Friday, 31 January 2014

15. The topics discussed in this kavya

Verse 15
ஆமாப்பா இந்த நூல் ஆயிரத்துக்குள்ளே
அறுசபையும் மண்டலமும் திகிரி எட்டும்
ஓமப்பா ஞானத்துக் கேறும் மார்க்கம்
உத்துப் பார் கருக்குருவும் இதிலே தோன்றும்
தாமப்பா இந்நூல் சௌமியத்தைச் சாறும்
சௌமியம்தான் இதில் சாறும் தயக்கமில்லை
காமப்பால் கானல்பால் வாமப்பாலும்
காட்டிடுவேன் காடு வெட்டிக் காட்டுவேனே  (15)
Translation:
Yes, I will show within the thousand in this work
            The six sabhas, mandala, the eight mountains
The path to ascend to wisdom
            If you look carefully the fetus and the guru will appear in this
Yes, this book is related to Saumyam
            The saumyam will relate to this work, no doubt about it
I will show kāma pāl, the kānalpāl and the vāma pāl
            I will show cutting the forest      (15)

Commentary:

The six sabhas are the six cakras, muladhara, svadhishtana, manipuraka, anahata, vishudhi, ajna.  The mandala are three- the agni mandala, Chandra mandala and surya mandala.  They span the body from foot to navel, navel to neck and neck to crown.  Arunagirinathar has used the term ‘ettuth thikiri’ to refer to Kraunja malai and seven kula malai.   Agatthiyar also mentions eight mountains here.  Thigiri means mountains as well as a wheel, a cakra.  Both the interpretations are appropriate here.  Saumyam is Agatthiyar’s another work Saumya sagaram.  

The three topics he plans to deal with are kāmappāl- desire towards worldly pleasures, kānal pāl- desire for the Divine and true vāma pāl- the divine experience.  For an early aspirant of kundalini yoga as the prana starts crossing the cakras, one's desires get enhanced.  If it is moving in the lower cakras one's sexual drive, desire towards material things, fame, glory etc increase.  This is referred to as kaamappaal.  This has to be transmuted to kaanal paal by making the prana travel through higher cakra.  Then the worldly desires become become desire to realize the truth.  Vaamappaal is the force of kundalini.  With its help one has to cross the obstacles posed by the various cakras.  Agatthiyar refers to this in a later verse.  He says that he will reveal all the three 'paal' by cutting the forest.  The forest here is ignorance.  Ignorance is equated to a dark forest because one gets lost in it It is very difficult to cross it.  There are treacherous twists and turns that would delude one.  One may even lose one’s life there.  Ignorance will confuse one with erroneous ideas, misinterpretations, sense of pride etc.  One may lose one's life in this dark forest seeking wrong goals.  

Forest also means the ajna cakra.  Siddha Idaikkaadar got his name as he won the kaadu or forest that is "between", between the brows.  Thus, cutting the forest means winning the principles that the ajna chakra represents.

Agatthiyar says that if one looks carefully one will see the ‘karu and guru’.  Karu  means essence as well as fetus.  Thus, seeing karu and guru means the essence of everything and the light of knowledge which reveals the essence.  They also mean birth, karu, and guru, the way to rid of the birth. 


ஆறு சபைகள் என்பது ஆறு ஆதாரங்களான மூலாதாரம், ச்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷுத்தி மற்றும் ஆக்ஞா.  பிராணன் இவற்றை ஒவ்வொன்றாகக் கடப்பதே ஞானப்பாதையாகும்.  மண்டலம் என்பது அக்னி மண்டலம், சந்திர மண்டலம் சூரிய மண்டலம் என்னும் மூன்று மண்டலங்களைக் குறிக்கும் அவை முறையே நமது கால் முதல் தொப்புள் வரை, தொப்புள் முதல் கழுத்து வரை, கழுத்துக்கு மேல் இருக்கின்றன.  அருணகிரி நாதர் தனது திருப்புகழில் எட்டுத் திகிரி என்று கிரௌஞ்ச மலையையும் ஏழு குல மலைகளையும் குறிக்கிறார்.  அகத்தியரும் இங்கு எட்டுத் திகிரி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். திகிரி என்ற சொல் மலையையும் சக்கரத்தையும் குறிக்கும். 

அகத்தியர் குறிப்பிடும் சௌமியம், அவரது மற்றொரு நூலான சௌமிய சாகரமாகும்.  அவர் தான் இந்த நூலில் காமப்பால்-சிற்றின்பம், கானல் பால்- இறைவனைக் குறித்த விருப்பம் மற்றும் வாமப்பாலை- இறையுணர்வு பற்றிக் கூறப்போவதாகவும் அதை காட்டை வெட்டிக் காட்டப்போவதாகவும் கூறுகிறார்.  இங்கு காடு என்பது அறியாமை.   இருண்ட காட்டைப் போல அறியாமை ஒருவரை வழி தொலைந்து போகச்செய்யும்.  தவறான ஞானம் என்னும் முடுக்குகளாலும்ம் சந்துக்களாலும் குழப்பமடையச் செய்யும்.  தவறான ஞானத்தைத் தேடித் தன் உயிரையே இழக்கச் செய்யும்.


இந்நூலைப் படித்தால் கருவும் குருவும் புலப்படும் என்று அகத்தியர் கூறுகிறார்.  கரு பொருள்களின் சாரத்தையும் குரு என்பது அந்த சாரத்தை விளக்கும் அறிவு என்னும் ஒளியையும் குறிக்கும்.  கரு என்பது பிறப்பையும் குரு என்பது அந்த பிறப்பை எவ்வாறு அறுப்பது என்ற அறிவையும் குறிக்கும் என்றும் விளக்கலாம். 


No comments:

Post a Comment