Friday, 7 March 2014

Cattaimuni-1

In verse 66 Agatthiyar described the technique that Cattaimuni followed to attain wisdom.  The following write up based on by K.R. Arumugam’s short note in the book The Yoga of the 18 Siddhas An Anthology (ed. T.N. Ganapathy) will help those of us who wishes to know more about Cattaimuni.

Cattaimuni

Cattaumuni was the son of a Sinhala prostitute.  After his birth his mother came to Tamil region along with a Tamilian whom she had accepted as her husband.  They were working as farm laborers.  When there was no work Cattaimuni was helping his parents by begging at the temple precincts.  This is mentioned in Agastyar 12000. 
Cattaimuni was also involved in family life for some time.  One day he met a north Indian sanyasin wearing conch around his neck.  Attracted by him Cattaimuni left with him.  Agatthiyar reports that after getting initiated by that sanyasi Cattaimuni wandered all over the world.  Seeing his thirst for wisdom the sanyasi directed him to Bogar.
Cattaimuni lived with Bogar as his disciple.  While he was living so he met Bogar’s other disciples like Konganar and Karuvurar.  It is said that he had also taken deeksha from Agatthiyar.  


It is said that Cattaimuni wrote his books in ordinary language which anyone could understand.  This angered Tirumular and Romarishi who tore up his works.  Fearing that Cattaimuni may destroy Romarishi’s works out of revenge he handed over his work to Kakapujandar.  Kakapujandar preserved Romarishi’s works and gave them to Agatthiyar.  The Siddhas then requested Lord Siva to ban Cattaimuni’s works.  It said that Lord Siva ordered that the works of Cattaimuni be kept and preserved in a cave.
It is said that Cattaimuni used to visit Kailaya ofter.  Finding the chilly weather of Mount Kailash unbearable Cattaimuni used to wear a woolen shirt.  Hence, he got the name Kailaya Kambaliccattaimuni- the saint who wore wollen shirt.


There are two versions regarding the place of Cattaimuni’s Samadhi.  Some say that it is in Srirangam and that he is a Vaishnava.  Others say that it is Sirkazhi and that this is the reason for the Lord of Sirkazhi being known as Cattanathar.  Bogar’s Janana Sagaram 557 vouches for this claim. 

Those who claim that Cattaimuni is a Vaishnava have a story to justify their claim.
During his wandering days once Cattaimuni reached the outskirts of Thiruvarangam (Srirangam).  He wanted to visit the temple and worship Lord Ranganatha.  However the temple closed before he could reach there.  Standing in front of the temple Cattaimuni shouted the name of the Lord thrice. The ornaments of the Lord adorned the Siddha.  When the people saw this they thought that he had stolen the ornaments.  They complained to the king.  When questioned, the Siddha told that king that the Lord had given him the ornaments as a gift.  The king then took him to verify this claim.  When the temple doors opened the ornaments were found on the Lord.  The king realized his mistake and understood that the Lord was trying to show that he was none other than the Siddha. 


Some recount the above story with a slight modification to explain the power of the planets.  It seems when Cattaimuni reached the temple precinct the priests told him to go away as the temple was closed.  The Siddha told them that his planetary positions are such that he will be granted the audience of the Lord that day.  Saying this he did not leave the place, but sat there calling out the lord’s name.  As said above, the Lord’s ornaments adorned his body.  The king made the priests open the temple doors for verification and thus the Siddha was granted the lord’s vision and was also honored by the king as a great soul. When he was questioned about why he earned the title of a thief the Siddha said it seems that his 7 ½ years of Sani was the cause for this misfortune.
Some say that Cattaimuni merged with Lord Ranaganatha and he still lives with Him.

We will enjoy a summary of his compositions Paripuranam 12 and Samadhi 12 in the next post.

