Saturday, 1 February 2014

16. How Agatthiyar is granting us jnana

Verse 16

காடுவெட்டி மலை பிளந்து கல்லு முள்ளும்
கைப்பெருக்கிட்டேன் மெழுகி சாந்தால்
நாடுதொட்டுஇருபுறமும் கமுகம் சோலை
நல்ல சந்தன விருக்ஷம் அகிலும் வேம்பும்
கூடுகட்டக் கோகிலங்கள் அனந்தம் கூடல்
குடியிருப்பு இருபுறமும் தண்ணீர் பந்தல்
பாடுபட்டு ஞானமெல்லாம் வழிதிருத்தி னேன்பார்
பகல்வத்திக் கொளுத்தி வைத்து பயம் தீர்த்தேனே  (16)

Translation:
Cutting the forest, breaking the mountain, stones and thorns
            I swept by hand and swabbed it with paste
Turning it into land planted arecanut planations
            Good sandal trees, agar wood and neem trees
Parrots to build nests, eternal copulation
            Residences on both sides water choultries
I corrected the path of wisdom with great effort, see
            I lit the lamp of day and removed the fear      (16)

Commentary:
Agatthiyar is using metaphors in this verse to describe how he corrected the path of wisdom.  He says that he planted sandalwood, agar and neem trees on the way.  These trees are medicinally important.  They are considered the best among trees.  Parrots stand for teachers who repeat the divine words without any additions or deletions.  A disciple should learn from such a teacher as the knowledge he receives will not be corrupt.  Eternal copulation indicates the teachers remaining eternally in divine experience.  Residences and water choultries are houses where a traveler stops and takes rest.  A disciple embarking on the arduous journey towards realization needs such resting places to collect his energy and proceed further.  Agatthiyar says that after clearing the path with such a great effort he lit the lamp of the day.  This is the Sun.  Sun represents emerging of awareness.  Tirumular in his Tirumandiram describes different types of aditya or sun.  They represent emergence of consciousness.  Unlike the moon, Sun is self effulgent.  It does not need an external source to light it.  The knowledge that Agatthiyar confers is also self-effulgent.


தான் எவ்வாறு ஞானப்பாதையை சுத்தப்படுத்தினேன் என்று கூறப் புகும் அகத்தியர் தான் காட்டை வெட்டி சந்தனம், அகில் மற்றும் வேப்பமரங்களை நட்டதாகக் கூறுகிறார்.  இம்மரங்கள் மருத்துவ குணங்களைப் பெற்றிருப்பதுடன் மரங்களிலேயே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன.  வழியில் உள்ள கோகிலங்கள், குயில்கள் ஆசார்யர்களைக் குறிக்கும்.  ஒரு நல்லாசார்யன் சரியான அறிவை, தனது கருத்துக்களை சேர்க்காமல் அதை மாறுபடுத்தாமல் ஒரு கிளிப்பிள்ளையைப் போல தனது சீடனுக்கு அளிக்கவேண்டும்.  இவ்வாறு செய்வது, உண்மையைத் திரித்துக் கூறுதல், ஒன்றை அதிகரித்துக் கூறுதல் ஆகிய குற்றங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.  இடைவிடாத கூடல் என்பது நல்லாசிரியர்கள் இறைவனுடன் சேர்ந்திருக்கும் நிலையைக் குறிக்கும்.  முடிவில் அகத்தியர் இவ்வாறு காட்டை சீர்படுத்தி பகல் வத்தியை ஏற்றியதாகக் கூறுகிறார். பகல் வத்தி என்பது சூரியனைக் குறிக்கும்.  சந்திரனைப் போல் அல்லாது சூரியன் சுயம்பிரகாசத்தை உடையது, தனக்கு ஒளியூட்ட வேறொரு பொருளைத் தேடாதது.  அகத்தியர் அருளும் அறிவும் அவ்வாறு சுயம்பிரகாசத்தை உடையதாய் தானே ஞானம் அளிப்பதாய் உள்ளது. அதற்கு வேறொன்றும் தேவையில்லை. 

No comments:

Post a Comment