Saturday 15 February 2014

29. True Siva puja

Verse 29
கள்ள ஞானம்
ஆச்சென்பார் சிவபூஜை நேர்மை அப்பா
ஆரறிவார் ஆரறிவார் அறிந்தோர் ஞானி
பேச்சென்பார் பேச்சாலே வருமோ என்பார்
பேய்மக்காள் சாத்திரத்தைத் தேடார் தேடார்
வாய்ச்சென்பார் சகல சித்தும் வாய்ச்சுதென்பார்
வரிதரிது வரித்தவர்கள் உண்டோ என்பார்
கூச்சென்பார்கூத்தாடிப் பயல்களோடே
கூடாதே கூடாதே குருவைத் தேடே

Translation:
Deceitful knowledge

They will say it is done. The truth about Sivapuja
Who will know, who will know!  Those who know are the wise
They will say speech, they will say, “Will it come through speech?”
Ghostly people, will not search the scriptures
It occurred-they will say, attained all the siddhis-they will say
Rare, rare, is there anyone who attained it- they will say
They will say horripilation.  Do not associate with
Cheats and charlatan.  Search for the Guru.

Commentary:
Agatthiyar wonders whether anyone knows about true Siva puja.  Everyone has their own theory about it.  He says that only the wise know about it.  It cannot be explained by words.  One has to carefully explore the scriptures to understand it.  It grants all the benefits but it is very rare and difficult to accomplish.  It is not mere feelings in the body such as horripilation or tears pouring out.  Hence, Agatthiyar advises people to not associate with charlatans and cheats but seek the true guru who will teach them the truth. 


யாருக்காவது உண்மையான சிவபூஜை தெரியுமா என்று அகத்தியர் சிலாகிக்கிறார்.  மக்கள் அதை வார்த்தைகளால் விளக்க முற்படுகின்றனர்.  அதனைப் பற்றி சாத்திரங்களில் தேடுவதில்லை.  எல்லா சித்திகளும் தமக்குக் கிட்டியுள்ளன என்று மயிர்கூச்செரிதலையும், கண்களில் நீர் வழிவதையும் காட்டுகின்றனர்.  அத்தகைய மக்களை கூத்தாடிகள் என்று அகத்தியர் கடிந்துகொள்கிறார்.  உண்மையை அறியும் நாட்டமுள்ளவர்கள் அவர்களுடன் சேராமல் ஒரு குருவைத் தேடவேண்டும் என்று அகத்தியர் பரிந்துரைக்கிறார். 

No comments:

Post a Comment