Tuesday, 18 February 2014

35. Who is a fit disciple?

Verse 35
சொல்லாமல் இருப்பதுவே அவர்கள் வீரம்
சொன்னக்கால் எள்ளளவும் மறுப்போரில்லை
கல்லப்பா ஆனால் கரைத்துச் சொல்வார்
கவடன் என்ற பிள்ளை என்றால் போ போ என்பார்
முல்லப்பா மொரடன் என்றால் அகலச் சொல்வார்
முத்துமணி போல் இருந்தால் முழுதும் சொல்வார்
சொல்லப்பா இதுவல்லோ தெரிந்தோர் செய்கை
சித்தர்களும் இப்படியே சேர்த்திட்டாரே

Translation:
Remaining without saying anything is their valor (guru's).
When they reveal, no one can contest it
(The secret is) difficult like a stone but they will explain it as if dissolving it.
If it is a charlatan they will chase them away saying, "Go, go"
If it is a rude person they will tell him to leave
If one remain as a precious pearl, jewel, they will reveal completely
Say son, this is the action of the knowledgeable
The Siddhas also did so.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that the act of a guru, not revealing the truth to the undeserving, is an act of valor.  However, if they reveal the truth no one can contest their statements, their words  are nothing but absolute truth.   They will impart this knowledge only to the deserving.  If a rude person or a fraud approaches them, they will chase him away.  If one remains humble and sincere they will teach this great truth which is as hard to comprehend as a stone. However, their words will make it so clear as if they are dissolving the stone.  Agatthiyar confirms that this is how the siddhas also attain the knowledge and impart the knowledge.


ஞானத்தை ஒரு குரு தகுதியற்றவருக்கு வெளியிடாமல் இருப்பது அவரது வீரமே என்கிறார் அகத்தியர்.  ஆனால் அவர்கள் இந்த ஞானத்தை வெளிப்படுத்தினால் ஒருவராலும் அவர்களது வார்த்தைகளை எதிர்த்துப் பேச முடியாது. ஏனெனில் அவை முற்றிலும் உண்மையே.  இந்த உண்மை ஒரு தகுதி வாய்ந்த சீடனுக்கே கிடைக்கிறது.  ஒரு முரடனோ ஏமாற்றுப் பேர்வழியோ வந்தால் அவனை அவர்கள் தூர விரட்டிவிடுவார்கள்.  இந்த ஞானம் புரிந்து கொள்வதற்குக் கல்லைப்போல கடினமானது. ஆனால் குருவின் வார்த்தைகள் அந்தக் கல்லையும் கரைத்ததைப் போல புரிந்துகொள்வதற்கு ஏதுவாக்கும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment