Tuesday, 1 April 2014

122. The "learned one" who shakes his head like a blind dog..

Verse 122
இடக்கண்
பிலுக்க இவன் இன்னொருவன் செய்கை கேளு
பேசுவான் சகல நூல் ஞானம் எல்லாம்
பலுக்குவான் அவன் கற்ற வித்தை எல்லாம்
பார்த்தோரை பிரமை செய்து வணங்கச் சொல்வான்
குலுக்குவான் பெரியோர்கள் வந்தாரானால்
குருட்டு நாய் தலை அசைத்தாப் போல சொல்வான்
மெலுக்கிலே வந்தாக் கால் இழுத்துக் கொள்வான்
மிஞ்சி வந்தால் வணங்கி நின்று தூஷிப்பானே

Translation:
He is a showman.  Listen to the action of another.
He will talk about all the books and knowledge
He will show off all the tricks he had learned
He will make those who see him get impressed and worship him
He will brag.  When great souls come
He will shake his head like a blind dog
When them near him with awareness, he will pull back his legs
If they come forward still, he will salute and insult.

Commentary:
Agatthiyar is describing another so-called spiritualist.  This person is well learned.  He can talk expertly about several books, philosophy and display all the tricks that he has learned.  He will impress those who hear him so much that they will worship him.  When great souls come to see him he will shake his like a blind dog shaking his head.  If they approach him to prostrate he will pull his leg back out of fear as if they will pollute him.  If they continue to come closer he will salute them and still insult them.

அகத்தியர் மற்றொரு ஆன்மீகப் பேர்வழியைப் பற்றிப் பேசுகிறார்.  இவர்கள் நன்கு படித்தவர்கள், பல நூல்களைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் விரிவாக பிறரைக் கவரும் வண்ணம் பேசக்கூடியவர்கள்.  இவர்கள் பேச்சைக் கேட்டவர்கள் இவர்களுக்கு மதிப்பளித்து வணங்குவர்.  இவர்களைக் காண பெரியோர்கள் வந்தால் குருட்டு நாயைப் போல தலையை ஆட்டிக் கொள்வர்.  அவர்கள் வணங்க முனைந்தால் தன்னை அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்பதைப் போல காலை பின்னே இழுத்துக்கொள்வர்.  அவர்கள் மேலும் முன்னே வந்தால் அவர்களைத் திட்டுவர்

No comments:

Post a Comment