Sunday, 16 February 2014

32. Guru is Tatpurusha

Verse 32
ஒன்றாகஉலகமெல்லாம் நிறைந்த மூர்த்தி
உத்தமர்கள் தம்முள்ளே விளங்கும் மூர்த்தி
பண்டாகிப் பழம்பொருளாய் நின்ற வாசி
பராபரத்தின் அடைந்து நின்ற மர்ம யோகி
குன்றாகிக் குன்றுதனில் வைத்த தீபம்
குருமணியாய் விளங்குகின்ற சுடரும் ஆகும்
தண்டாகித் தண்டமே ழுலக மெல்லாம்
தான் நிறைந்த தற்புருட நிலையைக் காணே

Translation:
The Lord who pervades all the universes as a Singleton
The Lord who remains within the supreme souls
The vital breath that remained as the ancient entity
The secret yogi who reached the parāparam and remained there
As the hill, as the light on top of the hill
It is the effulgence of gurumani
As the shaft as the stick, that which pervaded all the seven worlds ,
See that state of Tatpurusha

Commentary:
This is an interesting verse where Agatthiyar calls the guru as the state of Tatpurusha.  Ishana, Tatpurusha, Aghora, Vamadeva and Sadyojatha are the five faces of Siva.  They are also related to various principles as shown below:

Tatpurusha- annamaya kosham, earth principle, muladhara cakra and a in omkara,
Aghora- pranamaya kosham, water principle, svadishtana cakra, u of omkara,
Sadyojatha-the manomaya kosham, agni principle, manipuraka cakra, ma in omkara. 
Vamadeva-vijnanamaya kosham, vayu principle, anahata caktra, and bindu of omkara,
Ishana- anandamaya kosha, aakasha principle, vishuddhi, ajna and sahasrara cakra and the nada aspect of omkara.
                                       
Agatthiyar advises Pulatthiyar to identify the effulgence at the muladhara cakra, as the guru.

Agatthiyar describes the guru, the kundalini Shakti further.  He calls it a Singleton that remains within great souls and as the breath practice or vaasi that reaches the paraapara or the formless form of the Divine.  This is the state of supreme consciousness.  Paraaparam refers to the Divine in the formless form state, the state of flame or sudar. The flame has a form and yet is formless.  Agatthiyar calls the guru in the muladhara as a rock.  A rock is firm, massive and unwavering.  The animal associated with the muladhara cakra is the elephant which shows the power, the force there. He also calls the guru as the light lit on top of the rock.  This is the flame of kundalini sakti that is in the dormant state at the muladhara.  This may also refer to the consciousness reaching the sahasrara which is also called the rock. The gurumani is the appearance of a jewel, a pearl that one witnesses at the ajna.  The gurucakra is between the ajna and the sahasrara.  It is at the gateway to sahasrara, the super conscious state.   The shaft and the stick refer to sushumna nadi through which the kundalini sakti travels.  This is the Divine that pervades all the seven worlds, the seven states of consciousness.  Agatthiyar calls this as Tatpurusha.

குருவைப் பற்றி விளக்கும் மற்றொரு பாடலான இதில் அகத்தியர் குருவை தத்புருஷநிலை, சுழுமுனையில் உள்ள குண்டலினி சக்தி என்கிறார். 

தத்புருஷம், ஈசானம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்று சிவபெருமானுக்கு உள்ள ஐந்து முகங்களில் தத்புருஷம் அன்னமய கோசத்தையும், ஐந்து பூதங்களில் நிலத்தையும் மூலாதார சக்கரத்தையும் ஓம்காரத்தில் அஎன்னும் எழுத்தையும் குறிக்கும்.
அகோரம்- பிராணமய கோசம், நீர் தத்துவம், சுவாதிஷ்டன சக்கரம், உ என்னும் எழுத்தையும்
சத்யோஜாதம்- மனோமய கோசம், நெருப்புத் தத்துவம், மணிபூரக சக்கரத்தையும் ம என்னும் எழுத்தையும்
வாமதேவம்- விஞ்ஞானமய கோசம், வாயு தத்துவம், அனாஹத சக்கரம், ஓம்காரத்தின் பிந்துவையும்
ஈசானன்- ஆனந்தமய கோசம், ஆகாச தத்துவம், விஷுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரத்தையும் ஓம்காரத்தின் நாதத்தையும் குறிக்கின்றன.
                          

அகத்தியர் குருவை, குண்டலினி சக்தியை, உத்தமர்களுள் இருக்கும் ஏகம் என்றும், பராபரத்தை அடையும் வாசி அல்லது பிராணன் என்றும் குறிப்பிடுகிறார்.  பாரபரம் என்பது இறைவனின் அருவ உருவ நிலையைக் குறிக்கும்.  இதையே சுடர் என்னும் நிலை குறிக்கிறது.  சுடருக்கு ஒரு உருவம் உண்டு ஆனால் அந்த உருவத்தை இன்னதென்று விளக்க முடியாது.  அகத்தியர் குருவை குன்று எனவும் குன்றின் மேல் இட்ட விளக்கு எனவும் அழைக்கிறார்.  ஒரு குன்று அசையாமல் என்றும் நிலைத்திருப்பது.  குண்டலினி சக்தி மூலாதாரத்தில் அசைவற்று முழு சக்தியுடன் இருக்கிறது.  குன்றின் மேல் இட்ட விளக்கு என்பது விழிக்க ஆரம்பித்த குண்டலினி ச்கதியைக் குறிக்கிறது.  இது சஹஸ்ராரத்தை அடைந்த உணர்வையும் குறிக்கலாம்.  சஹாராரத்தை உணர்வு அடைவது குன்றின்மேல் இட்ட விளக்கு என்று அழைக்கப்படும். 


குருமணி என்பது ஆக்ஞையில் காணும் ஒரு மணி உருவம். குண்டலினி சக்தியை ஆக்ஞாவுக்கு உயர்த்தும் ஒரு யோகி இந்த குரு மணியைக் காண்கிறார்.  குரு சக்கரம் என்பது சஹாஸ்ராரத்துக்கும் ஆக்ஞைக்கும் இடையில் உள்ளது.  இதை சகஸ்ராரத்தின் நுழைவாயில் என்று அழைப்பர்.  இங்கு ஏற்படும் விழிப்புணர்வு அனுபவமே குருமணி எனப்படுகிறது.  தண்டம் தண்டு என்று சுழுமுனை நாடிக்கு மற்றொரு பெயர்.  இதில் குண்டலினி சக்தி ஏறி ஏழுலகங்களையும் நிறைக்கிறது.  ஏழு உலகங்கள் என்பது விழிப்புணர்வின் ஏழு நிலைகளைக் குறிக்கும். இவ்வாறு குருவை தத்புருஷ நிலையாகக் காணுமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.  


No comments:

Post a Comment