Thursday 3 April 2014

132. Is Agatthiyar talking about black hole?

Verse 132
அருளான புலத்தியனே அறிவுள்ளோனே
அமைத்தபடி சிவன் செயலே அல்லா துண்டோ
இருளான தாய் தந்தை இருவர் ஒத்து
இன்பமாய் சேர்ந்தமைத்த வாழ்க்கை அப்பா
உருவாக அந்நேரம் இருவர் ஒன்றாய்
உள்ளம் அதில் நினைத்தபடி விளங்கலாச்சு
பொருளான பொருள் அப்பா இந்த வார்த்தை
புவியோர்கள் கர்ம தர்மம் புலம்புவாரே
Translation:
The graceful Pulatthiya!  The wise one!
Is there any action that is not Siva’s
The darkness, the mother and father, coming together
The life that was created in their bliss, son
At the time of creation they remained as one (samarasa)
The mind started functioning as wisedom
These words are the essence, son
People in the world will lament as karma and dharma.

Commentary:
Agatthiyar says that all the actions are  those of Siva only.  The darkness, the mother and father, Sakti and Siva in union, created life forms in their bliss and the mind started functioning as they pleased.  Without knowing this, people say that life occurred due to karma or dharma.

This is an interesting verse.  The darkness mentioned here makes one wonder whether Agatthiyar is referring to the concept of lives emerging from a black hole.  No one knows how life forms emerged from such a singlet state.  Agatthiyar is explaining it here as the action and inaction, Sakti and Siva, coming together, enjoying the bliss of that state and thus initiating creation.   This is a great phenomenon and Agatthiyar rightfully says the same in the last but one line.   Among the Siddhas Agatthiyar and Kakapujandar were said to exist even during the great deluge when the entire manifested universe dissolves and reaches the singlet state, the black hole.  Hence, his report is the most authentic description of creation.


உலகில் உயிர்கள் தோன்றியதற்குக் காரணம் சக்தியும் சிவனுமே. ஏனெனில் எல்லா செயல்களும் சிவனின் செயல்களே என்கிறார் அகத்தியர்.  உயிர்கள் தோன்றியதற்கு அவர் தரும் விளக்கம் விஞ்ஞானம் தரும் கறுந்துளை தத்துவமாக இருக்குமோ என்று தோன்ற வைக்கிறது.  இருளான சக்தியும் சிவனும் ஒத்தபோது அந்த இன்ப நிலையில் உயிர்கள் தோன்றின என்கிறார் அகத்தியர்.  இருள் என்பது கறுந்துளையோ?  சக்தியும் சிவனும் செயல் புரிதல் செயல் அடங்கிய நிலை என்ற நிலைகளைக் குறிக்கும்.  அந்த இரு நிலைகளும் சமமாக இருக்கும்போது,  அந்த இன்பத்திலிருந்து உயிர்கள் தோன்றின அவற்றின் தோற்றம் சிவனின் செயலே அதற்கு கர்மம் தர்மம் என்று விளக்கம் தருவது தவறு என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment