Verse 146
சொல்லுவான்
சிலவெழுதிக் கையில் ஈவான்
சுற்றமாய்
விரதமது இருக்கச் சொல்வான்
கொல்லுவான்
ஆடு பண்ணி கோழி தன்னை
கோதையர்க்கு
சமையல் மடம் சுற்றிப்பான்கேள்
மெல்லுவான்
வெறுவாயைச் சக்கரங்கள் போட்டு
மின்னே
வடை பரமானம் தூப தீபம்
கெல்லுவான்
பஞ்ச பாத்திரமும் வைத்துக்
கிருபையுடன்
பூரிப்பான் வஸ்து தானே
Translation:
He will say, he
will write some and give it
He will recommend
elaborate austerities
He will kill goat,
pig and chicken
He will circle the
kitchen of women
They will chew
empty mouth (talk without matter) drawing the cakra
Offering vada,
superior food, lamp and fragrance
He will dig. With sacred vessels for worship
He will feel proud
of eulogizing matter.
Commentary:
Agatthiyar says
that the expert mentioned in the previous verse will tell people that he knows all about yantra. He will draw them and give
it to them recommending elaborate worship rituals that include sacrificing animals such as goats, pigs and chicken. He will spend his time in the
kitchen focusing only on food. He will
engage in empty talk. He will offer an
array of foods to the cakra, make a big show of worship with appropriate sacred
vessels and feel very proud. All he is
doing is worshiping matter.
மேற்பாடலில்
கூறிய குரு பிறரிடம் தனக்கு சக்கரங்கள் வரையத் தெரியும் என்று கூறி அவற்றை வரைந்து மக்கள்
கையில் தருவான். அவர்களுக்கு விரிவான பூஜா
விதிகளைக் கூறி ஆடு, கோழி முதலியவற்றைப் படையல் இடவேண்டும் என்று கூறுவான். ஆனால் அவனது கவனம் இருப்பது உணவில் மட்டுமே. விஷயமே இல்லாமல் வெறும் வாயை மெல்லும் அவன் சக்கரங்களுக்கு
வடை, பாயசம், தூப தீபம் ஆகியவற்றைப் படைத்து பஞ்சபாத்திரம் உத்திரிணி ஆகியவற்றை
வைத்துக் கொண்டு விரிவாகப் பூஜைகளைச் செய்து தனது பெருமையில் திளைப்பான். ஆனான் அவன் வழிபடுவது ஒரு வஸ்துவைத் தான்
இறைவனை அல்ல.
No comments:
Post a Comment