Friday 18 April 2014

157. Read this book to become a siddha

Verse 157
பெருமை நூல் வாங்க விபரம்
சொல்லவென்றால் அந்தரங்கம் சூக்ஷம் சூக்ஷம்
சொன்னாக்கால் எல்லோரும் சித்தன் ஆவார்
அல்லவென்றால் போகாது இந்த நூலில் 
           அடிமுடியும் தெரிய நன்றாய் அறிவிப்போம் கேள்
புல்லரென்ற புல்லரிடம் வெளிவி டாதே
பொருள் எல்லாம் இந்த நூல் புகலும் ஐயா
கல்லென்றால் கடினமடா இந்தக் கல்வி
           காட்டாதே நூல் மகனே கருத்துள் காரே

Translation:
To say about this very personal, subtle, subtle
            If revealed, everyone will become a siddha
No one can deny this book
            We will announce the top and the bottom, listen
Do not reveal this to the lowly,
            This book will tell all the essential knowledge
If said, “study” this knowledge is hard to attain
            Do not show this book, son, hold it in the mind.

Commentary:
Agattthiyar elaborates about this book further.  He says that the topics discussed here are very personal and subtle.  No one can deny the knowledge put forth here.  He says that he will describe “the top and the bottom”.  This means the complete knowledge, from top to bottom.  It also means the subtle knowledge about the muladhara chakra to the sahasrara and beyond.  This knowledge cannot be learned from a book but should be obtained from a Guru about which he is talking in the next verse.  He advises Pulatthiyar to hold this book dearly and to keep the ideas mentioned here in his mind.


இந்த நூலின் பெருமையை மேலும் விளக்குகிறார் அகத்தியர்.  இதில் விளக்கப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் அந்தரங்கமானவை சூட்சுமமானவை.  இந்த நூலை ஒருவராலும் மறுக்க முடியாது.  இதை தகுதியற்றவருக்குக் காட்டவேண்டாம் என்னும் அகத்தியர் இதில் உள்ளவற்றை ஒருவரால் புத்தகத்திலிருந்து படித்து அறிய முடியாது இதில் உள்ளவற்றை ஒருவர் தகுந்த குருவிடமிருந்து பெற்று அவற்றை மனதில் எண்ணிப்பார்த்து உணரவேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment