Verse 164
மறுமொழி
சொல்
என்றாய் புலத்தியனே சொல்லக் கேளு
சுத்த
நிறமயமான சோதி தன்னை
கல்
என்ற மனம் ஒற்ற பிள்ளைக் காக்கும்
காரணத்திலே
விழுந்து களரும் உள்ளம்
இல்
என்ற வீடுதனில் இருந்தால் என்ன
எழுந்து
சில மலை புகுந்து போனால் என்ன
அல்
என்ற உலகெல்லாம் சஞ்சரித்தால் என்ன
அருள்
பெருகும் ஞானமதை அறிந்துக் கொள்ளே
Translation:
Reply
Pulatthiya!
You asked, “Tell”. Listen to me say it
The
Pure, tranquil/undisturbed, effulgence
Will
be attained by the son whose stony mind goes away
The
heart will fall into the cause and dig
Does
not matter whether remaining in the house
Or go
to some mountains
What
if roamed around the dark world
Know the wisdom the race
will flow, know the wisdom.
Commentary:
Agatthiyar
replies to Pulatthiyar’s query about the locus of the divine. He says that it is the heart that is not stony. The nature of the
Divine, Paramasiva is purity, unbound by anything, effulgence. When the heart is ripe enough to realize the
presence of the Divine within then one’s attention will be completely focused
on the Universal Cause, the Divine. Once
this happens then it does not matter whether one remains as a householder of a
renunciate, whether one lives in a house or in the mountains or roams around
the world as a mendicant. Thus,
Agatthiyar says that the external symbols such as being a householder or a renunciate
does not matter, realization with the right attitude is all that matters. When one realizes that one’s heart will melt
and grace and universal love will flow.
Agatthiyar says that this is wisdom.
When
Pulatthiyar asks about Paramasiva, instead of describing him as one with
knotted hair, tiger skin robe or Ganga on his head Agatthiyar calls him as
purity, niramaya and effulgence.
Paramasiva represents the unmaifested state, the state of oneness. He is pure as he is free from the triple
qualities- sattva, rajas and tamas. He
is in the undisturbed or actionless state and is the effulgence of
consciousness.
Isvara
pratyabijna karika a text of Kaishmir Saivism describes Siva as, “Siva lies as
my own self (sva atma) and is proved in the very beginning (aadisiddha) as
myself who is the doer (karta) and the knower (jnaatha). Thus if one were to locate Siva one has to
point to oneself, as Siva is really consciousness (citi or samvith).
Agatthiyar
reflects this idea by saying that one with pure heart will realize Siva within
himself.
பரமசிவனின்
இடத்தைக் காட்டுமாறு புலத்தியர் கேட்டதற்கு அகத்தியர் இங்கு பதில்
கூறுகிறார். தூய, அசைவற்ற, ஜோதியான
சிவனின் இருப்பிடம் கல்போல் இல்லாத மனம் என்கிறார் அகத்தியர். திருமூலரின் அன்பே சிவம் என்ற வாக்கியத்தை
ஒத்திருக்கிறது இது. மனம் கனிந்து
இறைவனின் இருப்பிடம் “தான்” என்பதை உணரும்போது அந்த மனிதன் அனைத்துக்கும் காரணமான பரம்பொருளில் ஒன்றிவிடுகிறான்.
இந்த உண்மையை உணர்ந்தபின் ஒருவர் இல்லறவாழ்க்கையை வாழ்ந்தால் என்ன, துறவியாக
மலைகளில் வாசித்தால் என்ன, பித்தனைப் போல இவ்வுலகில் சுற்றித் திறந்தால் என்ன
(அவன் எப்பொழுதும் இந்த உணர்ந்த நிலையில் இருக்கிறான், பரம்பொருளில், காரணத்தில்
மூழ்கியிருக்கிறான்).
புலத்தியர்
அகத்தியரிடம் சிவனைப் பற்றிக் கேட்டபோது அகத்தியர் சிவபெருமான் தாழ் சடையன்,
புலித்தோல் அணிந்தவன், கங்காதரன் என்று கூறவில்லை. சிவன் சுத்த நிராமயமான ஜோதி என்கிறார். இதுவே இறைவனின் உண்மை நிலை. அவன் சுத்தன் ஏனெனில் அவனிடம் சத்துவம், ரஜஸ்
தமஸ் என்ற முக்குணங்கள் இல்லை, அவன் நிற்மலன்.
அவன் அசைவற்றவன், தன்னில் மூழ்கியிருப்பவன். அவன் ஜோதி உருவானவன், அவனுக்கு ஒரு குறிப்பிட்ட
உருவமில்லை ஆனால் அவன் அனைத்து உருவங்களாகவும் இருப்பவன். அவன் ஞானஜோதி!
காஷ்மீர
சைவமதத்தில் ஈஸ்வர பிரதியபிக்ஞா என்னும் நூல் சிவனைப் பற்றி விளக்கும்போது “சிவன்
எனது ஆத்மா, ஆதி சித்தன் என்னைத் தானாக, கர்த்தாவாகவும் ஞாதாவாகவும் காட்டியவன்.
அவன் இருப்பிடத்தை ஒருவர் காணவேண்டுமென்றால் தன்னையேதான்
சுட்டிக்காட்டவேண்டும்” என்று கூறுகிறது.
இந்தக் கருத்தில்தான் அகத்தியர் ஒரு தெளிந்த உள்ளத்தால் தானே பரமசிவன்
என்று காணமுடியும் என்கிறார்.
No comments:
Post a Comment