Saturday 5 April 2014

139. Drunkard yogi

Verse 139
மூச்சடக்கல்
நகை செய்தார் நற்குணந்தான் இல்லாதாலே
நாய் போல வீதியிலே சண்ணுண்டான்பார்
பகை செய்த பாவி இவன் கொடிய பாவி
பாவிகளைச் சேராதே இன்னங் கேளு
குகை செய்வோம் என்று சொல்லி மூச்சைக் கட்டி
குடும்போர்கள் குரு எனவே வணங்கு வான் பார்
இகை செய்த மூச்சடக்கி அப்பியாசத்தால்
என்ன பலன் என்ன பலன் என்னார் உண்டோ

Translation:
They laughed as he did not have any good qualities
He will be disgraced like a dog on the streets
He is a great sinner who created inmity
Do not associate with them, listen somemore
Saying that they will create as cave, holding the breath
He will salute with the family folks calling him Guru
With the practice of controlling the moving breath
What is the use, what is the use, is there any use?

Commentary:

Murder, drinking alcohol, coveting another’s wife, stealing and abusing one’s preceptor are considered the five grievious sins or panchamā pādhakangal.  Some scriptures say that associating with one who performs the above sins is also a heinous crime.  In this verse Agatthiyar is talking about a spiritual aspirant who is also a drunkard. 

Even if one is an expert of vasi yogam if his a drunkard all his efforts will go waste.  Hence, the Siddhas lay great emphasis on ethics and morals and advise that one should pursue them before any spiritual progress.   The drunkard whom Agatthiyar is talking about will be ridiculed by everyone.  Even if he practices breath control and the sadhana of raising the kundalini to ajna cakra (also called the cave) it is of no use. 


கொலை, களவு, மாற்றான் மனையை விரும்புதல், குரு நிந்தனை, குடி ஆகிய ஐந்தும் பஞ்சமா பாதகங்கள் எனப்படும்.  இப்பாடலில் அகத்தியர் ஒரு குடிகார யோகியைப் பற்றிக் கூறுகிறார்.  இந்த யோகி வாசி யோகத்தில் தேர்ந்தவனாக இருந்தும் பலனில்லை.  அவன் தனது குண்டலினி சக்தியை ஆக்ஞா வரை எழுப்பியும் பலனில்லை.  அவனது குடிப்பழக்கம் இவை அனைத்தையும் பலனற்றதாக்கிவிடும் என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த யோகி நாயைப் போல வீதியில் அலைவான், அவனுக்குப் பகைவர்களே மிஞ்சுகின்றனர்.  அத்தகைய மனிதனுடன் சேரவேண்டாம் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.  பஞ்சமா பாதகங்களைப் புரிபவர்களுடன் தொடர்பு கொள்பவரும் அத்தகைய பாவத்தைப் புரிகிறார் என்று நூல்கள் கூறுகின்றன.

இப்பாடலில் குகை என்பது ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கும்.  அதை சித்தர்கள் கருங்குகை, கல் கோட்டை என்று அழைக்கின்றனர்.

1 comment:

  1. "கொலையே களவு கள்காமம் பொய்கூறல்
    மலைவான பாதகமாம் அவை நீக்கித்
    தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோருகக்கு
    இலையாம் இவை ஞனானநதத்து இருத்தலே "
    -திருமந்திரம்

    திருமூலர் "கொலை,களவு,கள்,காமம்,பொய் கூறுவது" ஆகியவற்றையே பஞ்சமா பாதகம் எனக் கூறிப்பிடுகிறார்.குரு நிந்தை எங்கிருந்து வந்தது?.

    ReplyDelete