Verse
12
காராமல்
வெளியரங்கம் செய்தாயானால்
காசினியில் இகழ்ச்சி செய்யக்
கழுதையாவார்
சீராக
மெய்ஞ்ஞானம் இந்த நூலில்
திரட்டி நவரசமாகப்
பிழிந்தேனையா
ஆராலும்
முடியாது இந்தக் கல்வி
ஆயிரத்தை அளந்தோர்கள்
அறிவார் உண்மை
பாரான
காவியத்தில் சுருக்க மென்ன
பார்த்திட்டார் சார்வெளி
நூறொன்று தானே (12)
Translation:
If you reveal it (the knowledge in meijnana) openly without caution
They will disgrace you, you will
become a donkey,
Collecting
the true wisdom/meijnana, superbly
I gave it as a juice with navarasa (multiple taste/experience) in this
work
This
sort of education is not possible by anyone else
Those who scale these thousand will
know the truth
Those who explore will see the
summary of this kavya-
As hundred and
one (12)
Commentary:
Agatthiyar emphasizes the precious nature of this knowledge by stating that if one reveals the message of the meijnana indiscriminately one will earn the disgrace of everyone, one will become a donkey. He says that he has painstakingly collected the true knowledge from varous sources and given their essence which has all the nine experiences or moods. Nava rasa or nine moods are love, mirth, compassion, anger, courage, terror, disgust, wonder and peace. Thus, meijnana is a complete work. He also says that no one is capable of imparting knowledge in the fashion he done through the meijnana. The meijnana has a total of 1000 verses, he states. Unfortunately we have only 365 verses available to us. Others have been lost over time. He also states that the summary of these 1000 verses was given as another work with 100 verses. Alternately, it may also mean that 100 verses of this work give the summary of the entire composition. He not mentioned the name of the summary.
இப்பாடலின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஒருவர் கருத்தில்லாமல் அனைவருக்கும் கூறினால் அதனால் அவர் பெரும் இழுக்கை அடைவார், கழுதையைப் போன்ற கீழான நிலையை அடைவார் என்கிறார் அகத்தியர். இதனால் முக்கியமான கருத்துக்களை தகுதியும் உண்மையான தாகமும் உள்ளவர்களுக்கு மட்டுமே கற்றுத்தர வேண்டும் என்று தெரிகிறது.
பல நூல்களிலும் கொடுக்கப்பட்டுள்ள உண்மையான ஞானத்தைத் திரட்டி அவற்றின் சாரத்தை நவரசமாக இந்நூலில் பிழிந்து அளித்துள்ளேன் என்று அகத்தியர் கூறுகிறார். நவரசம் என்பது அன்பு, மகிழ்ச்சி, கருணை, கோபம்இ, வீரம்க்கா, பயம்வி, வெறுப்பு, வியப்பு மற்றும் சாந்தம் என்பவை. இதனால் இந்த மெய்ஞ்ஞானம் என்ற நூல் ஒரு பரிபூரணமான காவியம் என்பது நமக்குத் தெரிகிறது. தான் இவ்வாறு அளித்ததைப்போல் ஞானத்தை அளிக்கக்கூடிய தகுதியைப் படைத்தவர் எவரும் இல்லை என்றும் அகத்தியர் கூறுகிறார். சித்தர்களின் தலையாயவரும் பல்லாயிரம் சீடர்களை உடையவருமான அகத்தியர் எத்தகைய உயர்ந்த குரு என்பது நமக்கு அவர் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லாவ்!.
இந்த ஆயிரம் பாடல்களில் கொடுத்துள்ள ஞானத்தின் சாரத்தை நூறு பாடல்களில் தான் அளித்துள்ளதாகவும் அகத்தியர் கூறுகிறார். இந்த நூறு பாடல்கள் வேறொரு நூலா அல்லது இந்த நூலின் நூறு பாடல்களா என்பது தெரியவில்லை.

No comments:
Post a Comment