Verse 133
புலம்புவார்
புண்ணியம் என்றும் பாவம் என்றும்
பொல்லாத
கர்மத்தால் பிறந்த தென்றும்
கலங்குவார்
முன்டானனும் தோனா மல்தான்
கத்துவார்
கழுதைப்போல சமையத்தோர்கள்
அலங்காரம்
மிகப்பேசி இருந்து போவார்
ஐயகோ
அமைத்தபடி அறியார் உண்மை
குலங்காணக்
கொம்பறிந்து தாவ மாட்டார்
கோத்திரத்தை
அறியாமல் குலம் கேட்பாரே
Translation:
As sin and good
fortune- they will lament
They will feel
sorry that it
Occurred due to the
evil dharma, without knowing the truth
They will scream
like donkeys, the religious ones,
They will remain
talking decoratively and go away
Oh! They will not
know the truth of how things are
They will not jump
through the branch to know about the clan
They will ask about lineage without knowing about the clan.
Commentary:
Agatthiyar says
that without knowing the truth about creation, that it is due to divine will,
people will blame it on karma and dharma.
They will bray like donkeys and talk ornately. Agatthiyar laments that without perfroming
kundalini yoga, climbing through the branch- the sushumna nadi, they will waste
time talking about worldly identities such as clan and lineage. Kula means not only clan but also the kaula marga.
உண்மையில்
உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதை உணராத மக்கள் அவை கர்மத்தினாலும் தர்மத்தினாலும்
ஏற்பட்டன என்று கூறுவார் என்கிறார் அகத்தியர்.
இந்த சமய மூடர்கள் கழுதைபோல தமது கருத்துக்களைக் கத்தி அலங்காரமாகப் பேசி
முடிவில் மடிந்துபோவர். குண்டலினி
யோகத்தின் மூலம் சுழுமுனை நாடியில், கொம்பில், ஏறாமல் தமது குலத்தை அறியாமல், உலக
அடையாளங்களான குலம் கோத்திரம் என்று பேசித்திரிவர் என்கிறார் அவர். குலம் என்பது ஒருவர் பிறந்த குலத்தை மட்டுமல்லாமல் கௌல மார்க்கத்தையும் குறிக்கும்.
No comments:
Post a Comment