Monday 17 March 2014

87. How namacivaya becomes effective

Verse 87
சோறாச்சு தென்றுரைத்த வாறுக் கொக்கும்
சுகமாகச் சத்தி இல்லா அஞ்சினாலே
கூறாச்சு மந்திரங்கள் பதராய்ப் போச்சு
கோகோகோ நமசிவய எழுத்தே ஐஞ்சு
வீராச்சு இதினுடைய தேவி பீஜம்
வெளியாச்சு மௌன பஞ்சா க்ஷரத்தினாலே
வாறாச்சு இதுவல்லோ ஐஞ்செழுத்தின் செய்கை
மன மகிழ்ந்து புலத்தியனே மனதுள் காரே

Translation:
This is like saying that the rice got cooked into food
Due to the five that lack the sakthi, universal energy,
The mantras became chaff 
Ko!ko!ko!the five letters are namacivaya
It became valorous with the bija of Devi,
It became the supreme space by the silent panchakshara
It became six.  Isn’t this the action of the five letters?
Hold this happily within your heart, Pulatthiya!

Commentary:
Agatthiyar says that the fact that one has to face the consequences is like saying that the rice cast in the stove will get cooked.  One may interpret this statement in a different way.  It may also mean "when the soul is cast in the fire of kundalini it will definitely get cooked to the right consistency, ready to receive the wisdom!”  

Agatthiyar brings another important point here.  A mantra is made up of letters that do not have an inherent meaning.  They are called bhija akshara.  However they become functional, effective, only when the Shakti bhijam is added to them.  Shakti bhijam is Om, hreem, aim, kleem or sau.  Agatthiyar says that unless shakti bijam is added to the mantra it becomes chaff.    When the Devi bijam is added to it becomes the powerful, valorous mantra that is the supreme space.  Silent panchakshara is the sakthi state of the letters.  Sound consists of the four states, para, pashyanthi, madhyama and vaikari.  Para is the state of state which is pure energy.  Vaikari is the fully manifested sound.  Thus, silent panchakshara means its state of being pure energy.  

When pranava or any other shakti beejam such as aim, kleem, saum, hreem, shreem etc is added to namasivaya, it becomes six lettered mantra (aaru= six as well as river).  It carries the yogin towards wisdom like a river.


உலையில் அரிசியை இட்டால் அது சோறாக மாறாமல் இருக்காது என்பதைப் போல ஒரு செயலைச் செய்தால் அதன் பலனை அனுபவித்துத் தான் தீரவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த வரிக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூறலாம்.  ஆத்மாவைக் குண்டலினியின் அக்னியில் இட்டால் அது ஞானத்தைப் பெறுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறாமல் இருக்காது என்று அகத்தியர் கூறுவதாகவும் இவ்வரிக்குப் பொருள் கொள்ளலாம்.  இதை மேலும் விளக்கும் விதமாக அகத்தியர் எவ்வாறு ஒரு மந்திரம் சக்தியைப் பெறுகிறது என்று நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார்.  சக்தியும் சிவனும் சேர்ந்த மந்திரமே பயனளிக்கக்  கூடியது.  சக்தி பீஜம் இல்லையேல் மந்திரம் பதராகிவிடும் என்கிறார் அகத்தியர்.  ஸ்ரீம், க்லீம், ஹ்ரீம், சௌம்,போன்ற பல சக்தி பீஜங்கள் உள்ளன.  நமசிவாய என்னும் மௌன பஞ்சாட்சரம் சக்தி பீஜம் சேர்ந்தபோது பரவெளியாக மாறுகிறது, செயல்பாடுடையதாகிறது, ஆறாகிறது..  யோகிகளை ஞானத்தை நோக்கி அடித்துச் செல்லும் ஆறாகிறது.  இதுவே ஐந்தெழுத்து மந்திரத்தின் செயல் என்று அகத்தியர் கூறுகிறார்.  திருமூலர் தமது திருமந்திரம் நாலாம் தந்திரத்தில் பஞ்சாட்சரத்தின் பல்வேறு பிரயோகங்களைக் கூறுகிறார்.  

2 comments:

  1. Sir, thank you for the posting. The meaning is not quite clear. Is it that "Aum Namasivaya" is more effective than mere "Namasivaya"? Also, one has never come across "Hrim Namasivaya" or "Shreem Navasivaya" or "Kleem Navasivaya". Please enlighten. Thank you,

    ReplyDelete
  2. It is the shakti beejam along with namacivaya that is effective. The beejam may be om, kleem, shreem, hreem etc depending on the context. It is the sakti and the siva component which makes it functional.
    Thank you for reading the verse and your comment

    ReplyDelete