Verse 121
உதவா சீஷன்
ஞானம்
அவர் உள்ளபடி அருளே செய்தால்
நாள்தோறும்
யான் அறிந்த சேதிக்கெல்லாம்
ஈனம்
இது நல்ல குரு போம் போம் என்று
இதுக்கேதான்
ஏழு முழமாக வந்தீர்
தானம்
என முன் கொடுத்த தனம் செண்ண சிலவும்
தந்து
விட்டுப் போம் என்றால் சண்ணுவார் பின்
ஊனம்
அவன் ஒரு நாளும் உதவா மாடு
ஒருநாளும்
திருநாள் போல் பிலுக்குத் தானே
Translation:
Useless disciple
When wisdom is
granted in his present state,
“This is useless compared
to all the things
I know
already/daily. What a guru you are!, Go, Go.
Did you come so
elaborately only for this?
All the things I
gave you as offerings and the expenses
Pay it and go,”he
will fight so.
He is maimed, he is
a useless cow, not useful ever,
Everyday is a
tumult, like a festival.
Commentary:
Agatthiyar is now
talking about a disciple who demands “money back guarantee”! When a true guru mentioned in the above verse
grants him wisdom at his current state, as is, he will complain saying, “What
you have taught is nothing new. It is
nothing compared to what I already know.
Only for this knowledge you came here pretending as a great soul is
it? Go, Go. Return all the things I gave
you as offering and pay back all the expenses I incurred on your behalf.” He will fight so. Agatthiyar calls such a person maimed, not
physically but mentally. He also calls
him a useless cow! Such a person will
only make a big show everyday as if it is a festival, displaying his so-called
spirituality and interest in wisdom to the whole world.
அகத்தியர்
இப்பாடல் திருப்தி இல்லை காசைத் திருப்பிக்கொடு என்று கேட்கும் ஒரு சீடனைப்
பற்றிப் பேசுகிறார் மேற்பாடலில்
குறிப்பிட்ட குரு இந்த சீடனுக்கு ஞானத்தை உபதேசித்தால் அவன், “நீர் ஒன்றும்
புதியதாக எனக்குக் கற்றுக்கொடுத்துவிடவில்லை.
இவை எல்லாம் எனக்கு முன்னமே தெரியும்.
இதைக் கற்றுக்கொடுக்கத் தான் நீர் பெரிய குரு என்ற பெயரில் வந்தீரோ, போம் போம். நான் இதுவரை உமக்கு தானமாக அளித்த
பொருட்களையும் செய்த செலவையும் திருப்பித் தந்துவிட்டுப் போம்,” என்று சண்டை
பிடிப்பார். அகத்தியர் அந்த சீடனை
ஊனமுள்ளவன், மனதில், என்றும் உதவாத மாடு என்றும் திட்டுகிறார். அவன் தினமும் திருவிழாவைப் போல அமர்க்களம்தான்
செய்கிறான்.
No comments:
Post a Comment