முந்தைய பாடலில் அகத்தியர் சட்டை முனி எவ்வாறு ஞானத்தை அடைந்தார் என்று கூறினார்.  சட்டைமுநியைப் பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.  இந்த விவரங்கள் பதினெட்டு சித்தர்களின் யோகம் என்ற ஆங்கில நூலில் திரு. கே. ஆர். ஆறுமுகம் அவர்கள் எழுதி (திரு த.நா. கணபதி அவர்கள் ஆசிரியர்) கட்டுரையிலிருந்து தரப்படுகிறது.
சட்டைமுனி
சட்டை முனி சிங்களைத்தில் இருந்த ஒரு பரத்தையின் மகன்.  அவர் பிறந்த பிறகு அவரது தாய்  ஒரு தமிழனுடன் தமிழ்நாட்டுக்கு வந்தார்.  அவர்கள் குடியானவர்களாக வாழ்ந்துவந்தனர்.  விவசாய வேலை இல்லாதபோது சட்டைமுனி கோயிலில் பிச்சை எடுத்து அவர்களுக்கு உதவினார்.  இந்த விஷயம் அகத்தியர் 12000 என்ற நூலில் காணப்படுகிறது.
சட்டைமுனி குடும்ப வாழ்க்கையில் சில காலம் ஈடுபட்டிருந்தார்.  ஒருநாள் வட இந்தியாவிலிருந்து வந்த ஒரு சன்னியாசியை சந்தித்தார்.  அவரால் கவரப்பட்ட சட்டைமுனி அவருடன் வீட்டை விட்டுவிட்டு அவரைத் தொடர்ந்து சென்றார்.  அந்த சந்நியாசியிடமிருந்து தீட்சை பெற்ற சட்டைமுனி, உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தார்.  அவரது ஞான ஆர்வத்தைப் பார்த்த சந்தியாசி, அவரை போகரிடம் போகுமாறு கூறினார்.
சட்டைமுனி போகரின் சீடராக சில காலம் வாழ்ந்துவந்தார்.  அப்போது அவர் போகரின் சீடர்களான கொங்கணர் கருவூரார் ஆகியோரை சந்தித்தார்.  அவர் அகத்தியரிடமிருந்தும் தீட்சை பெற்றார் என்று சிலர் கூறுவர். 
அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் சட்டைமுனி தனது நூல்களை எழுதினார்.  அதனால் கோபமடைந்த ரோமரிஷியும் திருமூலரும் அவற்றைக் கிழித்து எறிந்தனர்.  பழிவாங்கும் உணர்வினால் சட்டைமுனி தனது நூல்களைக் கிழித்துவிடுவார் என்று பயந்த ரோமரிஷி தனது நூல்களை காகபுசண்டரிடம் கூறினார்.  காகபுசண்டர் அந்த நூல்களைக் காப்பாற்றி அகத்தியரிடம் தந்தார்.  சட்டைமுனியின் நூல்களைத் தடைசெய்ய வேண்டும் என்று சிவபெருமானிடம் சித்தர்கள் முறையிட்டனர்.  சட்டை முனியின் நூல்களை ஒரு குகையில் பாதுகாக்குமாறு சிவபெருமான் கூறினார். 
சட்டைமுனி அடிக்கடி கைலாயம் செல்வாராம்.  அங்கே மிகக் குளிராக இருந்ததனால் அவர் கம்பளிச்சட்டை ஒன்றை அணிந்து கொள்வாராம்.  அதனால் அவர் கைலாய சட்டைமுனி என்ற பெயரைப் பெற்றார்.

சட்டைமுனியின் சமாதி எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.  சிலர் அவர் ஒரு வைணவர் என்றும் அவரது சமாதி திருவரங்கத்தில் இருக்கிறது என்பர்.  வேறு சிலர் அவரது சமாதி சீர்காழியில் இருக்கிறது அதனால்தான் சீர்காழியில் உள்ள இறைவர் சட்டநாதர் என்று அழைக்கப் படுகிறார் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.  இந்த கருத்தை போகர் ஜனனசாகரம் வழிமொழிகிறது.
ஒருமுறை சட்டைமுனி திருவரங்கத்தை அடைந்தார்.  அரங்கநாதரை தரிசிக்க அவருக்கு ஆசை.  ஆனால் அவர் செல்வதற்குமுன் கோயில் மூடப்பட்டுவிட்டது.  கோயிலின் முன் நின்றுகொண்டு அவர் இறைவனின் பெயரை மூன்று முறை அழைத்தார்.  கடவுளின் ஆபரணங்கள் சட்டைமுனியின் உடலை அலங்கரித்தன.  அதைப் பார்த்த மக்கள் சட்டைமுனி அந்த நகைகளைத் திருடிவிட்டார் என்று அரசனிடம் முறையிட்டனர்.  அரசனின் விசாரித்தபோது சட்டைமுனி அந்த நகைகளை இறைவன் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் என்று அவர் கூறினார்.  அரசனும் கைகளும் கோயில் கதவைத் திறந்தபோது அந்த நகைகள் இறைவனின் மேல் இருப்பதைப் பார்த்தனர்.  அரசன் அப்போது தனது தவறை உணர்ந்தான்.  சித்தரும் கடவுளும் வேறல்ல என்பதை உணர்ந்தான்.

சிலர் இந்தக் கதையை கோள்களின் சக்தியை விளக்கும் விதமாகக் கூறுகின்றனர்.   ஒரு முறை சட்டைமுனி கோயிலை அடைந்தார்.  பூசாரிகள் கதவை அடைத்துவிட்டதாகக் கூறினார்.  ஆனால் கோள்களின் நிலை தனக்கு இறைவனின் தரிசனம் கிட்டும் என்று கூறுவதாக சித்தர் கூறிவிட்டு கோயில் வாசலில் அமர்ந்து இறைவனின் பெயரைக் கூவினார்.  மேலே கூறியதைப் போல நகைகள் சித்தரை அலங்கரித்தன.  அரசன் இவரை விசாரணை நடத்தினான்.  அப்போது சட்டைமுனிக்கு ஏழரை நாடு சனி நடந்துகொண்டிருந்தது. 

சட்டைமுனி திருவரங்கனின் ஜோதியில் கலந்தார் என்று சிலர் கூறுகின்றனர். 

No comments:

Post a Comment