Thursday 23 January 2014

Agatthiyar meijnana kaviyam 1

Verse 1

ஆதி பரமானபதி கருணை கூர்ந்து
அடிமுடியும் நடுவான அருளே காப்பு
பாதி மதி சடைக்கணிந்த பரனே காப்பு
பரஞ்சுடர்க்குப் பாதியுடல் பகுத்த சோதி
நீதி மறை சாத்திரங்கள் முன்பின்னான
நிடரெல்லாம் தீர்த்து ஓர் மாலை பூண்டு
சாதி பல வுயிர்களுக்கும் தருவாய் நின்ற
தந்தை தாய் காப்பு கணபதி காப்பாமே           (1)

Translation:

The Origin, the Param, the Lord/locus, with mercy
The grace which became the foot, the middle and the top/head- protection!
The lord who has adorned the partial moon on his locks - protection!
The effulgence who shared half the body with the supreme flame
Resolving confusions in the dharma, scriptures and sastras
Adorning a garland/ delusion (maya)
The one who stood as the tree that supported all the life forms
Father, mother, protection! Ganapathi- protection!    (1)

Commentary:

Agatthiyar begins his epic or kavya, exposition, on true wisdom (mei jnanam) with an invocatory verse where he seeks the protection of the Supreme Divine.  The Divine is the origin of everything.  It is the Param, the Supreme.  It is the Pathi, the locus, the refuge and the Lord.  Agatthiyar says that this Supreme Divine, due to its mercy, remains as the foot, the middle and the head.  These three represent the Divine’s various states of existence, as formless (arupa) state, formless form (rupa arupam) state and the state with a form (rupa). The state with the form is the lowest and hence is the foot.  The formless form is the middle state and the supreme state or the head is its formless or arupa state. These three states represent creation, sustenance and dissolution.  The rupa state represents creation, the formless form state represents sustenance and the arupa state represents dissolution.  In the context of yoga, the foot, the middle and the head represent the muladhara, anahata and sahasrara.

When creation or manifestation began, the first step was the Divine becoming Self-aware.  This is the bodham.  Thus, the Divine adorned the duality of sath-existence and chith- awareness. This awareness is indicated by the moon on Siva’s tresses.  The moon also represents the kala or knowledge that diminishes and grows with time. Agatthiyar seeks the protection of the Divine in this first step manifestation by invoking the Lord’s form where he adorns the moon on his locks.

The formless Sath-chith took the formless-form state, rupa-arupa, next.  The jyothi or effulgence is the formless form of the Divine.  It has a form and yet no one can define it as “this”.  Agatthiyar says that the Divine shared its body, its form with the effulgence. 

 The formless form then adored a form the expression of which is sound.  The nadha or primordial sound emerged from the Divine. Nadha led to the emerge of primordial form or bindu.  The words, sentences and great works or sastra, the scriptures are the manifestation of nadha which is none other than the Divine. 

When the completely unmanifested Divine took up a manifested form, due to the limitations it imposed on itself, some contradictions emerged.  The Divine corrected these mistakes by providing its experience.  

Siddha marga is an experiential path, not a dry jnana marga.  It is a path where experience and knowledge go together.  Experience is always correct.  When one tries to verbalize an experiences mistakes and shortcomings occur.  these mistakes can be corrected only by re-experience the original experience.  This is possible only by Divine grace.  Hence, Agatthiyar says that the Divine corrected the sastra. Also, the various incarnations of the Divine are said to occur to correct the mistakes that had crept in the scriptures and in their practices.  Siva's Divine play or Tiruvilaiadal are episodes that occurred for this purpose. 

Such a Divine adorned a ‘maalai’.  Maalai in Tamil means garland.  If the word is split as maal+i- it means adorning the maal or delustion, the maya.  The primary cause for the manifested universe is suddha maya.  This maya emerges from Siva and Sakti principles.  This maya leads to manifestation starting from Sadasiva.  Hence, Agatthiyar says that the Divine adorned the maal and supported the manifested world, represented by the various lifeforms.

The expression “maalai anindhu” gives another interesting interpretation. In Hindu tradition, the yajaman or the person performing an action wears a garland as a sign of his sankalpa or resolution to perform the action.  Any yaga or yagna will have the “adhikari” wearing the garland.  Here, the Divine is the adhikari, who willed to express itself as the manifested universe.  Hence, it “adorned the garland” and remained as the substratum supporting all the manifestations.

Finally, Agatthiyar seeks the protection of the mother, Sakti, the father, Siva, the starting point of all the dualities and Ganapathy the Lord of the completely dual manifested world.  In this context the expression “adi nadu mudi” means the bottom the fully manifested state represented by Ganapathi, the middle- the state of manifestation as Brahma, Vishnu, Rudra etc. and the mudi- Sakti and Siva where all the manifestations, dualities end.

மெய்ஞ்ஞான காவியம் என்னும் ஆயிரம் பாடல்கள் கொண்ட இத்தொகுப்பைத் தொடங்கும் அகத்தியர் இப்பாடலின்மூலம் இறைவனின் காப்பை வேண்டுகிறார்.  அனைத்திற்கும் மூலமாகவும் புகலிடமாகவும், தலைமையாகவும் இருப்பது பரம்பொருள், ஆதி, பரம், பதி.  அந்த முழுமுதற்பொருள், அருவம், அருவ உருவம் மற்றும் உருவம் என்ற மூன்று நிலைகளைக் கொண்டதாக உள்ளது.  இவற்றில் அருவ நிலையைமுதலில்  காப்பாக வேண்டுகிறார் அகத்தியர். 

