Verse
28
கீறுவான்
குருபீடம் நானே என்பான்
கிரியைஇது
கிரியையிது உலகோர்க்காகும்
வாறு
கேள் மானதமாம் பூஜை ஞானி
மனத்துள்ளே
இவ்வண்ணம் பூஜை செய்வார்
தேறுவார்
சிவஞான மனதே என்பார்
சிவசிவா
பரத்தினது செயல்தானய்யா
ஆறுவார்
சிவக்கியானம் பெரியோர் அப்பா
அப்பனே
சுழிநாடி ஆச்சென்பாரே
Translation:
He
will draw the yantra and say that he himself is the gurupeedam
This
is kriya. It is fit for the worldly.
Listen
about mental worship
A
wise one (jnani) will worship mentally
He
will say that one will attain Sivajnana in the mind.
Siva,
Sivā (Oh!) they will pacify themselves as everything is
the work of the Lord (Param)- the great souls with Sivajnana.
They
will say that it became the sushumna nādi/seeking the whorl this is attained.
Commentary:
Charya,
kriya, yoga and jnana are the four steps for divine realization. Charya refers to external disciplines, kriya
is internal disciplines, yoga includes pranayama, asana, dharana, dhyana and
jnana is the wisdom that is attained as the result of this four step
process. In the previous verse
Agatthiyar described the nature of external world and its distractions. Guarding oneself from them externally is
charya. Here he describes kriya, the mental
disciplining. Gurupeedam is internal
worship, considering that the Divine is within oneself and performing mental
worship. It is monism. Agatthiyar says that jnanis or realized souls
perform this form of worship. They will
consider all occurrences as divine action and will not waver from their
path. The culmination of this internal
worship is Siva jnana or divine wisdom.
Such great souls opine that this wisdom is attainable through kundalini
yoga when the prana ascends through the sushumna nadi. This may also mean that by seeking the whorl the sivajnana is attained.
Alternately, Agatthiyar may also be meaning that drawing a yantra externally and worshiping is an external action, a kriya fit for the worldly and not saints who want to attain siva jnana. In previous verses he mentioned that the yantra is fit for the ashta karma. They are relevant only for the worldly.
சரியை,
கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கும் இறையுணர்வைப் பெற உதவும் படிகளாகும். சரியை என்பது பொய் பேசாமை, களவாமை, பிறன் மனை
விரும்பாமை போன்ற வெளியொழுக்கங்களாகும்.
கிரியை என்பது மனத்தின் ஒழுக்கங்கள், மனதுள் இறைவனை வழிபடுவது. அதை இப்பாடலில் விளக்கப்புகும் அகத்தியர்
ஞானிகள் அவ்வாறு இறைவனை மனதுள் வழிபடுவர் என்று கூறுகிறார். குருபீடம் என்பது மனத்துள் இறைவனை வழிபடுவது.
தானும் இறைவனும் ஒன்று என்று எண்ணும் ஒருமை நிலை. இவ்வாறு கருதும் ஞானிகள் முடிவில்
தமது மனத்துள் சிவஞானத்தைப் பெறுவர், எல்லா செயல்களும் இறைவனின் செயல்களே என்பதை
உணர்ந்து மனச்சாந்தியுடன் வாழ்வர். அத்தகைய ஞானிகள் பிராணனை சுழுமுனை நாடியின்
மூலம் ஏற்றும்போது சிவஞானம் ஏற்படும் என்று கூறுவர்.
இப்பாடலுக்கு இன்னொரு விதத்தில் பொருள் கூறலாம். முற்பாடல்களில் யந்திரங்களை வரைவதைப் பற்றி அகத்தியர் கூறினார். அவை உலகோர்க்காக, உலக பலன்களுக்காக அவற்றை வழிபடுவதான கிரியை செய்யபடுகிறது என்கிறார் இப்பாடலில். ஆனால் சிவஞானத்தை விரும்பும் ஒரு ஞானி, மானச பூசையையே செய்வார் என்றும் அவர் கூறுகிறார்.
இப்பாடலுக்கு இன்னொரு விதத்தில் பொருள் கூறலாம். முற்பாடல்களில் யந்திரங்களை வரைவதைப் பற்றி அகத்தியர் கூறினார். அவை உலகோர்க்காக, உலக பலன்களுக்காக அவற்றை வழிபடுவதான கிரியை செய்யபடுகிறது என்கிறார் இப்பாடலில். ஆனால் சிவஞானத்தை விரும்பும் ஒரு ஞானி, மானச பூசையையே செய்வார் என்றும் அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment