Sunday 13 April 2014

154. Mercury, Sulphur- what are they in Siddha parlance? சித்தர்களின் பரிபாஷையில் ரசம் கெந்தம் என்றால் என்ன?

Verse 154

புணர்ச்சியில் கெடுதி என்னவென்க கேள்வி?

உரைக்கிறேன் புலத்தியனே சுழினையோனே
உத்தரிவால் கேளாட்டால் விளங்காதையா
நிரைக்கிறேன் காயசித்தி பண்ணும்போது
ரெண்டு கல்பம் கொள்ளவும் செய்யொணாது
கரைக்கிறேன் இரண்டு கல்பம் என்னவென்றால்
காட்டுகிறேன் ரசம் கெந்தி இரண்டும் அப்பா
புரைக்கிறேன் அகாரமோடு உகாரம் ரெண்டும்
பெண்விரும்பல் வருடமத்தில் ஆறு தானே

Translation:
I will tell Pulatthiya!  The expert of the sushumana
Unless you learn this through question and answer it will not become clear
I will tell you, while performing kayasiddhi (perfecting the body)
Consuming the two kalpa, I will dissolve
That which is impossible.  What are the two kalpa, if questioned
I will show them as rasam and gendham, Son,
I will explain the akara along with the ukara, the two.
Seeking a woman, only six per year.

Commentary:

Agatthiyar is teaching how to perform kayasiddhi.  Kaya siddhi is the process of perfecting the body. Siddhas recommend three methods to attain kaya siddhi.  (Please refer to the article Types of bodies that I have posted at www.scribd.com on this topic.)
They are alchemy, kundalini yoga and ulta sadhana or reversal of the flow of semen.  Agatthiyar is talking about the first two methods here. 

He starts by saying that one should learn these techniques from a guru through inquiry and practice.  He says that rasam and gendham should be consumed for the kaya siddhi.  Rasam according to the Tamil siddhas refers to pãdarasam or mercy and gendham refers to sulphur. Mercury, sulphur and salt are three important components in the field of alchemy, both western and eastern.  However, these are not the chemical mercury, sulphur and salt.  They are union of different principles.  For example, sulphur is the harmony of the air and fire elements.  In the human body sulphur represents the limited soul or the Jiva.  It is the flame of our awarenenss and like the air principle it can freely move at its will.  Material sulphur catches fire easily and vapourises thus having the qualities of fire and air.

Mercury represents the composite of water and air elements.  According to Greek mythology mercury is in constant movement between the gods and the humans.  In the human body it represents the divine force.  While sulphur is the soul, the consciousness of the individual mercury is the life force that moves through the soul and animates it.  Chemical mercury is also interesting in that it is highly mobile, volatile and remains in all three states of matter easily. 

Salt in alchemy represents manifestation.  It is the vehicle through which the subtle principles work.  It is composed of the water and the earth elements.  In humans, salt represents the human body where the sulphur (soul) and mercury (life force) work.  

When we look at mercury and suphur in the philosophical sense we see that they represent the Divine (akara) and the limited soul (ukara) with the salt being the makara.  Sure enough!  Agatthiyar says in the next line that he will be describing the akara and ukara or the kundalini yoga.  He starts describing about the third method of control of the semen’s flow.  He says that coitus should be six per year.  It is not very clear if it means only six months in a year, six times in a year or on six specific occasions.  (Please do not interpret it as six women per year!)

அகத்தியர் இப்பாடலில் காயசித்தி முறையை விளக்குகிறார்.  காய சித்தி என்பது உடலை விழிப்புணர்வின் விரிவுக்குத் தயார்ப்படுத்துவது.  தமிழ் சித்தர்கள் இதற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றனர்.  அவை ரசவாதம், குண்டலினி யோகம் மற்றும் மடை மாற்றம் என்னும் விந்து வெளியீடு முறை (காண்க:  www.scribd.com, types of bodies, என்னும் கட்டுரையை).  இப்பாடலில் அகத்தியர் முதல் இரண்டு வழிகளைப் பற்றிக் கூறுகிறார்.

இந்த வழிகளை ஒரு குருவிடமிருந்து கேள்வி பதில் முறையில் ஒரு சீடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடங்கும் அகத்தியர் முதலில் ரசம் கெந்தம் என்ற இரண்டு கல்பன்களைப் பற்றிக் கூறுகிறார்.  தமிழ் சித்தர்கள் பரிபாஷையில் ரசம் என்பது பாதரசம், கந்தம் என்பது கந்தகம்.  பாதரசம், கந்தகம், உப்பு என்ற மூன்றும் ரசவாதத்தில் மிக முக்கியமான வேதிப்பொருட்கள்.   மேலைநாடுகளில் பயிற்சி செய்யப்படும் ரசவாத முறையும் இந்த மூன்று வேதிப்பொருட்களை முக்கியமானவையாகக் கருதுகின்றது.  இங்கு குறிப்பிடப்படும் பாதரசம் கந்தகம் முதலியவை நாம் சாதாரணமாக உபயோகிக்கும் வேதிப்பொருட்கள் அல்ல.  உதாரணமாக கந்தகம் என்பது நெருப்பு, காற்று என்றும் இரு பூதங்களின் இசைவு.  அது நமது ஆத்மாவைக் குறிக்கிறது.  ஆத்மாவின் விழிப்புணர்வு ஒரு ஜோதியாக அக்னியாக உள்ளது.  ஆத்மா காற்றைப் போல உடலில் எங்கும் போகக் கூடியது உடலைவிட்டு வெளியேறக்கூடியது.

பாதரசம் என்பது நீரும் காற்றும் சேர்ந்தது.  கிரேக்க புராணங்களில் பாதரசம் என்பது ஒரு கடவுட்களுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட தூதனாகக் கருதப்படுகிறது. 
மனித உடலில் பாதரசம் உயிர்ச் சக்தியை பிராண சக்தியைக் குறிக்கிறது.  எவ்வாறு கந்தகம் ஜீவசக்தியோ அதேபோல் பாதரசம், இந்த ஜீவசக்தியை இயக்கம் இறைசக்தியாகும்.  வேதிப்பொருட்களில் பாதரசம் நீரின் தன்மையையும் காற்றின் தன்மையும் கொண்டது. 

ரசவாதத்தில் உப்பு என்பது மாயையை அல்லது பொருட்களின் பருவுருவைக் குறிக்கிறது.  அதன் மூலம் தான் கந்தகமும் பாதரசமும் செயல்படுகின்றன. அது நீர் மற்றும் நிலத்தின் தன்மையைக் கொண்டது.  ஸ்தூல தளத்தில் அது உயிர்களின் உடலைக் குறிக்கிறது. 

பாதரசம், கந்தகம் உப்பு ஆகிய மூன்றையும் நாம் தத்துவ தளத்தில் நோக்கினால் அவை முறையே அகார உகார மகாரங்களைக் குறிக்கின்றன.  அதை நோக்கில் கொண்டே அகத்தியரும் தனது அடுத்த வரியில் தான் அகாரத்தைப் பற்றியும் உகாரத்தைப் பற்றியும் கூறுவதாகச் சொல்கிறார்.  குண்டலி யோகத்தில் அகாரம் என்பது இறையுணர்வையும் உகாரம் என்பது ஜீவனையும் மகாரம் என்பது மாயையையும் குறிக்கின்றன.  இவ்வாறு ரசவாதம் குண்டலினி யோகம் என்ற இரு முறைகளையும் கூறியபிறகு அகத்தியர் மூன்றாவதான மடை மாற்றம் என்பதைப் பற்றிப் பேசுவதற்குத் தக்கவாறு பெண் விரும்பல் என்பது “வருடமத்தில் ஆறு” என்கிறார்.   இந்த ஆறு என்பது வருடத்துக்கு ஆறு முறையா, ஆறு மாதங்களிலா அல்லது ஆறு குறிப்பிட்ட சமயத்திலா என்பது புரியவில்லை.  (வருடத்துக்கு ஆறு மாதர்கள் என்று ஒருவரும் பொருள் கொள்ள வேண்டாம்!)

4 comments:

  1. Thank you very much for your detailed Explanation.
    Union of different principles , explained very well.
    You indeed have Agathiyan's Grace,

    Stay Blessed.!

    ReplyDelete
  2. Thank you for your blessings. This was a learning experience for me. The next verse is on a special yoga, that of reversing the flow of semen. I am working on it.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete