Sunday 23 March 2014

97. Visuddhi cakra- 2, How to see the dance of Maheswara and Maheswari

Verse 97
பாராறு இதழிலும் அக்ஷரமும் உண்டு
பரிவான நடுவதனில் வகாரம் உண்டு
காராறு மயேச்வரனும் மயேச்வரியும் அங்கே
கைகலந்து இருப்பார்கள் காணப்போமோ
ஆராறும் என்குருவே வாசம் அப்பா
அப்பன் அங்கே  நிற்தமிடும் மகிமை தன்னைச்
சீராகச் செவி அடைத்துக் கண்ணை மூடி
தீமூட்டு வங்கென்றே நெருப்பை மூட்டே

Translation:
See, there are letters in all the six petals
In the merciful center there is vakāra
Mahesvara and Mahesvari, see them there
They will remain holding hands, we will see
This is the place where my guru resides, son
The glory of the father’s dance there
Properly plugging the ears and closing the eyes
Light the fire, the fire of vang

Commentary:
This verse is a continuation of the previous one that describes the vishuddhi cakra.  Agatthar tells that there are akshara or Sanskrit  letters on all the petals of the lotus and in the middle is the letter va of the five letter mantra namacivaya.  He says that the deities at this cakra are Maheswara and Maheswari who remain there holding hands.  He says that this is the site of his guru.  The ajna is generally considered as the site of the guru.  Agatthiyar is giving a different view here.  He says that one will be able to experience the dance of the father- the Divine, at this site by plugging the ears, closing the eyes and lighting the fire with the sound ‘vang’.


விசுத்தியைப் பற்றிக் கூறும் தொடர்ச்சியான இப்பாடலில் அகத்தியர் விசுத்தி சக்கரத்தில் உள்ள இதழ்களில் அக்ஷரங்கள் உள்ளன என்றும் மத்தியில் வகாரம் உள்ளது என்றும் கூறுகிறார்.  இந்த சக்கரத்தில் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் கைகோர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்களது நடனத்தைக் காணவேண்டும் என்றால் ஒருவர் காதைஅடைத்து கண்ணை மூடி உள்ளுக்குள் வங் என்ற சத்தத்தின் மூலம் தீயை மூட்டவேண்டும் என்கிறார்.  அவர் விசுத்தி சக்கரத்தில் தனது குரு வாசம் செய்வதாகக் கூறுகிறார். பொதுவாக ஆக்ஞா சக்கரமே குருவின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.  அகத்தியர் இங்கு வித்தியாசமான ஒரு கருத்தை நமக்கு வழங்குகிறார்.

No comments:

Post a Comment