Tuesday 1 April 2014

123. The donkey who offers goat and gruel to the golden image

Verse 123
தூஷிப்பான் தோஷியவன் திருட்டுக் கள்ளன்
துன்மார்க்கன் இவன் பொல்லாத் துரோகி அப்பா
பூசிப்பான் சகல முறை ஞானம் சொல்லி
பொற்சிலைக்கு ஆடு வெட்டி பொங்கல் செய்வான்
பாசிப்பான் கோவில் என்ன தர்மம் ஏது
பாடுவதால் இவன் தானே நொந்து கொள்வான்
காசிக்கே போய் வருவான் கருமம் தீர்க்க
கழுதையவன் கற்றுணர்ந்த மட்டை தானே

The thief
He will insult, the charlatan, he is a thief
He belongs to the evil path. He is bad, the cheat, the backstabber, Son!
He will perform worship several times imparting wisdom
To the golden statue, sacrificing a goat and offering gruel,
He will make a show, what is temple, what is dharma
He will lament himself
He will go to Kashi to get rid of his karma
He is a donkey, the learned stupid/coconut frond

Translation:
This verse is about a person who immerses himself in performing rituals.  He performs rituals uttering verses of wisdom in front of a statue made of gold, sacrificing animals and offering food items.  He goes to Kashi to get rid of sins without realzing that none of these will grant him wisdom.  Agatthiyar’s adjectives for him are donkey and coconut frond.  Calling one a coconut frond is to say that he is totally stupid.

We see a similar anger in Sivavakkiyar when he calls such people as “Cleaning the bell, taking the oral secretion from bees Ye stupid people who pour it over broken stone!” and questions them whether offering goat and gruel to the gods will relieve them of their diseases (verse 518, Sivavaakkiyam)


இப்பாடல் சடங்குகளைப் பெரிதாக எண்ணி உண்மையை உணர மறுக்கும் மக்களைப் பற்றிக் கூறுகிறது.  இத்தகைய மக்கள் பல மந்திரங்களையும் உபநிஷத வாக்கியங்களையும் ஒரு பொற்சிலையின் முன் கூறி அதற்கு ஆடு வெட்டி பொங்கல் படைத்து வழிபடுவர்.  அதன் பின் கோயில் என்ன தர்மம் என்ன என்றும் புலம்புவர்.  காசிக்குச் சென்று கர்மத்தைத் தொலைக்க முற்படுவர்.  இத்தகைய மக்களை அகத்தியர் கழுதைகள், மட்டைகள் என்று திட்டுகிறார். 


அகத்தியரின் கோபத்தின் எதிரொலியை நாம் சிவவாக்கியரின் பாடல் வரிகள் “மாறுபட்ட மணிதுலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே” என்று மக்களை அழைப்பதிலும், ஆடு கோழி வெட்டி இறைவனுக்குப் படைத்தல் உமது நோய் தீர்ந்துவிடுமா?” என்று அவர் கேட்பதிலும் காண்கிறோம் (பாடல் 518  சிவவாக்கியம்)

No comments:

Post a Comment