Sunday, 2 February 2014

17. Experiences during yoga

Verse 17

வைத்தனடா வழிதோறும் வெண்ணிலவை
வரவனுப்பி யோகியார்க்கு வழியைச் சொன்னேன்
பத்தாசை வைத்து ஓர் மனது பூண்டு
பரம் சுடரைச் சுழியில் வைத்துப் பார்க்கவென்றால்
சத்தாகிளும் இளைப்புத் தோன்றாதையா
சந்திர புஷ்கரணியிலே ஸ்நான மாடி
முத்தான விபூதியைத் தளமாய்ப் பூசி
முழித்துப்பார் முச்சுடரும் உதையங் காணே

Translation:
All through the path, I placed the moon
Sending invitation I told the way to the yogins 
Having interest, focusing the mind 
Placing the Param in the whorl, to see it
Not even an iota of fatigue will occur (if my way is followed)
Bathing in the chandra pushkarni
Adorning the pearly sacred ash
Open your eyes wide and see pointedly.  You will see the three flames arising.

Commentary:
This verse describes the kundalini yoga.  The moon mentioned here represents the supreme wisdom.  Agatthiyar says that he placed awareness or consciousness, the moon all through the path.  This refers to the chakra.  They are sites of different states of consciousness.  A yogin experiences these while travelling through them.  Agatthiyar says that he sent invitation to the yogins.  This means, a guru invites the right person for the experience of the supreme state.  The supreme state is perceived by focusing the mind at one point, have a sincere interest to experience it and placing the Supreme consciousness at the sushumna.  During this process, even though it is quite arduous, the yogin does not feel tired. He feels energized.  Bathing in the chandra pushkarni refers to immersing oneself in the supreme state, or the nectar from lalata.  A yogin adorns the sacred ash which gives specific mystical powers.  He holds the sambhavi mudra.  Then he sees the three flames, sun, moon and fire arising and dancing together at the ajna.

இப்பாடல் குண்டலினி யோகத்தை விளக்குகிறது.  சந்திரன் என்பது ஞானத்தையும் இட நாடியையும் சந்திர மண்டலத்தையும் மனத்தையும் குறிக்கும்.  பிரபஞ்ச பிராண சக்தி நமது உடலுள் இட நாடி வழியாக நுழைகிறது. அதை பிங்கள நாடி உடலினுள் தக்க வைக்கிறது.  மனத்தை ஒரு கருவியாகக் கொண்டே ஒரு யோகி உயர் உணர்வு நிலைகளை அடைகிறார்.  பாதையில் வெண்ணிலவை வைத்து அழைத்தேன் என்று அகத்தியர் கூறுவது, குண்டலினியின் பாதையான சக்கரங்களையும் அவை தரும் ஞானத்தையும் குறிக்கும்.  இந்தப் பாதையில் பயணிக்கும் ஒரு யோகி பர ஒளியை பரஞ்சோதியை சுழி எனப்படும் ஆக்ஞையில் காண முனைகிறார். அதற்கு அவர் சந்திர புஷ்கரணி எனப்படும் லலாட சக்கரத்திலிருந்து ஊரும் அமிர்தத்தில் குளித்து விபூதியைப் பூசி கண்களை விழித்து ஆக்னையைப் பார்க்கிறார் அப்போது முத்தீக்களான சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றும் அவருக்குத் தென்படுகின்றன.

No comments:

Post a Comment