Wednesday 2 April 2014

125. Even dirt is more useful than such people!

Verse 125
குப்பை என்றால் பயிரிட்டு உண்ணலாகும்
குலமக்கள் இவ்வளவுக் குதவாரப்பா
அப்பை அன்றி சிவன் மகள் செய்வார் உண்டு
அறிவுகெட்ட பாவிகளுக்கு அதுவும் இல்லை
இப்பிறப்பும் எப்பிறப்பும் மோக்ஷம் இல்லை
இவன் ஒருவன் பிறந்தென்ன பிறவாக்கா என்
உப்பை அன்றி இன்னொருவன் செய்கை கேளு
ஓஓஓ பல ஞானம் இவன்தான் காணே

Translation:
If it is dirt, we can cultivate and consume
Worldly people are not so useful
(There are people who create Siva’s daughter without water) (not clear)
For the foolish sinner this also does not exist
They do not attain moksha in either this birth or any birth
What if this man is born or not born?
Without salt (not clear) listen to the action of another one
O O O he is the embodiment of wisdom, see!

Commentary:
There are two lines in this verse that are not clear.  One wonders whether there were scribal errors.  Agatthiyar deplores the person he called dirt in the previous verse.  He says that if it is at least dirt it will be useful for cultivation.  This man is useless.  The third line is not clear.  Agatthiyar says that such a person will not attain moksha ever and it is immaterial whether that person is born or not, his birth is useless.  He is starting to describe another person next.


இப்பாடலில் இரண்டு வரிகள் புரியவில்லை.  முதல் இரண்டு வரிகளில் அகத்தியர் மேற்பாடலில் கூறிய மக்கள் குப்பையாக இருந்தாலாவது அதில் பயிரிட்டு உண்ணலாம் இந்த மக்களால் அப்பயன் கூட இல்லை என்கிறார்.  அடுத்த வரி தெளிவாக இல்லை.  பொருள் புரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கவும்.  அடுத்த வரியில் இந்த பயனற்ற மக்கள் எப்பிறவியிலும் மோட்சம் அடையமாட்டார்கள் அவர்கள் இவ்வுலகில் பிறந்ததும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான், அவர்கள் பூமிக்கு பாரம் மட்டுமே என்று அகத்தியர் கூறுகிறார். இப்பாடலில் முடிவில் தான் மற்றொரு மனிதனைப் பற்றிக் கூறப்போவதாக அகத்தியர் சொல்கிறார்.

No comments:

Post a Comment