அருவமான பரம்பொருள் முதலில் போதம் எனப்படும் தன்னுணர்வைப் பெறுகிறது. இந்த நிலை சித் அல்லது தன்னுணர்வு எனப்படுகிறது.  இவ்வாறு சத் எனப்படும் இருப்பு சித் என்னும் உணர்வைப் பெற்று சத் சித்தாக இருக்கிறது.  இந்த சித் என்ற உணர்வினால் அறிவு ஏற்படுகிறது.  இதனை மதி அல்லது சந்திரனாகக் குறிப்பது வழக்கம். அதனால் அகத்தியர் அடுத்து, மதியணிந்த பரம் காப்பு அல்லது சத் சித்தாக இருக்கும் பரம்பொருள் காப்பு என்கிறார்.
இவ்வாறு சத் சித்தான பரம்பொருள் அடுத்து அருவ உருவம் அல்லது ரூபாரூபம் என்ற நிலையை அடைகிறது.  இதைக் குறிப்பது ஜோதி.  ஜோதிக்கு ஒரு உருவு உண்டு ஆனால் அந்த உருவை “இதுதான்” என்று குறிக்க முடியாது.  மேலும், சித் எனப்படும் சோதி அனைத்துப் பொருள்களையும் காட்டுவதனால் ஒளி எனப்படுகிறது.  இவ்வாறான சோதிக்குத் தனது உடலில் ஒரு பகுதியை அளித்ததது பரம்பொருள் என்று கூறி அந்த அருவுருவம் காப்பு என்கிறார் அகத்தியர். 

அருவ உருவ நிலையை அடுத்து பரம்பொருள் உருவ நிலையை அணிகிறது. பரம்பொருளின் உருவ நிலையே பிரபஞ்சம்.  அது முதலில் வாக் எனப்படும் நாதமாகத் தோன்றி முடிவில் சாத்திரங்களாகவும் சொற்களாகவும் வெளிப்படுகிறது.  இந்த மாற்றம் ஏற்படும்போது பரம்பொருள் தனக்கு காலம், தேசம், காரணம் என்ற கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அளவுக்குட்பட்டதாக விளங்குகிறது.  இந்த கட்டுப்பாடுகளால் பல தத்துவங்கள் முன்பின்னாகின்றன.  இந்த தவறான புரிதல் இறைவனை உணர்ந்தவுடன், பரம்பொருளை அனுபவித்தவுடன் சரியாகிறது.  சித்த மார்க்கம் அனுபவமார்க்கம் வெறும் ஞான மார்க்கமல்ல.  இதற்குக் காரணம் அனுபவமற்ற ஞானத்தால் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.  அனுபவம் அனுபவத்தில் தவறுகள் இல்லை.  இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கும்போதே, அதை சாத்திரமாகச் செய்யும் போதே தவறுகள் ஏற்படுகின்றன. அதனால்தான் இறைவனை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று குறிப்பிடுகிறோம்.  இவ்வாறு ஞானத்தில் ஏற்படும் முரண்களை பரம்பொருள் தனது அனுபவத்தைத் தந்து சரிசெய்கிறது.

இவ்வாறு வாக்காக, ஒலியாக வெளிப்பட்ட பரம்பொருள், மால் எனப்படும் மாயையை அணிந்துகொண்டு அளவுக்குட்பட்டதாகி, உலகமாகி, தனது அந்த நிலையை, உலகமாகக் காட்சியளிப்பவற்றை ஒரு மரம்போலத் தாங்குகிறது. 

இங்கு அகத்தியர் “ஒரு மாலை அணிந்துகொண்டு” பரம்பொருள் உலகைத் தாங்குகிறது என்று கூறுகிறார்.  நமது சடங்குகளில் அந்த சடங்கைச் செய்பவர், அதன் எசமானர், தனது சங்கல்பத்தின் வெளிப்பாடாக மாலையை அணிந்துகொள்கிறார்.  இங்கு “நான் பலவாகக் காட்சியளிப்பேன்” என்ற சங்கல்பத்தைச் செய்துகொண்ட பரம்பொருள் அதன் குறிப்பாக மாலையை அணிந்துகொண்டது என்று அகத்தியர் கூறுகிறார் என்ற ரசமான பொருளையும் இத்தொடர் அளிக்கிறது.


இவ்வாறு ஆண் பெண் என்று முழு வெளிப்பாட்டைக் குறிக்கும் சிவசக்திகளை தாய் தந்தையரைக் காப்பு என்றும் அவர்கள் தோற்றுவித்த பல தத்துவங்களை, கணங்களை ஆளும் கணபதியைக் காப்பு என்றும் கூறி இக்காவியத்தைத் தொடங்குகிறார் அகத்தியர். இந்த இடத்தில் இரண்டாவது அடியில் உள்ள தொடர், அடி நடு முடி என்பது ஒரு சுவையான பொருளைத் தருகிறது.  அடி என்பது முழு வெளிப்பாட்டு நிலை, அதைக் குறிப்பது கணபதி, நடு என்பது வெளிப்பாடு நடைபெறும் நிலை, முடி என்பது வெளிப்பாடுகள் ஒடுங்கியிருக்கும் நிலை, சக்தி சிவ நிலை.

No comments:

Post a Comment