Verse
93
கண்டாரே
என்மகனே புலத்தியா கேள்
கருத்துகந்து
ஆனாகத்தில் முக்கோணத்துள்
நிண்டாரே
சீகாரம் அப்பீடம் அப்பா
நெருப்பான
ருத்திரனும் ருத்திரியும் ஆக்க
கொண்டேது
ருத்திரன் தான் சூக்ஷத்தோடு
குறையாமல்
சிங் கென்றும் மாட்டி ஊது
தண்டேறி
வாசியது மேலே சாடி
தருகுமே
நவரசமும் உண்டு தேறே
Translation:
They
saw. My son Pulatthiya! Listen
In
the anāhata, pleasant for the mind, within the triangle
They
remained, it is the dais of cikāra
With
the firesome Rudra and Rudri
The
Rudra remained subtly
Blow
it full with ‘cing’
The
vāsi will climb up the stem
And
grant the navarasa, consume it and become an expert.
Commentary:
This
verse describes the anāhata cakra or the heart cakra. This cakra is depicted as
a lotus with twelve petals. The yantra
in the center is two overlapping intersecting triangles. One triangle faces up symbolizing Siva and
the other faces down symbolizing Shakti.
When these two forces are in harmony a balance is attained. The presiding deity of this cakra is Rudra
and his consort Rudri. Agatthiyar says
that this is the site of the letter ‘ci’ of namacivaya. He advises Pulatthiyar to direct his prana
upwards with the sound of ‘cing’ when the vāsi or vital air will climb up
through the sushumna nadi. This will
grant the navarasa or the nine emotions.
www.kamakotimandali.com
gives the following description about the navarasa and their connection with
breath.
The
nine emotions are :
1.shringara-
delight- the breath starts at the lower abdomen, rises up slowly and gradually
and flows upto the center of the skull or the sahasrara.
2.
adbhuta- wonder- breath starts at the lower abdomen, rises up quickly and
constantly and is expelled through the nostrils. This type of breathing is accompanied by
kumbaka where the breath is held for a short duration during inhalation or
exhalation.
3.
hasya- laughter- breath rises from the lower abdomen to the center of the chest
and breaks into an outer flow accompanied by shaking of the chest.
4.
karuna- mercy- breath rises from the muladhara cakra to the anahata where it is
compressed and restricting during both the upward and downward movements.
5.
raudra- anger- breath rises from lower abdomen to vishuddhi where it is
strongly compressed and exhaled through the eyes forcibly.
6.
Bheebatsa- odious- breath rises from the lower abdomen rapidly and expelled
forcefully through both nostrils while shrinking the entire face.
7.
veera- valorous- breath rises strongly but consistently from manipuraka upto
the shoulders where it is compressed and distributed all across the back.
8.
bhayaanaka- fearful- breath rises firmly and speedily from muladhara to
vishuddhi at which point it is pushed down and compressed.
9.
shaantha- peaceful- breath rises silently and in an unbroken fashion from
muladhara upto sahasrara. When it reach
the crown the eyes are stopped from seeings, ears hearing, nose from smelling
and mouth from talking. The eyes are
brought closer to their inner periphery gazing softly at the ajna cakra.
இப்பாடல்
அனாஹத சக்கரத்தை விளக்குகிறது. இது
பன்னிரண்டு இதழ்களைக் கொண்ட தாமரை மலராக வரையப்படுகிறது. அதனுள் இரு முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக
உள்ளன. மேல்நோக்கியுள்ள முக்கோணம்
சிவனையும் கீழ் நோக்கியுள்ள முக்கோணம் சக்தியையும் குறிக்கும். மேல்பார்த்த முக்கோணம் ஒருவரது விழிப்புணர்வு
மேல் நிலைக்குச் செல்வதையும் கீழ் நோக்கிய முக்கோணம் ஒருவரது விழிப்புணர்வு கீழே
உலகைக் குறித்ததாகச் செல்வதைக் குறிக்கும்.
இந்த இரு முக்கோணங்களும் சமநிலையில் இருக்கும்போது மனதில் ஒரு சமநிலை
நிலவுகிறது.
அனாஹத
சக்கரத்தின் அதிபதி ருத்திரனும் ருத்திரியும் என்று அகத்தியர் கூறுகிறார். மேலும்,
இந்த சக்கரம் சி என்னும் எழுத்தின் பீடம் என்றும் அவர் கூறுகிறார். புலத்தியரை இந்த சக்கரத்தின் ஊடே பிராணனை சிங் என்ற சப்தத்துடன் மேலே ஏற்றுமாறும்
அகத்தியர் கூறுகிறார். அப்பொழுது பிராணன்
சுழுமுனை நாடியின் ஊடே எழுந்து நவரசங்களையும் தரும்.
காமகோடி
மண்டலி என்னும் தளம் மூச்சுக்கும் நவரசங்களுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது:
1.
சிருங்காரம்-
இன்பம்- மூச்சு அடிவயிற்றிலிருந்து தொடங்கி மெதுவாக மேலே ஏறி சஹஸ்ராரத்தை அடையும்.
2.
அத்புதம்-
மூச்சு அடிவயிற்றில் தொடங்கி விரைவாகவும் தொடர்ந்தும் எழுந்து மூக்கினால்
வெளிவிடப்படுகிறது. இந்த சுவாசத்தில்
உள்மூச்சின்போதோ வெளிவிடும்போதோ இடையில் ஒரு சிறிது நேரம் கும்பகம் அல்லது மூச்சற்ற
நிலை நிலவுகிறது.
3.
ஹாஸ்யம்-
சிரிப்பு- அடிவயிற்றிலிருந்து எழுந்து மார்பின் மத்தியை அடைந்து வெளி மூச்சாக
சிரிப்புடன் சேர்ந்து தோன்றுகிறது.
4.
கருணை-
மூலாதாரத்திலிருந்து எழும் மூச்சுஅனாஹதம் வரை சென்று அங்கே மேலும் கீழும்
அழுத்தப்படுகிறது.
5.
ரௌத்ரம்-
கோபம்- மூச்சு அடிவயிற்றிலிருந்து தோன்றி விஷுத்தியை அடைந்து அங்கே தீவிரமாக
அழுத்தப்பட்டு கண்களின் வழியே கடுப்புடன்
வெளிவிடப்படுகிறது.
6.
பீபத்சம்-
அருவருப்பு- அடிவயிரிலிருந்து விரைவாக எழும் மூச்சு இரு மூக்குத் துவாரங்களின்
மூலமும் விசையுடன் முகத்தைச் சுருக்கியவாறு வெளிவருகிறது.
7.
வீரம்-
மூச்சு மனிபூரகத்திலிருந்து வலுவுடன் தொடர்ந்து எழுந்து தோள்களை அடைகிறது. அங்கே அது அழுத்தப்பட்டு உடலின் பின்பகுதியில்
பரத்தப்படுகிறது.
8.
பயானகம்-
பயம்- மூலாதாரத்திலிருந்து வலுவுடனும் விரைவாகவும் மூச்சு எழுந்து விஷுத்தியை
அடைந்து அங்கிருந்து அழுத்தத்துடன் வெளியே தள்ளப்படுகிறது.
9.
சாந்தம்-
அமைதி- மூச்சு அமைதியாக சத்தமற்று தொடர்ந்து மூலாதாரத்திலிருந்து எழுந்து
சஹஸ்ராரத்தை அடைகிறது. அப்போது கண்கள்
காண்பதில்லை, மூக்கு முகர்வதில்லை, வாய் பேசுவதில்லை, காதுகள் கேட்பதில்லை. பார்வை மேல்நோக்கி ஆக்ஞை சக்கரத்தைக்
காண்பதாகக் குவிகின்றது.
No comments:
Post a Comment