Friday 31 January 2014

13. Agatthiyar meijnana kaviyam is the essence of chinmayam

Verse 13

சார்வெளி நூறுமது இதுக்குச் சூத்திரம்
சமுச்சயங்கள் என்னவென்றால் சொல்லக் கேளு
பேர் வெளியாய் காவியம்தான் இரண்டு சொன்னேன்
பெருஞான காவியம்தான் இதுவே ஞானம்
பார் வெளியே சொன்னதந்த காவியத்தினுள்ளே
பாடினேன் சரக்குவைப்பு ஞான வாதம்
சீர்மொழியாய் போகாது இந்த நூலில்
சின்மயத்தின் கருவதனைத் திரட்டினேனே   (13)

Translation:
The seed for this is the sārveli nōru
            Let me explain the collections
I uttered two kavya with common name
            This is the kavya on jnana
I spoke about the world in the other kavya
            I sang about sarakku vaippu, jnana vādam
As supreme words, in this book
            I collected the theme of chinmayam       (13)

Commentary:
Agatthiyar talks about the 100 verse work again and says that it is the sutra or summary of the meijnana kaviyam.  The following link gives the list of some of Agatthiyar's works.  One finds a book titled Agatthiyar jnanam 100.  May be this is the work he is referring to in this verse,

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D


While meijnana kaviyam is esoteric and only for qualified students the other work which is explicit descriptions is for the general public.  While the meijnana talks about chinmayam, the other work talks about sarakku vaippu and jnana vaadham.  
Agatthiyar's another famous composition is Saumya Sagaram which also contains 1200 verses.  There, he has mentioned several medicinal preparations that have implicit philosophical meanings too.  In some verses, he explains the jnana explicitly.  May be he is referring to the Saumya Sagaram here.  


அகத்தியர் தான் இந்த மெய்ஞ்ஞானகாவியம் என்ற நூலில் ஞானத்தின் கருவான சின்மயத்தைப் பிழிந்து தந்திருப்பதாகவும் இது போன்ற பெயரையுடைய மற்றொரு காவியத்தில் சரக்கு வைப்பு ஞான வாதம் ஆகியவற்றைப் பற்றி விளக்கியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.  அகத்தியரின் மற்றொரு முக்கிய நூல் சௌமிய சாகரம் ஆகும்.  ஆயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்ட அந்த நூலில் அவர் பல தயாரிப்புக்களையும் அவற்றின் பயன்களையும் கூறியுள்ளார்.  அந்த நூலில் உள்ள பல பாடல்களின் அவர் தத்துவக் கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.  அந்த நூலைத்தான் இங்கு குறிப்பிடுகிறாரோ என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment