Thursday, 23 January 2014

2. Praise to Ganapathy

Verse 2
கணபதியே அடியாகி அகிலமாகி
காரணத்தின் குருவாகி காட்சியாகி
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞான
குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞான
கனவிலேயும் நினைவிலேயும் வெளியாய் நின்ற
காரணத்தின் வடிவாகி கருத்துள் ஆகி
பண அரவம் பூண்ட சிவன் வாசி நேர்மை
பாடுகிறேன் காவியத்துள் பாராய் தந்தை  (2)

Translation:
Ganapathi, verily becoming the base, the universe
The preceptor of the cause, that which is seen,
The Lord with auspicious qualities, the lady, the lightning with breasts,
As the white state of wisdom of the guru, the branch, the embodiment of grace
The form of the cause who remains as the supreme space
In dreams and in thoughts, coming into one’s thought
The nature of vāsi (breath control) of Siva, the one who adorns the snake with the hood,
I am singing as a kavya, my father please bless it with your vision.

Commentary:
This verse is addressed specifically to Lord Ganapathy.  Ganapathy is the Lord of the muladhara cakra, the base.  The kundalini sakti that resides in this cakra expands into the visible universe and the guru.  Agatthiyar calls sakti as the lady with breasts.  The breast is traditionally mentioned to indicate that sakti is full of jnana, ready to offer for her children, the Jiva. This knowledge is white like the milk as it is sattvic in nature. It is also mentioned to indicate benefits in this world and the next- iga para sukham.  It is also mentioned to indicate that it can either drown you in worldly pleasure or take you to supreme state.

Sakti is like the lightning, a flash which appears for a split second with all its magnificence.   Supreme consciousness occurs for a split second and overwhelms the aspirant like the brilliance of the lightning. Agatthiyar says that the wisdom of the guru is white- it is sattvic knowledge free from rajas or tamas.  ‘kombu’ refers to both a branch and the tusk of the elephant.  Agatthiyar calls Lord Ganapathy as the “kombu" of grace.  Kombu generally refers to the sushumna nadi.  Ganapathy helps a person open his sushumna nadi and reach the state of supreme consciousness.  

The form of the Lord is supreme space or vetta veli.  This state remains in all states of consciousness.  Agatthiyar refers to this by saying that this supreme space remains in both the dream state as well as in the thoughts, that is, in the wakeful state.  He then mentions his intent that he wishes to describe vāsi, the kundalini yoga with breath control, the technique which leads one to the state of sivam or supreme consciousness.   Thus, we understand that this work, meijnana was composed when Agatthiyar remained in state of supreme consciousness.

The snake with his hood indicates the prana or the vital breath. Vasi yogam is regulation of the prana.  The five headed snake with its hood spread over lord Vishnu also indicates this concept, that the state of supreme consciousness can be found on the lap of the pancha prana or five vital breaths.

இப்பாடல் கணபதியைக் குறித்து உள்ளது.  கணபதி அடிக்கு, மூலாதாரத்துக்கு, அதிபதி.  அங்கு உறையும் குண்டலினி சக்தியே நாம் கண்ணால் காணும் உலகாக விரிகிறாள்.  அவளே நமக்கு ஞானநிலையை அளிக்கும் குரு.  அத்தகைய குருவின் ஞானம் வெள்ளை நிறத்தையுடையது, அதாவது சத்துவ குணத்தை உடையது.  சக்தியை அகத்தியர் கொங்கை மின்னாள் என்று அழைக்கிறார்.  சக்தியின் கொங்கை ஞானப்பாலால் நிரம்பியது.  விழிப்புணர்வின் உச்சநிலையைகுறிக்கும் அவள் மின்னலைப் போல கணநேரம் தோன்றி மறைபவள். மின்னலை ஒத்த பிரகாசத்தை உடையவள். இவ்வாறு கணபதியின் அருளை வேண்டும் அகத்தியர், அடுத்து இக்காவியத்தின் குறிக்கோளைக்  கூறுகிறார்.  தான் சிவநிலைக்கு உரிய வாசியைப் பற்றிப் பாடப்போவதாக கணபதியிடம் கூறும் அவர் தனது முயற்சி தடையற நடைபெறகணபதியின் கடைக்கண் பார்வையை வேண்டுகிறார்.  சிவனைப் பற்றிக் குறிப்பிடும்போது அகத்தியர் பணாமண்டலத்தை விரித்திருக்கும் பாம்பை அணிந்தவன் என்று கூறுகிறார்.  பாம்பு என்பது பிராணனைக் குறிக்கும்.  ஐந்து தலை நாகமும் அதன் மடியில் விஷ்ணுவும் இருப்பதைப் போல வரைவது ஐவகையான பிராணனையும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உச்ச இறையுணர்வையும் குறிக்கின்றது

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Amazing akka ....Nandrigal pala . Om Agatheesaaye Nama _/\_

    ReplyDelete
  3. great work divine mother...Aum Agasthiya maharishi thiruvadigal porti!!!!!!!!!!

    ReplyDelete
  4. Thank you Stalin, did not see the older posts.

    ReplyDelete