும் அதைக் காட்டவே பிராமணர்கள் குடுமியை வைத்திருந்தனர் என்றும்
குறிப்பிடுகிறார். இதைத்தான் அகத்தியர்
பிடரி யோகம் என்று கூறுகிறார். அது
பிராணனை பிந்து நிலைக்கு ஏற்றுவது, ஆக்ஞா சக்கரத்தில் இருத்துவது. இதை மேற்கொள்ள மிகுந்த மனக்குவிப்பு தேவை. ஸ்ரீ வித்யா உபாசனையில் குடுமியை முடிதல் என்ற ஒரு சடங்கு உள்ளது. இது குடுமிப் பகுதியில் கவனத்தைக் குவிக்க உதவுகிறது.
இந்த சக்கரங்கள் அனைத்துக்கும் மேலே இருக்கும் சக்கரம், சஹஸ்ராரம். அதை
ஒரு விசாலமான அரண்மனை என்று அகத்தியர் கூறுகிறார். இந்தப் பயிற்சி எவ்வளவு கடினம், எவ்வளவு
ரகசியமானது என்பதைக் குறிக்க அவர் அதைச் சூது என்கிறார். இவையனைத்தையும் மனதில் கொண்டு குண்டலினி
சக்தியை உன்மத்தத்தோடு மேலே ஏற்றுமாறு அவர் புலத்தியரிடம் கூறுகிறார்.
Thank you my dear Athma. You are doing a Glorious Service by translating Agathiyan's work in English....thus enabling the non Tamil. knowing devotees in the nooks and corner of the world.....to know about Agathiyar and HIS GRACE.
ReplyDeleteMy HE bless you abundantly and Guide you , on this Divine Journey.....A JOURNEY OF CONNECTING TOGETHER MANY SOULS WHO ARE IN SEARCH OF TRUTH. AND WISDOM.
Blessings from all of us..
Thank you for the good wishes and thanks for conveying Agatthiyar's blessings.
ReplyDelete