Saturday, 29 March 2014

115. "Insta Siddhi" the fools will say...

Verse 115
அறியாத மூடர்கள்தான் சொல்லும் வார்த்தை
அரை க்ஷணத்தில் சித்தி எனக்காக வென்பார்
குறியாத மூடனுடன் சேர்ந்த மூடன்
கூடியே சொல்வதென்ன குருட்டு மாடு
செறிதாகத் துறவறத்தில் பெரிதோ என்பான்
தேசத்தில் பல நூலும் படித்த மட்டை
கறியாமோ கடையில் வித்த காய்தான் மக்காள்
கழுதை அவன் அறியாமல் பினத்துவானே

Translation:
Only the ignorant fools say the words
“I attained siddhi in half a second”
The imbecile who joined the moronic fool
What has he to say?  The blind cow!
He will say, “Is there anything great in sanyasa?”
The much-read dullard
Will the vegetable sold in the store turn into a dish by itself?
Donkey! He will blabber without any knowledge.

Commentary:
Agatthiyar has used choice words to describe a fool and an imbecile who follows such as fool!  The first fool would say that he attained siddhi in an instant.  The other will follow him and vouch for it.  The second is not only a dumb cow but a blind one too!  He will dismiss sanyasa or detachment from worldly life as unnecessary.  Agatthiyar asks whether a vegetable present in the store will by itself turn into a dish for consumption. 
Some scholars interpret Sankara’s expression, “jnaanaan mokshaha” as to mean, “knowing the truth about everything from the scriptures will grant moksha”.  Jnana in this case is textual knowledge.  However, Ramanuja interpreted it as “bhakti roopaapanna jnanan mokshaha” that is, knowledge coupled with devotion will grant moksha.  Not mere textual knowledge but that knowledge put into practice (as devotion towards the divine) will grant moksha.  Agatthiyar in conveying the same idea through this expression.  Nothing can replace experience, not textual knowledge, not the upadesa heard from others.  Agatthiyar says that any words utter from such textual knowledge is only a donkey’s braying.


இப்பாடலில் அகத்தியர் வார்த்தைகளைத் தேடி எடுத்து படித்த முட்டாள்களைத் திட்டுகிறார்.  முதல் முட்டாள் தனக்கு “திடீர் சித்தி” கிட்டிவிட்டது என்பான்.  அவனைத் தொடரும் மற்றொரு முட்டாள் அதனை வழி மொழிவான்.  அவனைக் குருட்டு மாடு என்கிறார் அகத்தியர்.  அவன் முட்டாள் மட்டுமல்ல உண்மையைக் காணாக குருட்டு முட்டாளும் கூட.  அவன் துறவு, அதாவது உலகப்பற்றை விடுவது,தேவையற்றது என்பான்.  கடையில் வைக்கப்பட்டிருக்கும் காய் தானாகக் கறியாகுமா என்று அகத்தியர் கேட்கிறார்.  புத்தகத்தில் உள்ளதைப் படித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்தி அனுபவத்தில் கொண்டுவரவேண்டும்.  அப்போதுதான் இறையுணர்வு கிட்டும்.  சங்கரரின் வார்த்தைகளான “ஞானத்தால் மோட்சம்” என்பதைப் பலர் இறைவனைப் பற்றிய ஞானம் ஏற்பட்டாலே போதும் அதுவே மோட்சத்தை அளித்துவிடும் என்று பொருள்படுவதாகக் கூருவர். அதற்கு ராமானுஜர் “பக்தியுடன் சேர்ந்த ஞானம் மோட்சத்தை அளிக்கும்” என்று பொருள் கூறினார்.  அதாவது படித்ததை அனுபவமாகச் செயல்படுத்தினால்தான் மோட்சம் கிட்டும் என்றார்.  இந்தக் கருத்தையே அகத்தியர் இங்கு கூறுகிறார்.  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல வெறும் புத்தக அறிவு அனுபவத்தைக் கொடுக்காது.  அத்தகைய பேச்சு கழுதையின் கூவல்தான், பினாத்தல்தான் என்கிறார் அகத்தியர். 

2 comments:

  1. Guruve Sharanam...

    ReplyDelete
  2. In these days of insta everything it is funny read about insta siddhi!

    ReplyDelete