Friday 31 January 2014

14. Siva sivaa jnanam

ஞானகாவியப் பெருமை
திரட்டினேன் முப்பாலும் கருப்பம் சாரும்
சீனி நறுநெய் தேனும் கனிகள் மூன்றும்
திரட்டினேன் திருப்பாலின் கடலின் மூவர்
தீர்ந்தெடுத்த தெள்ளமுதம் திரட்டுப்பாலும்
திரட்டினேன் நவரசமும் மதுர வேணி
திரு வேணி தினைமாவும் சேர்த்து மொத்தத்தைத்
திரட்டினேன் ஞானரசக் கனிதான் அப்பா
சிவசிவா ஞான காவியம் இதாகும்    (14)

Translation:
I collected the three types of milks, cane juice
            Sugar, the fragrant clarified butter, honey, three types of fruits,
I collected the triad in the milky ocean
            The choice clear nectar, the condensed milk
I collected the nine types of tastes/moods, the fragrant flowers (madhura veni)
            The sacred flowers (thiruveni), millet meal (thinai maa), collecting all these together
I collected the fruit with the essence of wisdom, Son,
            Siva Sivaa! This is the Jnana kaviyam.     (14)

Commentary:
In the previous verses Agatthiyar mentioned that this work has the navarasa.  This work also means nine tastes.  Here he describes the products that give this quality to the composition.  

Muppaal means three types of milk as well as three types of anything.  The triad may mean knowledge of pati, pasu, pasa or lord, soul and attachment or the holy triad of Brahma, Vishnu and Rudra who represent creation, preservation and dissolution as well as the three states of consciousness, wakefulness, dream state and deep sleep.   

The term "veni" mentioned in this verse has an interesting meaning.  Besides hair it also means sky.  Thus, the two veni Agatthiyar mentions may be the space in the microcosm,and the macrocosm.  While this verse seems like a list of sweet products it may be implicitly referring to principles related to kundalini yoga or important tattva or principles. 

The term siva sivā is interesting.  In the Sanskrit language the short vowel is said to represent Siva and the long vowel, Sakti.  This work is thus about Siva and Sakti, the male and the female principles, the action-free and active states, the Parabrahmam.


அகத்தியர் தாம் இந்த காவியத்தை மிக உயர்ந்த பொருட்களைத் திரட்டிப் புனைந்ததாகக் கூறுகிறார்.  மேலும் இது சிவ சிவா ஞான காவியம் என்கிறார்.  எழுத்துக்களில் குறில் சிவனையும் நெடில் சக்தியையும் குறிப்பதாகக் கருதுவது வழக்கம்.  இவ்வாறு இந்த காவியம் சிவனையும் சக்தியையும் பற்றியது, மோனம் மாற்றும் செயல்புரியும் நிலையைப் பற்றியது, ஆண் பெண் என்னும் இருதுருவங்களைப் பற்றியது என்று அகத்தியர் கூறுகிறார். இவையிரண்டும் சேர்ந்ததே பரபிரம்மம்.

முப்பால் என்பது மூன்று வகையான பால்கலான காமப்பால், கானல் பால் மற்றும் வியோமப்பால் என்பவற்றைக் குறிக்கலாம்.  அல்லது மும்மூன்று தத்துவங்களான பதி, பசு, பாசம், மற்றும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் அல்லது சிருஷ்டி, ஸ்திதி, லயம் அல்லது விழிப்பு, கனவு, ஆழுறக்கம் என்ற மூன்று நிலைகளைக் குறிக்கலாம்.  

வேணி என்னும் சொல் பூக்களால் தொடுக்கப்பட்ட சரம் என்ற பொருளுடன் ஆகாயம் என்ற பொருளையும் உடையது.  இங்கு ஆகாயம் என்பது உடலில் உள்ள பிண்ட ஆகாசம் மற்றும் வெளியில் உள்ள அண்ட ஆகாசம் என்ற இரண்டையும் குறிக்கலா. இவ்வாறு இப்பாடலில் அகத்தியர் பட்டியலிட்ட பொருள்கள் இனிமையான தன்மையைக் குறிப்பதுடன் பல யோக தத்துவங்களையும் குறிக்கலாம். 

No comments:

Post a Comment